’99/66′ (தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு) திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- எம்.எஸ். மூர்த்தி, சபரி, ரோகிந்த், ரச்சிதா மகாலட்சுமி, ஸ்வேதா, பவன்கிருஷ்ணா, கே.ஆர். விஜயா, கே.ஆர்.ஜி, வெங்கடேஷ், எஸ். சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா பி.எல்.தேனப்பன், சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, ஜாவா சுந்தரேசன், அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :– எம்.எஸ்.மூர்த்தி.
ஒளிப்பதிவாளர் :- சேவிலோ ராஜா.
படத்தொகுப்பாளர் :- மீனாட்சி சுந்தரம் .
இசையமைப்பாளர் :- எம்.எஸ்.மூர்த்தி.
தயாரிப்பு நிறுவனம் :- மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்.
தயாரிப்பாளர் :- எம்.எஸ். மூர்த்தி. சுஜாதா மூர்த்தி .
மக்கள் தொடர்பு :- புவன் செல்வராஜ்,
ரேட்டிங் :- 3./5.
கதாநாயகி ரச்சிதா மகாலட்சுமி மற்றும் சபரி தம்பதி இருவரும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 66ஆம் எண் குடியிருப்பை புதிதாக வாங்கி இருவரும் குடியேறுகிறார்கள்.
கதாநாயகி ஸ்வேதா மற்றும் ரோகிந்த் தம்பதி இருவரும் அதே அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 99ஆம் எண் விட்டில் வசித்து வருகிறார்.
அடுக்குமாடி குடியிருப்பில் 66ஆம் எண் விட்டில் வசிக்கும் கதாநாயகி ரச்சிதா மகாலட்சுமி 99ஆம் எண் விட்டில் வசிக்கும் கதாநாயகி ஸ்வேதா, இருவருக்கும் நட்பு ஏற்பட்டு அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்கள்.
இந்த நிலையில், அந்த அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.மூர்த்தி இரவு நேரங்களில் அடிக்கடி வெளியே செல்ல முயற்சிப்பதும், ஆந்தை ஒன்று அவரை தடுத்து நிறுத்துவதும் கார் கண்ணாடியை உடைப்பதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கதாநாயகி ரச்சிதா மகாலட்சுமி தந்தை மகள் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்து உள்ள நாலு கோடி ரூபாய் பணத்திற்காக கதாநாயகி ரச்சிதா மகாலட்சுமியை கொலை செய்ய அவருடைய கணவர் சபரி பல்வேறு திட்டங்கள் தீட்ட, அதில் இருந்து கதாநாயகி ரச்சிதா மகாலட்சுமியை தொடர்ந்து தப்பித்துக் கொண்டே இருக்கிறார்.
திடீரென்று நடு இரவில் கதாநாயகி ஸ்வேதாவை அவருடைய கணவர் ரோகிந்த், கொலை செய்வதை போல் கதாநாயகி ரச்சிதா மகாலட்சுமி, அவரை அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருக்கும் குடியிருப்புவாசிகள் உதவியோடு காப்பாற்ற முயற்சி செய்யும்போது கதாநாயகி ஸ்வேதா ஏற்கனவே இறந்த விட்டார் என கதாநாயகி ரச்சிதா மகாலட்சுமிக்கு தெரிய வரும் நிலையில், 99 எண் வீட்டில் யாரும் வசிக்கவில்லை என தெரிய வருகிறது.
இந்த நிலையில் கதாநாயகி ரச்சிதா மகாலட்சுமியின் கண்களுக்கு மட்டும் தெரியும் கதாநாயகி ஸ்வேதா யார்?,
ஏற்கனவே இறந்து போன கதாநாயகி ஸ்வேதா கதாநாயகி ரச்சிதா மகாலட்சுமியின் கண்களுக்கு மட்டும் தெரிவதற்கான காரணம் என்ன?,
இறந்த கதாநாயகி ஸ்வேதா எதற்காக கதாநாயகி ரச்சிதா மகாலட்சுமியை மட்டும் எதற்காக சந்திக்கிறார் ?,
இரவு நேரங்களில் மட்டும் பயணிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் சங்க தலைவர் மூர்த்தி யார் ?, என்பதுதான் இந்த ’99/66′ (தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு) திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ’99/66′ (தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு) திரைப்படத்தில் கதையின் நாயகியாக ரச்சிதா மகாலட்சுமி நடித்திருக்கிறார்.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் ரச்சிதா மகாலட்சுமி, தன்னுடைய உடலில் ஆவி புகுந்த பிறகு வெளிப்படுத்தும் ஆக்ரோஷமான நடிப்பு, கணவரிடம் காதலை வெளிப்படுத்தும் நடிப்பு என, தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
இந்த ’99/66′ (தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு) திரைப்படத்தில் மற்றொரு கதையின் நாயகியாக ஸ்வேதா நடித்திருக்கிறார்.
