தளபதி 66′ திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக இணையும் பிரபல நடிகை யார் தெரியுமா.?

சென்னை 09 மார்ச் 2022 தளபதி 66′ திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக இணையும் பிரபல நடிகை யார் தெரியுமா.?

தளபதி நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகிவரும் திரைப்படம் பீஸ்ட்.

இந்த பீஸ்ட் திரைப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தற்போது இயக்கி வருகிறார்.

இந்த பீஸ்ட் திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

இந்த பீஸ்ட் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ்  நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த பீஸ்ட் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிக மும்மரமாக நடந்து வருகிறது.

பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்து நடிக்கும் திரைப்படத்தை தோழா திரைப்படத்தை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் திரைப்படத்தில் தளபதி நடிகர் விஜய்  நடிக்கவுள்ளார்.

‘தளபதி 66’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.

தளபதி நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார்.

நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகை குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது.

இந்த நிலையில் ‘தளபதி 66’ திரைப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா ‘தளபதி 66’ திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இவர் நடித்த அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா திரைப்படத்தில் நடித்தார்.

அந்த புஷ்பா திரைப்படம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!