சைத்ரா திரைவிமர்சனம் ரேட்டிங்:- 2.5/5.

நடிகர் & நடிகைகள்:- யாஷிகா ஆனந்த், அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, கண்ணன், ரமணன், லூயிஸ், மொசக்குட்டி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- M. ஜெனித்குமார்.

ஒளிப்பதிவாளர் :- சதீஷ் குமார்.

படத்தொகுப்பாளர் :- எலிஷா.

இசையமைப்பாளர் :- பிரபாகரன் மெய்யப்பன்.

தயாரிப்பு நிறுவனம் :- மார்ஸ் புரொடக்க்ஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- K. மனோகரன்.

ரேட்டிங் :- 2.5/ 5.

கதாநாயகி யாஷிகா ஆனந்தை சந்திப்பதற்காக அவருடைய தோழி மற்றும் அவரது கணவர் வரும்போது வரும் வழியில் விபத்தில் சிக்கி இறந்துவிட அந்த விபத்தை நேரில் பார்க்கும் கதாநாயகி யாஷிகா ஆனந்த் அன்று முதல் தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவதோடு, விபத்தில் இறந்த தோழி மற்றும் அவரது கணவர் இருவரும் தன்னை தேடி வருவதாகவும், அவர்கள் தன்னை கொலை செய்து விடுவார்கள் என புலம்பிக் கொண்டிருக்கிறார்.

தன் மனைவி கதாநாயகி யாஷிகா ஆனந்த் அந்த விபத்தை நேரில் பார்த்ததிலிருந்து மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக நினைத்து கதாநாயகன் அவிதேஜ், மனநல மருத்துவர் ஆலோசனைப்படி அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்.

இதற்கிடையே, தன் நண்பருக்காக பரிசுப் பொருட்கள் வாங்குவதற்காக வீட்டில் இருந்து வெளியே செல்லும் கதாநாயகன் அவிதேஜ், தனது மனைவி கதாநாயகி யாஷிகா ஆனந்துக்கு போன் செய்யும் போது அந்த போனை அவர் எடுக்காமல், அவரை தேடி வரும் இறந்துபோன அவருடைய தோழி போனை எடுக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடையும் கதாநாயகன் அவிதேஜ், தனது மனைவி கதாநாயகி யாஷிகா ஆனந்த் சொல்வது விபத்தில் இறந்தவர்கள் அவரை தேடி வருவது உண்மை தான் என நம்புவதோடு, அந்த அமானுஷ்ய சக்திகளை விரட்ட தனது நண்பரிடம் சொல்லி ஆனைமலை சாமியாரை அழைத்து வர சொல்லி அனுப்புகிறார்.

கதாநாயகன் அவிதேஜ் கூறியபடி அவரது வீட்டிற்கு ஆனைமலை சாமியாரை அழைத்துச் செல்லும் அந்த நண்பர் திடீரென்று தனது காதலிக்கு போன் செய்து நான் மிகப்பெரிய ஆபத்தில் இருப்பதாக சொல்ல, அவரை தேடி செல்லும் அவருடைய காதலி கதாநாயகி யாஷிகா ஆனந்தை தேடி வரும் இறந்த தோழி மற்றும் அவரது கணவர் அவர்களை சந்திப்பதோடு, அவர்களிடம் பேசவும் செய்கிறார்.

இதற்கிடையே வீட்டுக்குள் பார்க்கும் போது அங்கே அங்கு யாருமே இல்லாத, நிலையில் அவருடைய காதலன் மட்டும் தலையில் அடிபட்ட கையில் கத்தியுடன் ரத்த வெள்ளத்தில் கதாநாயகி யாஷிகா ஆனந்த் சொல்வது போலவே, “அவர்கள் இருவரும் சேர்ந்து என்னை கொன்றுவிடுவார்கள் என நான் சாக வேண்டும்” என்று புலம்பிக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென கோமா நிலைக்கு சென்று விடுகிறார்.

இந்த நிலையில் காவல்துறை அதிகாரி மற்றும் ஒரு காவலர்களுடன் அந்த வீட்டுக்கு சென்று என்ன நடக்கிறது என்று பார்க்கும்போது காவல்துறை அதிகாரியும் வீட்டுக்குள் மாட்டிக் கொள்கிறார்.

அந்த வீட்டில் என்ன நடந்தது? என்ன அந்த வீட்டுக்குள் சென்ற அனைவரும் ஆலமர சாமியார் காவல்துறை அதிகாரி கதாநாயகி யாஷிகா ஆனந்த் கதாநாயகன் அபினேஷ் என் ஆனார்கள் அந்த வீட்டை விட்டு உயிரோடு வெளியே வந்தார்களா? வரவில்லையா?
என்பதுதான் இந்த சைத்ரா திரைப்படத்தின் மீதி கதை.

இந்த சைத்ரா திரைப்படத்தில் கதாநாயகியாக யாஷிகா ஆனந்த் நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் யாஷிகா ஆனந்த் ஒரு கதாபாத்திரமாக கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.

கதாநாயகி யாஷிகா ஆனந்துக்கு கணவராக நடித்திருக்கும் அவிதேஜ் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

கதாநாயகன் அவிதேஜின் நண்பரின் காதலியாக நடித்திருக்கும் சக்தி மகேந்திரா, இறந்துபோன தோழியாக நடித்திருக்கும் பூஜா, காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் கண்ணன், கதாநாயகன் நண்பனாக நடித்திருக்கும் ரமணன், காவலராக நடித்திருக்கும் லூயிஸ், ஆனைமலை சாமியாரின் உதவியாளராக நடித்திருக்கும் மொசக்குட்டி என்று திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது வேலையை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சதீஷ் குமாரின், ஹாரர் திரைப்படத்திற்கான ஒளிப்பதிவு சுமாரான உள்ளது.

படத்தொகுப்பாளர் எலிஷாவின் படத்தொகுப்பு திரைப்படத்திற்க்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

இசையமைப்பாளர் பிரபாகரன் மெய்யப்பனின் இசையும் திகில் திரைப்படங்களுக்கு ஏற்றபடி இல்லை என்பதுதான் உண்மை.

நினைக்கும்படியான பேய் குறித்த ஒரு கதையை சொல்லி, லாஜிக்கே இல்லாமல்  திரைக்கதையை நகர்த்தி சென்றுள்ளார் இயக்குநர் ஜெனித்குமார்.

மொத்தத்தில் ‘சைத்ரா’ திரைப்படம் கொண்டாடும் அளவிற்கு இல்லை.