நான் உங்களுடன் இருப்பேன் கேரளா முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர் மோகன்லால் நிதி உதவி வழங்கி உள்ளார்
கேரளாவை சேர்ந்த பலர் வெளி நாடுகளில் வசித்து வருகிறார்கள்.
இதனால் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகமாக கேரளாவில்தான் பரவ ஆரம்பித்திருக்கிறது.
இந்தியாவில் கேரளா மாநிலத்தில் கொரோனா வைரஸ் நோய் வீரியம் அதிகளவில் காணப்பட்டுள்ளது.
தற்போது இதனை தடுக்க கேரளா முதல்வர் பினராயி விஜயன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கேரளா முதல்வர் நிவாரண நிதிக்கு தனது சார்பில் ரூபாய் 50 லட்சம் வழங்கி இருக்கிறார்.
இதுகுறித்து மோகன்லால் கூறியதாவது….
முதல்வர் பினராயி விஜயன் மேற்கொண்டுவரும் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக செய்து வருகிறார்.
என்னாலான ஒரு சிறிய பங்களிப்புக்காக மக்களுக்கு பயன்படும் வகையில் உதவும் விதமாக இந்த ரூபாய் 50 லட்சத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
தொடரட்டும் உங்கள் பணி உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் என முதல்வருக்கான கடிதத்தில் கூறியுள்ளார் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால் .
இதற்கு முன்பு கேரளா திரைப்பட தொழிலாளர்களுக்கு ரூபாய் 10 லட்சம் மலையாள நடிகர் சூப்பர் ஸ்டார் மோகன்லால் அவர்கள் வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது











