சினம் கொள் திரை விமர்சனம் ரேட்டிங் –3.5 /5

நடிகர் நடிகைகள் – அரவிந்தன் சிவஞானம், நர்வினி டெரி, லீலாவதி, பிரேம், தீப செல்வன், தனஞ்ஜெயன், பாலா, மதுமிதா, பேபி டென்சிகா மற்றும் பலர்.

இயக்கம் – ரஞ்சித் ஜோசப்.

ஒளிப்பதிவு – M.R.பழனிக்குமார்.

படத்தொகுப்பு – அருணாசலம் சிவலிங்கம்.

இசை – N.R.ரகுநந்தன்.

தயாரிப்பு – ஸ்கை மேஜிக் பிக்சர்ஸ். பாக்ய லட்சுமி டாக்கீஸ்

ரேட்டிங் –3.5 /5

ஈழப் போர் அல்லது இலங்கை உள்நாட்டுப் போர் என்பது இலங்கை இனப்பிரச்சினை காரணமாக, தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட்ட இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறைப் போராட்டங்களையும், போர்களையும் முதன்மையாகக் குறிக்கின்றது.

இப்போரானது சிங்களவருக்கும் தமிழருக்கும் இடையில் பல விசயங்கள் தொடர்பாக நிலவிவரும் பற்றிய கருத்து முரண்பாடுகளின் மூலத்தைக் கொண்டதாகும்.

23 ஜூலை 1983 முதல் 18 மே 2009 வரை 26 ஆண்டுகள் நடைபெற்ற இந்த போர் 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் ஆநத போர் முடிவுக்கு வந்தது.

இலங்கையில் நடந்த இறுதிப்போருக்குப் பிறகு காணாமல் போன லட்சக்கணக்கான தமிழர்களின் நிலை என்ன ஆனது, என்பதே இன்னும் புரியாத புதிராக இருக்கும் நிலையில், பல வருட சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகும் முன்னாள் போராளிகள் சில மாதங்களில் மாயமான முறையில் உயிரிழக்கும் அதிர்ச்சி தகவலை உரக்க சொல்வதோடு, தமிழர்களின் சொத்துக்களையும், நிலங்களையும் அபகரித்துக்கொண்ட இலங்கை ராணுவம், அவர்களை சொந்த நாட்டில் எப்படி அகதிகளாக நடத்துகிறார்கள் என்பதையும் உலகிற்கு சொல்லும் ஒரு முயற்சியாக இந்த சினம் கொள் திரைப்படம் உருவாகியுள்ளது.

கனடாவில் பிறந்து வளர்ந்த ரஞ்சித் ஜோசப் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம்
‘ சினம்கொள் ‘.

இலங்கையில் போருக்குப் பிறகான தசாப்தத்தில் இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி பேசும் திரைப்படமாக இந்த சினம் கொள் திரைப்படம் உருவாகி இருக்கிறது.

பல வருட சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகும் முன்னாள் போராளியான கதாநாயகன் அரவிந்தன் சிவஞானம், தனது மனைவியை தேடி அலைகிறார்.

அப்போது அவரது வீடு மற்றும் நிலங்களை சிங்கள ராணுவம் அபகரித்துக் கொள்ள, இருக்க இடம் இல்லாமல் சுற்றி அலைபவருக்கு அவருடைய போராளி நண்பர்கள் சிலர் ஆதரவு அளிக்கிறார்கள்.

போராளி நண்பர்கள் உதவியோடு தனது மனைவி மற்றும் மகளை கண்டு பிடிக்கும் அரவிந்தன் அவர்களோடு சந்தோஷமாக வாழும் நிலையில், அவரை சுற்றி மிகப்பெரிய சதி ஒன்று நடக்க, அதில் இருந்து அவர் தப்பித்தாரா? இல்லையா? என்பதுதான் இந்த சினம் கொள் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த சினம் கொள் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் அரவிந்தன் சிவஞானம்.

