செவ்வாய்க்கிழமை திரைவிமர்சனம் ரேட்டிங்:- 3.25/5.
நடிகர் & நடிகைகள் :- பாயல் ராஜ்புத், ஸ்ரீதேஜ், அஜ்மல் அமீர், சைதன்ய கிருஷ்ணா, அஜய் கோஷ், லக்ஷ்மன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- அஜய் பூபதி.
ஒளிப்பதிவாளர் :- தாசரதி சிவேந்திரா.
படத்தொகுப்பாளர் :- குல்லப்பள்ளி மாதவ் குமார்.
இசையமைப்பாளர் :- அஜனீஷ் லோக்நாத்.
தயாரிப்பு நிறுவனம் :- முத்ரா மீடியா ஒர்க்ஸ்- ஏ கிரியேட்டிவ் ஒர்க்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- சுவாதி குணபதி -எம் சுரேஷ் வர்மா- அஜய் பூபதி.
ரேட்டிங் :- 3.25/ 5.
மகாலக்ஷ்மிபுரம் எனும் கிராமத்தில் மர்மமான முறையில் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த கிராமத்தில் ஒரு வீட்டு சுவற்றில் இந்த ஊரில் உள்ளவர்களின் கள்ளத்தொடர்பில் இருக்கும் நபர்களின் இருவர் பெயரை யாரோ இறப்பதற்கு முன்பு அவர்களை பற்றிய சில வாசகங்கள் எழுதி வைக்க அவர்கள் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
அதுமட்டும் இன்றி இந்த மர்ம மரணங்கள் வாரத்தில் சரியாக செவ்வாய்கிழமையில் மட்டுமே நடந்து வருகிறது.
மர்மமான முறையில் நடக்கும் தற்கொலையை பின்னணியை கண்டுபிடிப்பதற்காக காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் நந்திதா தற்கொலையை பற்றி விசாரணையில் இறங்க பிரேத பரிசோதனை செய்ய ஊர் ஜமீன்தாரும் மற்றும் ஊர் மக்களும் ஒத்துக் கொள்ளாத காரணத்தால் அது தற்கொலைதான் என முடிவாகிறது.
அதேபோல் சுவற்றில் எழுதி வைத்து இரண்டாவது சம்பவம் நடக்க இருவர் தற்கொலை சம்பவம்
ஆனால் தற்கொலை நிகழும் போது அது பிரேத பரிசோதனைக்கு சென்று கொலை என்று முடிவாகிறது
கொலை என்று தெரிந்தவுடன் காவல் துறையும் ஊர் மக்களும் கொலையாளி தேடி அலைய இறுதிக்காட்சியில் கொலையாளி யார் என்று தெரிய வரும் போது நமக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் தொற்றிக் கொள்கிறது.
அந்த ஊரில் நடக்கும் மர்ம மரணங்களுக்கு இறந்துபோன ஷைலு தான் காரணம் என்று மருத்துவர் ஒருவர் கூறுகிறார்.
யார் அந்த ஷைலு? அவருக்கும் இந்த தற்கொலைக்கு தொடர்பு இருக்கிறதா? அந்தக் கொலையாளியை காவல் துறையிடம் கண்டுபிடித்தார்களா? கண்டுபிடிக்கவில்லையா?
என்பதுதான் இந்த செவ்வாய்க்கிழமை திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்தச் செவ்வாய்க்கிழமை திரைப்படத்தில் கதாநாயகியாக பாயல் ராஜ்புத் நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக ஷைலு என்ற கதாபாத்திரத்தில் பயல் ராஜ்புத் மிக அற்புதமாகவும் அருமையாகவும் நடித்திருக்கிறார்
கதாநாயகி கதாபாத்திரத்தில் நடிக்க மிகப்பெரிய தைரியம் வேண்டும் எந்த ஒரு கதாநாயகிக்கும் இப்படி ஒரு இந்த தைரியம் வராது ஆனால் செவ்வாய்க்கிழமை திரைப்படத்தின் நடித்த கதாநாயகி பாயல் ராஜ்புத் துணிந்து களம் இறங்கி இருக்கிறார் அவருக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நந்திதா ஸ்வேதா, அழுத்தமான கதாபாத்திரத்தில் பலம் வாய்ந்த பெண் காவல்துறை அதிகாரியை பிரபதிபலிக்கும் வகையில் நடித்திருக்கிறார்.
அஜ்மல் அவருடைய கதாபாத்திரத்தை உணர்ந்து எடுத்திருக்கிறார்.
ஸ்ரீதேஜ், அமீர், சைதன்யா கிருஷ்ணா, லக்ஷ்மன் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் தமிழ் திரைப்பட உலகிற்கு பரிட்சயம் இல்லாத முகங்களாக இருந்தாலும், கதாபாத்திரங்களுக்கு பொருத்தமானவர்களாக இருக்கிறார்கள்.
அஜய் கோஷ், மட்டும் ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்திலும் அருமையாக நடித்து இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் தசரதி சிவேந்த்ராவின் ஒளிப்பதிவு மூலம் திகில் காட்சிகள் அனைத்தும் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை மிரட்டும் வகையில் இருக்கிறது.
ஒவ்வொரு காட்சியையும் மிக நுட்பமாக கையாண்டிருப்பவர், இருள் சூழ்ந்த பகுதிகளை காட்டியே பல இடங்களில் திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு பயத்தை காட்டிவிட்டார்.
படத்தொகுப்பாளர் குல்லப்பள்ளி மாதவகுமாரின் படத்தொகுப்பு திரைப்படத்தின் கதையை மிக தெள்ளத் தெளிவாக கடந்து சென்று விடுகிறது.
இசையமைப்பாளர் பி.அஜனீஷ் லோக்நாத். அவருடைய இசை மற்றும் பின்னணி இசை ஒன்றி ஒட்டு மொத்த திரைப்படத்திற்கும் உயிர் கொடுத்திருக்கிறது.
வழக்கமான பாணியில் கதை சொல்லாமல் திரைக்கதையை வித்தியாசமான முறையில் நகர்த்தி செல்வதோடு, திரைப்படம் க்ளைமாக்ஸை நோக்கி பயணிக்கும் போது,
இது பேய் திரைப்படமும் இல்லை என்ற ரீதியில் காட்சிகளை வடிவமைத்திருப்பவர், இறுதியில் மக்களுக்கு நல்லதாக ஒரு விஷயத்தை சொல்லி திரைப்படத்தை முடிக்கும் இயக்குனர் அஜய் பூபதிக்கு வாழ்த்துக்கள்.
மொத்தத்தில் இந்த செவ்வாய்க்கிழமை திரைப்படம் பெண்ணுக்கும் பெண்மைக்கும் நடக்கும் போராட்டம்.