‘கங்குவா’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- சூர்யா, பாபி தியோல், திஷா பதானி, கார்த்தி, நட்டி நட்ராஜ், காருனாஸ், போஸ் வெங்கட், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, கே எஸ் ரவிக்குமார், பிரேம்குமார், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சிவா.

ஒளிப்பதிவாளர் :- வெற்றி பழனிச்சாமி.

படத்தொகுப்பாளர் :- நிஷாத் யூசுப்.

இசையமைப்பாளர் :- தேவி ஸ்ரீ பிரசாத்ஃ

தயாரிப்பு நிறுவனம் :- ஸ்டூடியோ கிரீன், யு வி கிரியேஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- கே.ஈ.ஞானவேல் ராஜா, வம்சி பிரமோத்.

ரேட்டிங் :- 3.5./5.

கோவாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் கதாநாயகன் சூர்யாவை தேடி ஒரு சிறுவன் வருகிறான்.

அந்த சிறுவன் மூலம் கதாநாயகன் சூர்யாவின் முன் ஜென்மம் நினைவுக்கு வர, சுமார் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு உள்ள காலக்கட்டத்தில் நடக்கும் கங்குவாவின் கதை 1070 ஆம் ஆண்டு காலகட்டங்களில் நடக்கும் கதையாக பயணப்படுகிறது.

கடலுக்கு நடுவே நான்கு திசையில் நான்கு தீவுகள் உள்ளன.

மற்றொரு தீவுவின் தலைவரான வில்லன் பாபி தியோல் அந்த ஐந்து தீவுகளில் இயற்கை வளம் அதிகமாக இருக்கும் பெருமாச்சி தீவை கைப்பற்ற முயற்சிக்கும் ரோமானியப் படை, போர் புரிவதையே மட்டுமே தொழிலாக கொண்ட பெருமாச்சி கிராமத்தில் உள்ள போர் வீரர்களை எளிதில் வெற்றி பெற்று விட முடியாது என்பதால், சதியின் மூலம் அவர்களை வீழ்த்த முடிவு செய்கிறது.

அதில், பெருமாச்சி என்னும் ஒரு தீவுவை ஆளும் தீவுயின் தலைவரின் மகனாக கதாநாயகன் சூரியா கங்குவாக வருகிறார்.

மற்றொரு தீவுவின் தலைவரான பாபி தியோல் வருகிறார்.

இந்த இரு தீவுகளில் இருப்பவர்களுக்கும் இருவேறு குணாதிசயங்கள் படைத்தவர்களாக இருக்கிறார்கள்.

பல ஆண்டு காலமாக இந்த இரண்டு தீவுகளில் உள்ள தலைவர்களுக்கு இடையே பகை இருந்து கொண்டே இருக்கிறது.

பெருமாச்சி என்னும் தீவுவை பலவிதமான சூழ்ச்சிகள் மூலம் கைப் பார்க்கலாம் அனைவரையும் வீழ்த்தலாம் என்று எதிரிகள் எண்ணுகிறார்கள்.

அதன்படி, மற்றொரு தீவைச் சேர்ந்த நட்டி நட்ராஜுக்கு பணத்தாசைக்கும் அவர் தங்கத்திற்காகவும் ஆசைப்பட்டு ரோமானியப் படைகளுடன் இணைந்து, தனது சதி திட்டத்தால் பெருமாச்சி வீரர்களை கொன்று குவிக்கிறார்.

எதிரிகளின் சூழ்ச்சியில் பெருமாச்சி தீவுயில் உள்ள வீரர்களை கொன்று குவித்த அந்த தீவுவை காப்பாற்றி மற்றொரு தீவுவின் தலைவரான பாபி தியோலின் மகன்களை கதாநாயகன் சூரியா கொன்று விடுகிறார்.

இதனால் அதிக அளவில் கோபம் கொண்டு எழும் மற்றொரு தீவுவின் தலைவரான பாபி தியோல், கதாநாயகன் சூரியா கங்குவாவை பழி வாங்க வேண்டும் செல்கிறார்.

அதன்பிறகு கோபம் கொண்ட மற்றொரு தீவுவின் தலைவரான பாபி தியோல் கதாநாயகன் சூர்யாவை பழி வாங்கினாரா? பழிவாங்கவில்லையா?, என்பதுதான் இந்த கங்குவா திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த கங்குவா திரைப்படத்தில் கதாநாயகனாக சூரியா நடித்திருக்கிறார்.

நடிகர் சூர்யா, கங்குவா கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என சொல்ல வேண்டும்.

மற்றொரு தீவுயின் தலைவராக நடித்திருக்கும் பாபி தியோலின் தோற்றமே மிரட்டலாக அவருடைய நடிப்பு மிரட்டலாக இருக்கிறது.

இந்த கங்குவார் திரைப்படத்தில் கதாநாயகியாக திஷா பதானி நடித்திருக்கிறார்.

ஒரு பாடலில் கவர்ச்சியாக ஆட வேண்டும் என்பதற்காக மட்டும் கதாநாயகியாக திஷா பதானியை திரைப்படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

யோகி பாபு வழக்கமான காமெடி என்றாலும் அதை ரசிகர்கள் சிரிக்க முடியாத அளவிற்கு நடித்திருக்கிறார்.

ரெடின் கிங்ஸ்லி இந்த மட்டமான திரைப்படத்திற்கு தேவையில்லாத மக்குன குப்பையாக வலம் வருகிறார்.

நட்டி நட்ராஜ் போஸ் வெங்கட், கோவை சரளா, கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ், பிரேம் குமார் என தெரிந்த முகங்கள் பலர் இருந்தாலும், கதாபாத்திரங்களாக மிக அருமையாக நடித்திருந்தாலும்
அவர்களின் முகம் ரசிகர்கள் மனதில் பதியவில்லை.

ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிச்சாமியின் ஒவ்வொரு காட்சியிலும் ஒளிப்பதிவு மூலம் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்.

2024 காலகட்டங்களில் கோவா காட்சிகள் மற்றும் 1070 காலகட்டங்களில் கங்குவா உலகம் என இரண்டையும் ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிச்சாமியின் கேமரா கோணங்கள் அனைத்தும் மிக பிரமாண்டமாக காட்சிகளை காட்சிப்படுத்தியிருப்பதோடு,  படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஹாலிவுட் திரைப்படங்களை பார்த்த அனுபவத்தைக் கொடுக்கிறது.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை மற்றும் பாடல்கள் பின்னணி இசை திரைப்படத்தின் பிரமாண்டத்திற்கே பிரமாண்டம் சேர்க்கும் வகையில் கொடுத்திருக்கிறார்.

மறைந்த படத்தொகுப்பாளர் நிஷாத் யூசுப், கலை இயக்குநர் மிலன், சண்டைப்பயிற்சி இயக்குநர் சுப்ரீம் சுந்தர் மற்றும் இவர்களுடைய குழுவினர் மிக கடுமையாக உழைத்திருப்பது திரைப்படத்தில் அருமையாக தெரிகிறது.

கங்குவா உலகின் பிரமாண்டத்தை ரசிகர்கள் இடையே நேர்த்தியாக காட்சிப்படுத்தியது போல், நல்ல கதையில் அருமையான திரை கதையை இன்னும் கொஞ்சம் மெனக்கட்டு இருந்தால் மிக அருமையாக அமைந்திருக்கும்.

மொத்தத்தில், ‘கங்குவா’ திரைப்படம் ஹாலிவுட் நோக்கி…