வான மூன்று இனையத்தொடர் விமர்சனம் ரேட்டிங் :- 3.25/5..

நடிகர் & நடிகைகள் :- ஆதித்ய பாஸ்கர், அம்மு அபிராமி, வினோத் கிஷன், அபிராமி வெங்கடாசலம், டெல்லி கணேஷ், லீலா சாம்சன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஏஎம்ஆர் முருகேஷ்.

ஒளிப்பதிவு :- சார்லஸ் தாமஸ்.

படத்தொகுப்பு :- அஜய் மனோஜ்.

இசை :- R2 BRO’S.

தயாரிப்பு நிறுவனம் :-  சினிமாகாரன்.

தயாரிப்பாளர் :- வினோத் குமார் சென்னியப்பன்.

ரேட்டிங் :- 3.25/5.

தன் காதலித்த காதலி தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் காதல் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஆதித்யா பாஸ்கர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகிறார்.

அதேபோல் தான் காதலித்த காதலன் தன்னை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணை காதலிப்பதால் காதல் தோல்வி அடைந்து அம்மு அபிராமி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகிறார்.

இவர்கள் இருவரும் காதல் தோல்வியில் தற்கொலை செய்து உயிர் பிழைக்கும் இவர்கள் இருவரும் மீண்டும் காதலிக்க வான் மூன்றில் முதலாவது.

நறபது ஆண்டு காலம் இல்லற வாழ்க்கையை இனிமையாய் வாழ்ந்து கழித்து வயது முதிர்ந்த தம்பதிகளில் தன் மனைவி லீலா சாம்சன் இதயத்தில் உள்ள வால்வில் அடைப்பு எறப்பட, அறுவை சிகிச்சைக்கு தன் பெற்ற மகனிடம் இருந்து பண உதவி கிடைக்கும் என்று நம்பிக்கையில் சென்று கிடைக்காமல் ஏமாற்றத்துடன் ஏக்க பெரு மூச்சுடன் திரும்பும் கணவன், டெல்லி கணேஷ் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்.

தன் மனைவியுடைய இதய ஆபரேஷனுக்கு பணம் கிடைக்காமல் கஷ்டப்படும் வயது முதிர்ந்த ஜோடியின் மான் மூன்றில் இரண்டாவது.

தான் காதலித்த காதலன் வினோத் கிஷனை வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டு அபிராமி வெங்கடாசலம் இனிமையாக பத்து மாத காலம் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்கள் சந்தோஷமான வாழ்க்கையில் திடீரென அபிராமி வெங்கடாசலத்துக்கு மூளையில் அடைப்பு ஏற்பட  இவர்கள் படும் அவஸ்தை வான் மூன்றில் மூன்றாவது.

இந்த வான் முன்று கதைகளிலும் ஆதித்யா பாஸ்கர் அம்மு அபிராமி மீண்டும் காதல் கை கூடியதா? தன் மனைவியின் இதய ஆபரேஷனுக்கு பணம் கிடைத்ததா? கிடைக்கவில்லையா? அபிராமி வெங்கடாசலத்துக்கு மூளையில் சிகிச்சை செய்து அடைப்பை சரி செய்தார்களா? சரி செய்யவில்லையா? என்பதுதான் இந்த வான் மூன்று இணைய தொடரின் மீதிகதை.

சுஜித் குமார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆதித்யா பாஸாகரின் நடிப்பு அந்தக் கதாபத்திரத்துக்கு எந்த அளவு தேவையோ அந்த அளவுக்கு நடித்திருக்கிறார்.

சுவாதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அம்மு அபிராமியின் நடிப்பும் அந்த கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதை மட்டும் மிக அழகாக கொடுத்திருக்கிறார்.

ஜோஸ்வா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வினோத் கிஷன், தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

ஜோதி மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிராமி வெங்கடாசலம் அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

சிவம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டெல்லி கணேஷ் தனது அனுபவ நடிப்பை மிகவும் அழகாக கொடுத்திருக்கிறார்.

சித்ரா கதாபத்திரத்தில் வரும் லீலா சாம்சன் மிகவும் அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இதில் நடித்த அனைவருமே அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார்கள்.

ஒளிப்பதிவாளர் சார்லஸ் தாமஸின் ஒளிப்பதிவு மருத்துவமனைக்கு நடக்கும் அனைத்து காட்சிகளையும் மிகவும் அருமையாக காண்பித்திருக்கிறார்.

இசையமைப்பாளர் R2bros –ன் இசையும் திரைப்படத்திற்கு மிகப் பெரிய அளவில் வலு சேர்த்துள்ளது.

மூன்று ஜோடிகளின் வாழ்க்கை பதிவை அழகாக எல்லோரும் ரசிக்கும்படி பீல்குட் மூவியாக கொடுத்துள்ளார் இயக்குநர் ஏ.எம்.ஆர் முருகேஷ் பாராட்டுக்கள்.

மொத்தத்தில் இந்த வான் மூன்று இணைய தொடர் மிக அருமையான மூன்று காதல் கதையை மிக அற்புதமாக கொடுத்திருக்கிறார்கள்.

error: Content is protected !!