பிரபல இயக்குனர் நடிகர் கிரிஷ் கர்னாட் காலமானார்

ஷங்கர் இயக்கத்தில் தமிழில் உருவான காதலன் எனும் படத்தில் நடித்த பிரபல கர்நாடக நடிகர் கிரிஷ் கர்னாட் இன்று காலமானார்

ஒரு நடிகராக, இயக்குனராக மற்றும் திரைக்கதை எழுத்தாளராக இந்தியத் திரைப்பட உலகில் இன்றும் அவர் நிலைத்து நிற்கிறார். இதனால் ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். சமீபத்தில் கன்னடத்திற்கான ஞானபீட விருது பெற்ற ஏழு நபர்களில் இவரும் ஒருவராவார்.

தமிழில் காதலன், ரட்சகன், செல்லமே, ஹேராம் போன்ற படங்களில் நடித்தவர் கிரிஷ் கர்னாட்.