புரொஜக்ட் சி-2: திரைவிமர்சனம் ரேட்டிங் :- 2.75 / 5
நடிகர் நடிகைகள் :- ஸ்ரீ, வசுதா கிருஷ்ணமூர்த்தி, சாம்ஸ், குருமூர்த்தி, ராம்ஜி, பாலாஜி வெங்கட்ராமன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- வினோ.
ஒளிப்பதிவு :- சதீஷ் ஆனந்த்.
படத்தொகுப்பு :- தினேஷ் காந்தி.
இசை :- சிபு சுகுமாரன்.
தயாரிப்பு :- சார்க் பின் ஸ்டுடியோஸ்.
தயாரிப்பாளர் :- ஸ்ரீ.
ரேட்டிங் :- 2.75 / 5
கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற கதாநாயகன் ஸ்ரீ, தகுந்த வேலை கிடைக்காத விரக்தியில் வாழ்ந்து வருகிறார்.
படப்புக்கு ஏற்றது போல்
தகுந்த வேலை கிடைக்காத காரணத்தால் பக்கவாத நோயால் பாதித்த விஞ்ஞானி ஒருவரின் வீட்டில் அவரை பார்த்துக் கொள்வதற்கான வேலையில் சேர்கிறார்.
அந்த வீட்டில் சமையல் செய்வதற்கு சமையக்கார பெண் ஒருவரும் வேலை பார்த்து வருகிறாள்.
விஞ்ஞானிக்கு பிசியோதெரபி அளிக்க சாம்ஸ் வீட்டுக்கு வருகிறார்.
ஒரு சில பிரச்சனைகளால் விஞ்ஞானி தனி மனிதனாக அவர்களுடைய வீட்டில் வசித்து வருகிறார்.
இதனால் விஞ்ஞானியின் சொத்துக்கும் உயிருக்கும் விஞ்ஞானி கண்டுபிடித்த ஃபார்முலாவுக்கும் ஆபத்து வருகிறது.
அவருக்கு ஆபத்தை விளைவிக்கும் அந்த நபர்கள் யார்? சதிகாரர்களிடமிருந்து விஞ்ஞானி தப்பினாரா? தப்பிக்கவில்லையா? என்பதுதான் புரொஜக்ட் சி – சாப்டர் 2′.திரைப்படத்தின் மீதிக்கதை.
இநத புரொஜக்ட் சி – சாப்டர் 2′ திரைப்படத்தில் ஸ்ரீ கதாநாயகனாக நடித்துள்ளார்.
படித்து விட்டு வேலை தேடும்
அப்பாவி இளைஞராக கதாநாயகன் ஸ்ரீ மிக யதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார்
இநத புரொஜக்ட் சி – சாப்டர் 2′ திரைப்படத்தில் வசுதா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகியாக நடித்துள்ளார்.
கதாநாயகி வசுதா கிருஷ்ணமூர்த்தி அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
வருமையில் வாழும்போது ஒரு நடிப்பையும் ஆடம்பர வாழ்க்கை வந்த பிறகு ஒரு நடிப்பையும் கொடுத்து ரசிகர்களிடம் பாராட்டை பெறுகிறார்.
கவர்ச்சி, வில்லத்தனம், அதட்டல் பேச்சு என்று பல விதமான முகங்களை காண்பித்து கைத்தட்டல் வாங்குகிறார்.
பிஸியோதெரபிஸ்ட்டாக வரும் சாம்ஸ் திரைப்படத்தின் இடையே பேசும் ‘பஞ்ச்’ டயலாக் பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பலை எழுகிறது.
விஞ்ஞானியாக வரும் ராம்ஜி உடல் பாவனைகளால் நடிப்பு அனைவரையும் பாராட்டை பெறுகிறது.
கம்மியான கதாப்பாத்திரங்கள், வைத்து கிடைத்த விஷயங்களை வைத்து திரைப்படமாக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் வினோ.
சில இடங்களில் வரும் சஸ்பென்ஸ் காட்சிகள் விறுவிறுப்பை ஏற்படுத்திகிறது.
இடைவேளைக்கு முன் உள்ள காட்சிகள் அலுப்பை ஏற்படுத்தும் வகையிலும் இடைவேளைக்கு பின் சிறிது வேகம் எடுப்பது போன்ற எண்ணம் ஏற்படுகிறது.
ஒளிப்பதிவாளர் சதீஷ் ஆனந்த் ஒளிப்பதிவு மிகவும் அருமையாக உள்ளது.
ஒரு வீட்டிற்குள் நடக்கும் கதைக்கு ஏற்றவாறு கிடைக்கும் வெளிச்சத்தை கொண்டு காட்சிகளை படம்பிடித்து காண்பித்துள்ளார் ஒளிப்பதிவாளர் சதீஷ் ஆனந்த்.
இசையமைப்பாளர் சிபு சுகுமாரனின் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது.
ஒரே வீட்டிற்கு நடக்கும் கதையை தயார் செய்து ஏற்றவாறு திரைக்கதை அமைப்பு திரைப்படம் ஆக்கி இருக்கிறார் இயக்குனர் வினோ.
மொத்தத்தில் புரொஜக்ட் சி-2 திரைப்படம் ரசிக்கலாம்.