100 – திரைவிமர்சனம்

நடிப்பு – அதர்வா, ஹன்சிகா, யோகி பாபு
தயாரிப்பு – ஆரா சினிமாஸ்
இயக்கம் – சாம் ஆண்டன்
இசை – சாம் சிஎஸ்
வெளியான தேதி – மே 11, 2019

ரேட்டிங் – 2./5

 
காவல்துறை கண்ட்ரோல் ரூம்மியில் வேலை பார்க்கும் ஒரு சாதாரண உதவி ஆய்வாளர், கன்ட்ரோல் ரூமுக்கு வரும் கால்களை   எப்படி எல்லாம் கண்டு பிடிக்கிறார்கள் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றினார் என்பது மாறி  நடக்கும் குற்றங்களை எப்படி தடுக்கிறார், குற்றவாளிகளை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே 100 திரைப்படத்தின் கதை.
 
அதர்வா வழக்கம் போல் இல்லாமல் பக்காவான கதையை தேர்வு செய்து தரமான படத்தில்படத்தில் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். போலீஸ் அதிகாரியாக தெறிக்க விட்டுள்ளார்.
 
போலீஸ் வேலைக்காக காத்திருக்கும் அதர்வா
தனது உயிருக்கு உயிரான போலீஸ் நண்பனின் தங்கையிடம் சில்மிஷம் செய்த பையனை கல்லூரிக்குள்ளே நுழைந்து அடித்து துவைத்து  எடுக்கிறார். ஆனால் நண்பனின் தங்கையும், அந்த பையனும் காதலர்கள் என்பது பிறகு தான் தெரிய வருகிறது அதர்வாவுக்கு.
 
 அந்த ஏரியா கவுன்சிலர் அவரது போலீஸ் நண்பர் மீது கை வைக்க அதை தாங்காத நண்பன் அதர்வா அந்த கவுன்சிலரை அடிக்க அடி தடியுடன் அப்பாயின்மென்ட்டை ஆர்டரை அவரது தந்தை கொண்டு வந்து தர அதை வாங்கி கொண்டு போலீஸ் வேலையில் சேருகிறார். 
 
ஆனால் அவர் எதிர்பார்த்தபடி ஸ்டேஷனலில் ஆக்ஷ்ன் போலீசாக பணிபுரியும் வேலை இல்லை. கண்ட்ரோல் ரூமில் அமர்ந்து போலீசுக்கு வரும் கால்களை பேசி அதனை ஸ்டேஷன்களுக்கு தெரியப்படுத்துவது தான் வேலை. 
 
ஆரம்பத்தில் இந்த வேலையின் மீது ஈடுபாடு இல்லாமல் தனது வேலையை தொடங்குகிறார் அதர்வா. அதன் பின்னர் குழந்தை கடத்தல் தொடர்பாக நூறாவது  போன் கால் வர சத்தமில்லாமல் ஆக்ஷனில் இறங்கி பட்டைய கிளப்புகிறார் நமது ஹீரோ அதர்வா.
இதே போல் ஒரு பெண் கடத்தப்பட்டு அந்த பெண்ணை கொலை செய்து விட்டது போல் நாடகம் நடத்தி அந்த பெண்ணை வெளிநாட்டுக்கு விற்பனை செய்ய முயல்கின்றது ஒரு கும்பல்.
 
இந்த கும்பல்களை   அதர்வா எப்படி கண்டுப்பிடித்தார்? இறுதியில் என்ன நடந்தது என்பது தான் இப்படத்தின் மீதி கதையும் .
 
அந்த கடத்தல் கும்பலை சேர்ந்த பையனின் அக்கா ஹன்சிகாவை காதலிக்கிறார் நம்ம ஹீரோ. அதர்வா ஒரு ஐந்து நிமிட மெனக்கட்டு கரெக்ட் பண்ணுகிறார்  ஹன்சிகாவும் அதர்வாவின் காதலை ஏற்க, பிறகு என்ன டூயட் தான். அதோடு தனது கடமை முடிந்தது என கிளம்பும் ஹன்சிகா, பழைய பட க்ளைமாக்சில் போலீஸ் வருவது போல், கடைசியில் ரீஎண்ட்ரிக் கொடுக்கிறார்.
 
நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹன்ஷிகா உடல் எடையை எல்லாம் குறைத்து ரி-என்ட்ரி கொடுத்துள்ளார். ஆனால் படத்தின் அவரின் கதாபாத்திரத்திற்கு தான் பெரிய முக்கியத்துவம் இல்லை
 
இந்த கேப்பில் ஹன்சிகா அப்பாவிடம் டியூஷன் படிக்கும் ஒரு பள்ளி மாணவி கொலை செய்யப்படுகிறார். தன்னை காதலித்துவிட்டு ஏமாற்றியதால் கொலை செய்தேன் என ஒரு 17 வயது பையன் காவல்துறையினரிடம் சரணடைகிறான்.
 
. வேண்டா வெறுப்பாய் வேலை செய்யும் அதர்வாவுக்கு, அவர் அட்டண்ட் செய்யும் 100வது தொலைபேசி அழைப்பு, ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துகிறது. அதன் பின்னர் குற்றங்களை கண்டுபிடிக்கும் சாகசங்களை செய்ய ஆரம்பிக்கிறார். அதுவும் ஒரு டீ குடிக்கும் கேப்பில். அது என்ன என்பது தான் முழு படமும்.
 