மிக் மிக அவசரம் மற்றும் ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் விஜயசேதுபதியின் இலங்கை தமிழ் நண்பராக நடித்தவர் தான் இநத நடிகர் அரவிந்தன் சிவஞானம்.

அமுதன் பாத்திரத்தில் நடித்திருக்கும் அரவிந்தன் சிவஞானம், தனது மனைவி மற்றும் மகளையும் தேடி அலையும் அகதியாக தனது கதாபாத்திரத்தின் தன்மையை முழுமையாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

திரைப்படத்தின் ஆரம்பத்தில் தமிழர்களின் அவலங்களையும், அவர்களின் ஏக்கங்களையும் தனது பார்வை மூலமாகவே வெளிப்படுத்தி இருக்கிறார்.

கடைசியில் ஒரு விவசாயி தொழிலாளியாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது சந்திக்க நேர்கிறது.

அப்போது இருவர் முகத்திலும் காட்டியிருக்கும் உணர்ச்சிப் பிரவாகமான எக்ஸ்பிரஷன்ஸ் அருமை. மனைவியையும் குழந்தையையும் பார்த்து அவர்கள் காட்டும் உணர்வுகள் நம் மனதை நெகிழ வைக்கிறது.

இரண்டாம் பாதியில், தன்னை சுற்றி நடக்கும் சதியில் இருந்து மீள்வதற்காக தனது போராளி குணத்தை வெளிக்காட்டும் காட்சிகளில் கவனிக்க வைத்து இருக்கிறார்.

கதாநாயகன் அரவிந்தனின் மனைவியாக நடித்திருக்கும் நர்வினி டெரி, கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு. யாழினி வேடத்தில் நடித்திருக்கும் லீலாவதி, பிரேம், தீபச்செல்வன், வெளிநாட்டு வாழ் தமிழராக நடித்திருக்கும் தனசெயன், பாலா உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

இலங்கையில் போருக்குப் பிறகு நாம் எல்லோரும் நினைப்பது போல அங்கிருக்கும் மக்கள் அமைதி வாழ்க்கை வாழவில்லை என்பதை மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஜோசப்.

ஈழத் தமிழர்களை பற்றிய திரைப்படம் என்றாலே டாக்குமெண்டரி பாணியில் இருக்கும் என்பதை முற்றிலும் மற்றிக்காட்டி முழுக்க முழுக்க ஒரு பரபரப்பான கமர்ஷியல் திரைப்படத்தை பார்த்த அனுபவத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித் ஜோசப்.

எம்.ஆர்.பழனிகுமாரின் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது.

என்.ஆர்.ரகுநந்தன் இசை நம் உணர்வை கிளறுவது போல் உள்ளது.

தீபச்செல்வன் பாடல்களையும், வசனங்களையும் மிக அருமையாக எழுதி இருக்கிறார்.

பாடல் வரிகளில் இலங்கை தமிழ் மக்களின் நிலையை எடுத்துக்காட்டுகிறார்.

இரண்டு மணி நேரம் இலங்கை சென்று அந்தக் காட்சிகளை கண்கூடாக பார்த்துவிட்டு வந்தது போல ஒரு உணர்வு ஏற்படுகிறது.

இலங்கை தமிழர் பற்றிய படம் அதுவும் முழுக்க முழுக்க இலங்கையிலேயே எடுக்கப்பட்டது.

ரத்த வெள்ள வன்முறையாக இருக்கும் என்று நினைத்து திரைப்படம் பார்த்தால் அது போல் எதுவும் இல்லை.

தற்போதைய ஈழ மக்களின் இன்னல்கள் நிறைந்த வாழ்க்கை பின்னணியில், ஒரு முழுமையாக ஜனரஞ்சகமான திரைப்பட பாணியில் சொல்லியிருப்பதே ‘சினம் கொள்’.

மொத்தத்தில், ’சினம் கொள்’ திரைப் ஈழத் தமிழர்களின் தற்போதைய வாழ்க்கை பார்க்கலாம்.

திரைப்படத்தின் OTT link

https://eelamplay.com/ta

error: Content is protected !!