‘அனோமி’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- பாவனா, ரஹ்மான், ஷெபின் பென்சன், விஷ்ணு அகஸ்தியா, பினு பப்பு, அர்ஜுன் லால், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ரியாஸ் மராத்.
ஒளிப்பதிவாளர் :- சுஜித்சாரங்.
படத்தொகுப்பாளர் :- கிரியன் தாஸ்.
இசையமைப்பாளர் :- ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்.
தயாரிப்பு நிறுவனம் :- பனோரமா ஸ்டுடியோஸ்.
தயாரிப்பாளர் :- குமார் மங்கட் பதக் , அபிஷேக் பதக் , பாவனா & ஆதித் பிரசனாகுமார், ராம் மிற்சண்டனி, ராஜேஷ் மேனன்.
மக்கள் தொடர்பு :- ஸ்ரீ வெங்கடேஷ்.
ரேட்டிங் :- 4./5.
தடவியல் நிபுணராக பணிபுரிந்து வரும் கதாநாயகி பாவனா, ஒரு சாலை விபத்தில் தனது தாய் மற்றும் தந்தையை இழக்கிறார்.
அந்த விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த கதாநாயகி பாவனா, தம்பி மன ரீதியாக பாதிக்கப்பட்டு, அடிக்கடி தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்.
கதாநாயகி பாவனா, தம்பிக்கு தொடர் சிகிச்சை அளித்து அவரை எப்படியாவது காப்பாற்றும் முயற்சியில் கதாநாயகி பாவனா ஈடுபடுவதோடு, தனது தம்பிதான் தன் உலகம் என்று வாழ்கிறார்.
இதற்கிடையே, கதாநாயகி பாவனாவின் தம்பி போன்ற மனநிலையில் பாதிக்கப்பட்டு இருக்கும் ஒரு இளைஞர் தற்கொலை செய்துக் கொள்கிறார்.
அந்த சில இளைஞர்கள் தற்கொலை வழக்கை காவல்துறை அதிகாரியான ரஹ்மான் மிகவும் சாதாரணமாக கையாண்ட நிலையில், சில தினங்களில் அதே போல் கதாநாயகி பாவனாவின் தம்பியும் இறக்கிறார்.
இந்த ஒரு இளைஞர் மரணங்களுக்கு தன் தம்பி மரணமும் இருக்கும் ஒற்றுமை மற்றும் பிரேத பரிசோதனையில் கிடைத்த சில தகவல்களை வைத்து, இரண்டும் கொலையை செய்தது யார் என்பதை கதாநாயகி பாவனா கண்டு பிடிக்கிறார்.
ஆனால், இந்த கொலை பற்றிய விசாரணையை விமர்சிப்பதில் காவல்துறை தொடர்ந்து மிகவும் மெத்தனம் காட்ட, அந்த இரண்டு கொலைகள் போலவே ஒரு இளம் பெண் ஒருவர் அதே பாணியில் கொலை செய்யப்படுகிறார்.
இதன் மூலம் தொடர் சைக்கோ தானமாக கொலைகள் என்பதை கதாநாயகி பாவானா, உறுதிப்படுத்துகிறார்.
சைக்கோ கொலையாளியை பிடிப்பதற்காக கதாநாயகி பாவானா, களத்தில் இறங்குகிறார்.
இந்த தொடர் சைக்கோ கொலைகளை செய்துவரும் கொலையாளியை பிடிக்க காவல்துறையும் தீவிரம் காட்ட, வழக்கு சூடுபிடிக்க தொடங்குகிறது.
இந்த தொடர் கொலை நடந்த இடங்களில் கிடைத்த நான்கு சக்கர வாகனத்தின் டயர் அடையாளம் மற்றும் கொலை செய்யப்பட்டவர்களின் உடலில் செலுத்தப்பட்டிருக்கும் அமிலம், இவை இரண்டை தடயங்களாக மட்டுமே வைத்துக் கொண்டு சைக்கோ கொலையாளியை தேடிச் செல்லும் கதாநாயகி பாவனா, சைக்கோ கொலையாளியை கண்டுபிடிக்கிறாரா?, கண்டு பிடிக்கவில்லையா?, என்பதுதான் இந்த ‘அனோமி’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘அனோமி’ திரைப்படத்தில் கதாநாயகியாக பாவனா நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் பாவனா, தடவியல் நிபுணர் கதாப்பாத்திரம் என்றாலும், காவல்துறையை மிஞ்சும் அளவிற்கு தன்னுடைய புலன் விசாரணை மூலம் திரைப்படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரஹ்மானின் கதாபாத்திரம் ஆரம்பத்தில் மிகவும் சாதாரணமாக பயணித்தாலும், இரண்டாம் பாதியில் கதையை சுமந்து, கதாநாயகி பாவனாவுக்கு தோள் கொடுக்கும் கதாபாத்திரமாக திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் கவனம் ஈர்க்கிறது.
தனது அளவான நடிப்பு மூலம் திரைப்படத்திற்கு நடிகர் ரஹ்மான திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.
கதாநாயகி பாவனாவின் தம்பி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷெபின் பென்சன், காதலன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜுன் லால், பினு பப்பு, விஷ்ணு அகஸ்தியா என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் திரைக்கதைக்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங், ஒளிப்பதிவு மூலம் காட்சிகள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்
இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஸ்வரின் இசையில் பாடல்கள் பின்னணி இசை முலம் ரசிகர்கள் பதற்றத்தையும், பரபரப்பையும் அதிகரிக்கும் வகையில் சிறப்பான இசையை கொடுத்து இருக்கிறார்.
கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் சைக்கோ திரில்லர் ஜானர் திரைப்படம் என்றாலும், கொலைக்கான காரணத்தை வித்தியாசமாக கையாண்டிருப்பதோடு, அதை காட்சிப்படுத்திய விதம் சிறப்பாகவும்
பிரமாண்டமாகவும், புதிதாகவும் திரைப்படமாக்கி திரைப்படம் பார்க்கும் ரசிகர்களிடம் பாராட்டு பெறுகிறார் இயக்குனர் ரியாஸ் மராத்.
மொத்தத்தில், ‘அனோமி’ கிரைம் திரில்லர் திரைப்பட ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.











