நடிகர் சிலம்பரசன் டிஆர் நடிக்கும் “மாநாடு” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு அப்டேட்.

சென்னை 13 ஜூன் 2021

நடிகர் சிலம்பரசன் டிஆர் “மாநாடு” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு அப்டேட்.

நடிகர் சிலம்பரசன் டிஆர் நடிப்பில் உருவாகி உள்ள மாநாடு திரைப்படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் டிஆர் நடித்துள்ள திரைப்படம் ‘மாநாடு’.

இந்த மாநாடு திரைப்படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவிலும் மிகப் பிரம்மாண்டமாகவும் தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் டிஆருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷன் நடித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி அமரன், டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

மாநாடு திரைப்படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழில் உருவாகி உள்ள மாநாடு படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்

இந்த நிலையில், மாநாடு திரைப்படத்தின் டிரெய்லர் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி மாநாடு திரைப்படத்தின் டிரெய்லர் வருகிற ஜூலை 21-ந் தேதி பக்ரீத் பண்டிகையன்று வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.