ஒயிட் ரோஸ் திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- கயல் ஆனந்தி, ஆர்.கே.சுரேஷ், விஜித், ரூசோ ஸ்ரீதரன், பேபி நக்ஷத்ரா, சசி லயா, சுழியன் பரணி, ரித்திகா சக்ரவர்த்தி, ஹாஷின், தரணி ரெட்டி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- கே.ராஜசேகர்.
ஒளிப்பதிவாளர் :- வி. இளையராஜா.
படத்தொகுப்பாளர் :- கோபிகிருஷ்ணா.
இசையமைப்பாளர் :- சுதர்ஷன்.
தயாரிப்பு நிறுவனம் :- பூம்பாறை முருகன் புரெடக்ஷனஸ்
தயாரிப்பாளர் :- என்.ரஞ்சனி.
சென்னையில் அடுத்தடுத்து பாலியல் தொழிலாளிகளை அழைத்துச் சென்று கொடூரமாக கொலை செய்யும் வில்லன் ஆர்.கே.சுரேஷ் கொலை செய்து வருகிறார்.
வில்லன் ஆர்.கே. சுரேஷ் காவல்துறையினர் ஒரு பக்கம் வலை வீசி தேடி வருகிறது.
சென்னையில் இருக்கும் கதாநாயகி ஆனந்தியின் கணவர் மனைவி குழந்தையை பார்ப்பதற்காக வெளிநாட்டில் இருந்து வந்த கதாநாயகி ஆனந்தியின கணவர் கதாநாயகன் ஆனந்திக்கு பர்த்டே என்பதால் வெளியில் சென்று விட்டு குழந்தையுடன் வண்டியில் செல்லும் பொழுது, காவல்துறையினர் தவறுதலாக கதாநாயகி ஆனந்தியின் கணவரை சுட்டு விடுகிறார்கள்.
கணவனை இழந்த கதாநாயகி ஆனந்தி, மிகவும் கஷ்டத்தில் இருக்கும் தன் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பாலியல் தொழிலாளி வேலைக்கு செல்கிறார்.
பாலியல் தொழிலாளிகளை அழைத்துச் சென்று கொடூரமாக கொலை செய்யும் வில்லன் ஆர்.கே.சுரேஷிடம், சிக்கிக்கொள்ளும் கதாநாயகி ஆனந்தி, வில்லன் ஆர்.கே.சுரேஷிடம், இருந்து தப்பித்தாரா? தப்பிக்கவில்லையா? என்பதுதான் இந்த ஒயிட் ரோஸ் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ஒயிட் ரோஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக ஆனந்தி நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் ஆனந்தி, வழக்கம் போல் மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தாலும், ஒரு குழந்தைக்கு அம்மா என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு குழந்தை முகத்தோடு இருக்கிறார் ஆனந்தி.
சைக்கோ கொலையாளி ஆர் கே சுரேஷிடம் சிக்கிக்கொண்டு தப்பிக்க போராடும் காட்சிகளில் தனது நடிப்பு மூலம் பயம் மற்றும் பதற்றத்தை மிக அருமையாக நடித்து இருக்கிறார்.
சைக்கோ கொலையாளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ் வசனம் பேசாமல் சைக்கோவாக மிக அருமையாக நடித்திருக்கிறார்.
சைக்கோ கொலையாளி கதாபாத்திரத்திம் என்றாலும், அவருக்கான வாய்ப்பு என்னவோ மிக குறைவு தான் இருக்கிறது.
அதே நேரத்தில், இளம் வயது சைக்கோ கொலையாளி ஆர்.கே.சுரேஷாக நடித்திருக்கும் பரணிக்கு நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருந்தும், அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் கோட்டை விட்டிருக்கிறார் என்பதுதான் உண்மை.
கயல் ஆனந்தியின் கணவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜித், காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரூசோ ஸ்ரீதரன், காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சசி லயா, ரித்திகா சக்ரபோர்த்தி, ஹசின், தரணி ரெட்டி என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதையோட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் பயன்பட்டிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் வி.இளையராஜாவின அ ஒளிப்பதிவு மிக அருமையாக கையாண்டு இருக்கிறார்.
இசையமைப்பாளர் சுதர்சனும் தங்கள் இசை மற்றும் பாடல்கள் பிண்ணனி இசை அனைத்தும் அருமை.
தமிழ் திரைப்பட உலகில் வெளியாகும் சைக்கோ க்ரைம் திரில்லர் திரைப்படங்களை, எதாவது ஹாலிவுட் உள்ளிட்ட படங்களுடன் ஒப்பிட்டோ அல்லது அதன் பாதிப்பு என்று சொல்வார்கள்.
இயக்குனர் கே.ராஜசேகர் திரைப்படத்தின் முதல் காட்சியிலேயே இது ஏற்கனவே வந்த ஒரு தமிழ்ப் திரைப்படத்தின் பாதிப்பு என்பதை புரிய வைத்துவிடுவதோடு, அடுத்து என்ன நடக்கப் போகிறது? என்பதை திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் கணிக்கும்படியாக இருக்கிறது.
மொத்தத்தில், இந்த ‘ஒயிட் ரோஸ்’ திரைப்படம் சுமார்.
ரேட்டிங் 1.75./5











