விருபாக்ஷா திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3.5/5.

நடிகர் நடிகைகள் :- சாய் தரம் தேஜ், சம்யுக்தா மேனன், சுனில், ராஜீவ் கனகலா, RMP டாக்டர், ரவிகிருஷ்ணா, கோமதம், கமல் காமராஜு, சாய் சந்த், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- கார்த்திக் வர்மா தண்டு.

ஒளிப்பதிவு :- ஷாம்தத் சைனுதீன்.

படத்தொகுப்பு :-  நவின் நூலி.

இசை :- பி.அஜனீஷ் லோக்நாத்.

தயாரிப்பு நிறுவனம் :-  ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ்.

தயாரிப்பாளர் :- B.V.S.N பிரசாத் & சுகுமார்.

ரேட்டிங் :- 3.5./ 5.

கிராமத்தில் உள்ள ஒரு பிராமண குடும்பம் கிராமத்தில் உள்ள மக்களுக்கு எதிராக மந்திரம் செய்து நரபலி கொடுக்கிறார்கள் என நினைத்து ஊர் மக்கள் அந்த பிராமண குடும்பத்தை உயிரோடு மரத்தில் கட்டி வைத்து கொளுத்தி விடுகிறார்கள்.

அந்த கிராமத்தில் பிறந்து   நகரத்தில் வசிக்கும் அந்த ஊர் பெண்மணி ஒருவர் தமக்கு ஊரில் இருக்கும் சொத்து ஒன்றை பள்ளிக் கூடம் கட்ட தானம் அளிக்க தன் தாய் பிறந்த சொந்த கிராமத்திற்கு கதாநாயகன் சாய் தரம் தேஜ் வருகிறார்கள்.

அந்த கிராமத் தலைவரின் மகளான கதாநாயகி சம்யுக்தாவை கண்டவுடன் கதாநாயகன் சாய் தரம் தேஜ் காதல் கொள்கிறார்.

அந்த ஊரில் இருப்பவர்கள் அடுத்தடுத்து சிலர் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

தீய சக்தியால் தான் இதுபோன்ற இறப்புகள் ஏற்படுகின்றன என கூறும் கோவில் பூசாரி, ஊரையும், கோவிலையும் மந்திரக் கட்டு கட்டினால் மட்டுமே இது போல் இழப்புகள் நடக்காது.

ஆனால், அந்த மந்திர கட்டையும் மீறி அந்த கிராமத்தில் மர்ம மரணங்கள் தொடர்ந்து நடக்கிறது.

அது பற்றி கதாநாயகன் சாய் தரம் தேஜ் விசாரிக்கையில் வெளியூர் இளைஞனைக் காதலித்த அந்த கிராமத்தில் உள்ள பெண் முதலில் தற்கொலை செய்து கொள்ள அவளைக் கடைசியாக உயிருடனோ, பிணமாக முதலிலோ பார்த்த நபர்  தற்கொலை செய்து கொள்கின்றனர்.

அந்த மர்ம மரணத்தின் பின்னணியை கண்டுபிடிக்கும் முயற்சியில் கதாநாயகன் சாய் தரம் தேஜ் பல இறப்புகளின் ஆதாரங்களை கண்டுபிடிக்க போராடிக் கொண்டிருக்கிறார்.

அதன்பிறகு கதாநாயகன் சாய் தரம் தேஜ் ஆதாரங்களை கண்டுபிடிக்கிறாரா! கண்டுபிடிக்கவில்லையா? என்பதுதான் ‘விரூபாக்‌ஷா’ திரைப்படத்தின் மீதி கதை.

இந்த விருபாக்ஷா திரைப்படத்தில் கதாநாயகனாக சாய் தரம் தேஜ் நடித்திருக்கிறார்.

கதாநாயகன் சாய் தரம் தேஜ் நடிப்பு மிகவும் இயல்பாக உள்ளது.

ஆக்ஷன், சென்டிமென்ட், காதல் காட்சிகளில் மிகவும் இயல்பான யதார்த்த நடிப்பை கொடுத்து பாராட்டுக்களை பெறுகிறார் கதாநாயகன் சாய்தரம் தேஜ்.

இந்த விருபாக்ஷா திரைப்படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா நடித்திருக்கிறார்..

கதாநாயகி சம்யுக்தா முதல் பாதியில் அப்பாவி பெண்ணாகவும், இரண்டாவது பாதியில் யாருமே எதிர்பார்க்காத மிகப்பெரிய அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுகிறார்

கிளைமாக்ஸ் காட்சிகளில் கதாநாயகி சம்யுக்தா மந்திர தந்திர செயல்களில் மிகவும் அற்புதமாக எடுத்துள்ளார்.

ஊர் தலைவர் கதாபாத்திரத்தில் வரும் ராஜீவ் கனக்கலா, மருத்துவர் கதாபாத்திரத்தில் வரும் பிரம்மாஜி, அகோரி கதாபாத்திரத்தில் வரும் அஜய், சுனில், பூசாரி கதாபாத்திரத்தில் வரும் சாய் சந்த், பைரவாவாக வரும் ரவிகிருஷ்ணா என திரைப்படத்தில் தோன்றும் பல கதாப்பாத்திரங்கள் அவர்களின் பணியை சரியாக செய்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற சுனில், RMP டாக்டர், ரவிகிருஷ்ணா, கோமதம், கமல் காமராஜு, அற்புதமாக அவரவர் கதாபாத்திரத்தில் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சம்ஹத் சைனுதீனின் ஒளிப்பதிவு  நிகழ்வுகளை நம்ப வைத்துவிட்டார்.

ஒளிப்பதிவாளர் சம்ஹத் சைனுதீனின் ஒவ்வொரு காட்சியிலும் அவருடைய உழைப்பு தெரிகிறது.

இசையமைப்பாளர் அஜனீஷ் லோகநாத்தின் திகில் கலந்த கதைக்கு பின்னணி இசை அருமை என்றால் சொல்லாமலே பாடல் அற்புதமாக உள்ளது.

அந்தப் பாடல் காட்சி ஒரு நேரடித் தமிழ் திரைப்படத்தைப் பார்த்த உணர்வைத் தருகிறது.

ரசிகர்களை முழுக்க திகிலில் ஆழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் திரைப்படத்தை இயக்கி ரசிகர்களை கவர்ந்துள்ளார் இயக்குனர் கார்த்திக் வர்மா தண்டு.

மொத்தத்தில் விருபாக்ஷா திரைப்படம் மிக அருமை.