தமிழில் இதுவரை பல நூறு போலீஸ் படங்கள் வந்திருத்தாலும், காவல் கட்டுப்பாட்டு அறையில் வேலை பார்க்கும் போலீஸ் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட காட்சிகள் திரைக்கு புதுசு. அந்த வகையில் கவனம் ஈர்க்கிறார் இயக்குனர் சாம் ஆண்டன்.
 
முழுக்க முழக்க ஒரு கமர்ஷியல் படத்தை கொடுத்து, அதர்வாவை மாஸ் ஹீரோவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் இயக்குனர். ஆனால் அது எந்த அளவுக்கு ஒர்க்கவுட் ஆகிறது என்பது படத்தின் ரிசல்ட்டில் தான் தெரியும்.
 
படத்தில் காட்டப்படும் குற்ற செயல்கள் பொள்ளாச்சி சம்பவத்தை நினைவுப்படுத்துகிறது. அதேபோல் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் பற்றியும் படத்தில் பேசியுள்ளார் இயக்குனர்.
 
தொடர்ந்து நடிப்பை வெளிப்படுத்தும் படங்களில் நடித்து வந்த அதர்வாவுக்கு ஒரு பக்கா கமர்ஷியல் படமாக அமைந்திருக்கிறது 100. ஒரு துடுப்பான போலீஸ் அதிகாரிக்கான பிட்டான உடல்மொழியுடன் அசத்துகிறார். பாசம், காதல், காமெடி, ஆக்ஷன், சென்டிமெண்ட் என அனைத்து காட்சிகளிலும் கலவையாக நடித்து ஸ்கோர் செய்கிறார்.
 
படத்தில் ஹன்சிகாவுக்கு மொத்தம் ஐந்து காட்சிகள் தான். ஏதோ ஜூனியர் ஆர்டிஸ்ட் போல் வந்து போகிறார். ஸ்லிம் ஆகிறேன் என நினைத்து, பழைய பொலிவை இழந்துவிட்டார். பார்ப்போம் அடுத்தடுத்த படங்களில் எப்படி தோன்றுகிறார் என்று.
 
நடுவில் வந்த பல படங்களை காட்டிலும், இதில் அதிக காட்சிகளில் வருகிறார் யோகி பாபு. போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் அவர் செய்யும் சேட்டைகள், கிச்சுகிச்சு மூட்டுகிறது. சில நிமிடங்கள் மட்டுமே வந்தாலும், படத்தை கலகலப்பாக்குகிறார் யோகிபாபு.
 
படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கும் தயாரிப்பாளர் மகேஷ், சோகமே உருவாய் தெரிகிறார். அந்த கதாபாத்திரத்தின் மீது இயல்பாகவே பரிதாபம் ஏற்பட்டுவிடுகிறது. வில்லனாக நடித்துள்ள ராஜ் ஐயப்பா இளம் வில்லனாக பட்டையைக் கிளப்பி இருக்கிறார், பிஸ்டல் பெருமாளாக வரும் ராதாரவி, எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் ,மறைந்த நடிகர் சீனு மோகன், மைம் கோபி என அனைவருமே அவரவர் கதாபாத்திரத்தை ஏற்றவாறு நடித்திருக்கிறார்கள்.
 
அவசரப்பட்டு 100க்கு டயல் செய்துவிட்டால், எப்படி மாட்டிக்கொள்வோமோ அப்படி தான் இருக்கிறது படமும். முதல் பாதி படம் ஏனோ தானோவென நகர்கிறது. இரண்டாம் பாதிக்கு பிறகு தான் படமே ஆரம்பமாகிறது. திரைக்கதையில் அதிக கவனம் செலுத்திய இயக்குனர், கதையிலும், லாஜிக் விஷயங்களிலும் அதேபோல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
 
மொபைல் வந்த காலத்திலிருந்து லாக் செய்திருந்தால் அந்த மொபைலில் இருந்து  100  என்ற எண்ணுக்கு கால் போகாது அதை தெரியாமல் 100 படத்தில் நமது இயக்குனர் அதை இடைவேளை காட்சியில் க்ஷ காண்பித்துள்ளார்
எந்த மொபைல் போனிலும் சிம் இருந்தாலும் இல்லை என்றாலும் எந்த மொபைலிலும் பேட்டன் லாக் இருக்கும்போது 112 மட்டுமே போன் போகும்
 
படத்துக்கு இசை சாம்.சி.எஸ். என சொன்னால் தான் தெரிகிறது. பாடல்கள் எல்லாம் சுமார் ரகம் தான். ஏற்கனவே பல மாஸ் கமர்ஷியல் படங்களில் கேட்ட அதே இசை தான் பின்னணியில் ஒலிக்கிறது.
 
ஆக்ஷன் கிரைம் திரில்லர் படம் என்பதை புரிந்து சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ஆனால் பாடல்கள் பெரியதாக சொல்லி கொள்ளும் அளவிற்கு இடம் பிடிக்கவில்லை.
 
ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த அவர்களின் ஒளிப்பதிவு
மிக மிக அருமை ஏ.எல் ரூபனின் கட்டிங்ஸ் பாராட்டும் விதத்தில் அமைந்துள்ளது.
 
திலீப் சுப்புராயனின் சண்டை காட்சி படத்தின் பெரிய பலம் என்றே சொல்லலாம்.
 
படத்தின் முதல் 15 நிமிடத்தில் மட்டும் கவனம் செலுத்தி இருந்தால் நிச்சயம் 100 வேற லெவல் படமாக அமைந்திருக்கும்.