கே.வி.ஆனந்த் இயக்கிய கோ திரைப்படத்தில் முதலில் யார் கதாநாயகன் தெரியுமா.?
சென்னை 12 மே 2021
கே.வி.ஆனந்த் இயக்கிய கோ திரைப்படத்தில் முதலில் யார் கதாநாயகன் தெரியுமா.?
கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக மறைந்த இயக்குனர் கே.வி.ஆனந்தின் ‘கோ’ திரைப்படத்தில் சிலம்பரசன் டிஆர் சில காட்சிகளில் நடித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
கொரோனா பாதிப்பு காரணமாக பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் சமீபத்தில் காலமானார்.
இவர் இயக்கிய திரைப்படங்களில் ஒன்றுதான் ’கோ’. நடிகர் ஜீவா கதாநாயகனாகவும், நடிகை கார்த்திகா கதாநாயகியாகவும் நடித்து வெளி வந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
அந்த திரைப்படத்தில் முதலில் சிலம்பரசன் டிஆர் நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு ஒருசில காட்சிகளும் படமாக்கப்பட்டது.
அதன் பின்னர் ஒரு சில காரணங்களால் சிலம்பரசன் டிஆர் அந்த திரைப்படத்தில் இருந்து விலகியதை அடுத்து நடிகர் ஜீவா இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக இணைந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் கே.வி ஆனந்துக்கு இரங்கல் அறிக்கை வெளியிட்ட சிம்பு, ‘கோ’ திரைப்படத்தை மிஸ் செய்தது தனக்கு வருத்தமானது என்றும் ஆனால் கண்டிப்பாக விரைவில் அவருடன் பணிபுரிந்த திட்டமிட்டிருந்தேன் என்றும் ஆனால் அவர் மறைந்துவிட்டார் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ‘கோ’ திரைப்படத்தில் சிலம்பரசன் டிஆர் பணியாற்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.











