சூப்பர் ஸ்டார் இடத்தில் தளபதியை வைத்த சன் பிக்சர்ஸ் தளபதி வைத்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார்.
சென்னை 24 ஜூன் 2021
சூப்பர் ஸ்டார் இடத்தில் தளபதியை வைத்த சன் பிக்சர்ஸ் தளபதி வைத்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் ‘அண்ணாத்த’ மற்றும் தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’, நடிகர் சூர்யா நடித்து வரும் அவரது 40வது படம் ஆகிய திரைப்படங்களை தயாரித்து வருகிறது சன் பிக்சர்ஸ்.
இத்துடன் தனுஷ் சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படங்களையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தளபதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு BEAST பர்ஸ்ட் லுக்கை இந்த சன் பிக்சர்ஸ்
நிறுவனம் வெளியிட்டது.
இதுநாள் வரை சன் பிக்சர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் HEADERல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ டைட்டில் போஸ்டர் இருந்தது.
ஆனால் நேற்று விஜய் போஸ்டரை HEADERல் வைத்தனர்.
இது சாதாரண நிகழ்வாக எடுத்துக் கொண்டாலும் தளபதி விஜய் ரசிகர்கள் இதனை கொஞ்சம் ஓவராகவே கொண்டாடினர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களை தளபதி விஜய் ரசிகர்கள் வம்புக்கு இழுக்க இது ட்விட்டரில் பேசும் பொருளானது.
பீஸ்ட் திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார்.
இவரே தான் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ படத்தையும் இயக்கியுள்ளார்.
ஆனால் அவர் இந்த செய்தி ஜூன் 23ல் வெளியாகும் வரை டாக்டர் போஸ்டரையே HEADERல் வைத்துள்ளார்.
மேலும் அவரைப் பற்றிய தகவலில் Director of தளபதி 65 என்றே உள்ளது.
அதனை பீஸ்ட் என்று கூட மாற்றவில்லை.
HEADERல் கூட BEAST போஸ்டரை வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு விஜய் ரசிகர்கள் என்ன சொல்வார்களோ..? பார்ப்போம்..










