சினிமா பத்திரிகையாளர் சங்கத்திற்கு தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ரூபாய் 25 ஆயிரம் நிதியுதவி வழங்கியிருக்கிறது.!

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் அதிக அளவில் பரவி வருகிறது.

இந்த நிலையில் மத்திய அரசும் மாநில அரசும் தீவிரமாக கண்காணித்து முன் எச்சரிக்கையை பலவிதமான முயற்சிகளையும் செய்து வருகின்றனர்.

தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் இருந்து சினிமா பத்திரிக்கையாளர் சங்கத்தை அழைத்து உடனடியாக நிதியுதவி வழங்கியிருக்கிறார்கள்.

தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின்
தலைவர் R.K. செல்வமணியின் ஒப்புதலுடன் ‘பெப்சி’ அமைப்பின் பொதுச் செயலாளர் அங்கமுத்து சண்முகம், பொருளாளர் B.N.சுவாமிநாதன், துணைத்தலைவர்களில் ஒருவரான J.ஸ்ரீதர் உள்ளிட்டோர் தாயுள்ளத்துடன் ரூபாய் 25 ஆயிரம் காசோலையை சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் D.R.பாலேஷ்வர் , பொதுச் செயலாளர் R.S.கார்த்திகேயன், பொருளாளர் மதிஒளிகுமார் உள்ளிட்டோரிடம் வழங்கியுள்ளார்கள்