மற்றொரு கதையின் நாயகியாக நடித்திருக்கும் ஸ்வேதா, சிறு வயதில் முதல் புத்த மதத்தின் மீது ஈடுபாடு , அனைத்து உயிரினத்திடம் அன்பு செலுத்துவதோடு, தனக்கு தீங்கு செய்தவருக்கு எதுவும் நடந்து விடக்கூடாது, என்று நினைக்கும் அந்த நல்ல மனதுக்கு சொந்தக்காரியாக வலம் வந்து கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்.
இந்த ’99/66′ (தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு) திரைப்படத்தில் கதையின் நாயகர்களாக சபரி மற்றும் ரோகிந்த் நடித்திருக்கிறார்.
கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் சபரி மற்றும் ரோகிந்த் இருவரும் புதுமுகங்கள் என்றாலும், தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து கொடுக்கப்பட்ட பணியை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் சபரி மற்றும் ரோகிந்த் இருவரும் மிகவும் நல்லவர்களாக நடித்து தனது மனைவியை ஏமாற்றும் பசுந்தோல் போர்த்திய புலியாக வந்து அவர்களது வில்லத்தனத்தை மிக சரியாக கையாண்டு கவனம் ஈர்க்கிறார்கள்.
சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, ஜாவா சுந்தரேசன், அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம், ஆகியோரது காமெடி கலாட்டாக்கள் பெரிதாக எடுபடவில்லை.
பவன்கிருஷ்ணா, கே.ஆர். விஜயா, கே.ஆர்.ஜி, வெங்கடேஷ், பி.எல்.தேனப்பன், சிறப்பு தோற்றத்தில் வரும் , இயக்குநர் எம்.எஸ்.மூர்த்தி, ஆகியோரது கதாபாத்திரங்களும், அதில் அவர்கள் வெளிப்படுத்திய நடிப்பும் திரைக்கதைக்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் சேவிலோ ராஜாவின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் சேவிலோ ராஜாவின் ஒளிப்பதிவு மூலம் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் முழு திரைப்படத்தையும் திரைப்படமாக்கியிருந்தாலும், புதிய வடிவிலும் கோணத்திலும் அடுக்குமாடி குடியிருப்பை காண்பித்து, ஒரே இடத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற உணர்வை திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் இருந்து நீக்கி விடுகிறார்.
படத்தொகுப்பாளர் மீனாட்சி சுந்தரத்தின் படத்தொகுப்பு மற்றும் கலை இயக்குனர் ஜெயமுருகனின் கலை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.
தமிழ் திரைப்பட உலகில் பல்வேறு திகில் திரைப்படங்கள் என்றாலே வழக்கமாக சொல்லப்படும் கோணத்தில் இந்த திரைப்படத்தின் கதை இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பில், பல்வேறு திருப்பங்களோடும், எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திரைக்கதையும் சில கதாபாத்திரங்கள் மூலமாகவும் சொல்லியிருப்பது இந்த திரைப்படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றிருக்கிறார் இயக்குனர் எம் எஸ் மூர்த்தி.
ஒரு வீடு, அதில் புதிதாக குடியேறுபவர்களுக்கு நடக்கும் கதை மற்றும் அமானுஷ்ய சம்பவங்கள், என்று திகில் திரைப்படங்களுக்கு என்று இருக்கும் வழக்கமாண திரைக்கதையை புதிய பாணியோடு கதை சொல்லியிருந்தாலும், சில கதாபாத்திரங்கள் மூலம் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தி மிகச் சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் எம் எஸ் மூர்த்தி.
மொத்தத்தில், ’99/66′ (தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு) திரைப்படம்
அமானுஷ்ய மற்றும் திகில் சம்பவங்கள், உள்ள திரைப்படங்கள் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.











