கஸ்டடி திரைவிமர்சனம் ரேட்டிங் :- 2./ 5.

நடிகர் நடிகைகள் :- நாக சைதன்யா அக்கினேனி, க்ரித்தி ஷெட்டி, அரவிந்த் சாமி, சரத் குமார், பிரியாமணி, ராம்கி, பிரேம்ஜி அமரன்,வெனிலா கிஷோர், சம்பத், ஜெய பிரகாஷ், ரவிரவிபிரகாஷ், பிரேமி  விஸ்வநாத், சாய் ஶ்ரீநிவாஸ், கோபு ராஜு ரமணா, காதம்பரி கிரண், நிஹாரிகா, தன்வி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- வெங்கட் பிரபு .

ஒளிப்பதிவு :- SR கதிர்.

படத்தொகுப்பு :-  வெங்கட் ராஜன்.

இசை :- இசைஞானி இளையராஜா – யுவன் சங்கர் ராஜா.

தயாரிப்பு நிறுவனம் :-  ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ்.

தயாரிப்பாளர் :- ஶ்ரீனிவாச  சித்தூரி.

ரேட்டிங் :- 2./ 5.

தெலுங்கு மொழி பின்னணியில், தெலுங்கு கதைக்களத்துடன் திரைப்படமாக்கி விட்டு அதைத் தமிழ்ப் திரைப்படம் என்று சொல்ல வேண்டியதன் அவசியம் என்ன இயக்குனர் வெங்கட் பிரபு அவர்களே? இநத கஸ்டடி திரைப்படத்தில் இருக்கும் கதாபாத்திரங்கள் அனைவரும் தமிழில் பேசினால் அது தமிழ்ப் திரைப்படமாகிவிடுமா ? இப்படியெல்லாம் தமிழ் ரசிகர்களை ஏமாற்ற முடியாத இயக்குனர் வெங்கட் பிரபு.

ஆந்திரா மாநிலத்தில் உள்ள ராஜமுந்திரியில் நடக்கும் ஒரு மிகப்பெரிய வெடி விபத்தில் குழந்தைகள் உட்பட பலரும் கொல்லப்படுகிறார்கள்.

இந்த மிகப்பெரிய வெடி விபத்து வழக்கை சிபிசிஐயிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இதில் வெடி விபத்தில் மிகப்பெரிய குற்றவாளியாக வில்லன் அரவிந்த்சாமி சம்பந்தப்பட்டிருக்கிறார்.

இவரை சிபிஐ அதிகாரியான சம்பத் கைது செய்து காரில் அழைத்து வரும்போது நடக்கும் கார் விபத்தில் இருவருமே போலீஸ் கான்ஸ்டபிள் கதாநாயகன் நாக சைதன்யாவிடம் எதிர்பாராத விதமாக சிக்கிக் கொள்கின்றனர்.

வில்லன் அரவிந்த்சாமியையும் சிபிஐ அதிகாரியான சம்பத்தையும் கதாநாயகன் நாக சைத்தன்யா, அவர்கள் குற்றவாளி என்பதை தெரிந்து கொண்டு சிறையில் அடைத்து விடுகிறார்.

அதன் பின் வில்லன் அரவிந்த் சாமியை காப்பாற்ற முதலமைச்சர் பிரியாமணி, காவல்துறை உயர் அதிகாரி சரத்குமார் உட்பட பலரும் முயற்சி செய்கிறார்கள்.

இதனால் சட்டத்தின் முன்னால் அவரை நிறுத்த வேண்டும் என்று சிபிஐ சம்பத் நினைக்கிறார்.

மறுபுறம் வில்லன் அரவிந்த் சாமியை விட்டால் அனைத்து உண்மையும் வெளியே வந்துவிடும் என்பதால் அவரை தீர்த்துக்கட்ட ஒரு கும்பல் காவல் நிலையத்தில் புகுந்து ஸ வில்லன் அரவிந்தசாமி மற்றும் சிபி அதிகாரி சம்பத் இருவரையும் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்

இதில் இருவரையும் காப்பாற்ற கதாநாயகன் நாக சைதன்யா அந்த கும்பலிடம் சண்டையிடுகிறார்.

இறுதியில் வில்லன் அரவிந்த்சாமியை, கதாநாயகன் நாக சைத்தன்யா காப்பாற்றினாரா? காப்பாற்றவில்லையா? வில்லன் அரவிந்தசாமியை சட்டத்தின் முன்னால் நிறுத்தினாரா? நிறுத்தவில்லையா? கதாநாயகி கீர்த்தி ஷெட்டி கதாநாயகன் நாக சைத்தன்யா காதல் கைக்கூடியதா? கைகூட வில்லையா? என்பதுதான் இந்த கஸடடி திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த கஸ்டடி திரைப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

காவல்துறையில் கடமை தவறாத கான்ஸ்டபிள் ஆக வரும் நாக சைத்தன்யா, தனது நடிப்பின் மூலம் சரியாக செய்து பாராட்டுக்களை பெறுகிறார்.

.இந்த கஷ்டடி திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.

கதாநாயகி கீர்த்தி ஷெட்டி திரைப்படத்திற்கு சிறந்த தேர்வு. இவருடைய நடிப்பு திரைப்படத்திற்கு கூடுதல் பலம்.

மாஸ் வில்லனாக வரும்அரவிந்த் சாமி தனது அனுபவ நடிப்பின் மூலம் அனைவரையும் அசத்தி விட்டார்..

மாஸ் ஆக்ஷன் காட்சிகளில் அனைவரையும் கவர்ந்து பாராட்டுகளை பெறுகிறார்.

திரைப்படத்தில் தோன்றும் பிரியாமணி, சரத்குமார், சம்பத், பிரேம் ஜி, ராம்கி என அனைவரும் அவர்களுடைய பணியை மிகச்சிறப்பாக செய்துள்ளனர். 

ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு அருமை.

இசையமைப்பாளர்கள் இசைஞானி இளையராஜா – யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளதால் திரைம்படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

ஆனால் திரைப்படத்தின் பாடல்கள் சுமாராக உள்ளது.

பின்னணி இசையில் யுவன் சங்கர் ராஜா சுமாராகத்தான் இருக்கிறது.

சிபிஐ மற்றும் காவல்துறையை சுற்றி நடக்கும் கதைக்களத்தை மையப்படுத்தி கஸ்டடி திரைப்படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.

கதை மற்றும் திரைக்கதையில் சுவாரசியம் கொஞ்சம் கூட இல்லாததல் திரைப்படத்தின் விறுவிறுப்பு மிகவும் தொய்வாக தென்படுகிறது.

திரைப்படத்தை விட்டு திரைக்கதை விலகி செல்வதால் அதிகமாக திரைப்படத்தை ரசிக்க முடியவில்லை.

கஸ்டடி மொத்தத்தில் கஸடடி திரைப்படம் கஷ்டம்.