ஹர்காரா திரைவிமர்சனம் ரேட்டிங்:- 2.5/5
நடிகர் & நடிகைகள் :- ராம் அருண் காஸ்ட்ரோ, காளி வெங்கட், கௌதமி சௌத்ரி, ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி, ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், நிக்கோலா ஃபஸ்டர், பாலு போஸ், அம்பேட், குலோத்துங்கன், செந்தில், ‘கயல்’ விஜயலட்சுமி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ராம் அருண் காஸ்ட்ரோ.
ஒளிப்பதிவு :- பிலிப் ஆர்.சுந்தர் – லோகேஷ் இளங்கோவன்.
படத்தொகுப்பு :- டானி சார்லஸ்
இசை :- ராம்சங்கர்.
தயாரிப்பு நிறுவனம் :- கலர்ஃபுல் பீட்டா.
தயாரிப்பாளர்கள் :- என்.ஏ.ராமு / சரவணன் பொன்ராஜ்
இணை தயாரிப்பாளர்: அரவிந்த் தர்மராஜ் / தீனா.
ரேட்டிங் :- 2.5/5.
தேனி மாவட்டத்தின் மலை கிராமமான கீழ் மலையில் உள்ள தபால் நிலையத்தில் புதிய போஸ்ட் மேனாக வேலைக்கு சேருக்கிறார் காளி வெங்கட்.
மக்கள் இவர் மீது அன்பு வைத்திருந்தாலும் இந்த கிராமத்தில் பணி செய்ய இவருக்கு விருப்பமில்லை.
சிறு சேமிப்பு பணத்தை அடிக்கடி கடன் கேட்கும் ஊர் மக்கள், துணி எடுக்கக் கூட டவுனுக்கு செல்ல வேண்டிய சிரமம், இதைவிட முக்கியமாக மலை காட்டில் வசிப்பதால், 33 வயதாகியும் திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை என்ற மன வேதனையுடன் கோபம் எல்லாம் காளி வெங்கட்க்கு மனதளவில் பாதிக்கப்படுகிறார்.
தபால் நிலையத்தை எப்படியாவது மூடிவிட வேண்டும் என கலெக்டருக்கு மனு போடுகிறார்.
எப்படியாவது இந்த ஊரில் இருக்கும் தபால் நிலையத்தை மூடிவிட்டு, வேறு இடத்திற்கு பணி மாற்றம் வாங்கிச் செல்ல வேண்டும் என திட்டமிடுகிறார்.
அதே சமயம் மலை உச்சியில் வசிக்கும் வயதான மூதாட்டி மாரியம்மாளுக்கு ஒரு கடிதத்தைக் கொண்டு சேர்க்கும் பொறுப்பு தபால்காரர் காளி வெங்கட்டுக்கு வந்து சேர்கிறது.
அந்த வயதான மூகாட்டிக்கு கடிதம் கொடுக்க மலையேறி செல்லும் வழியில் ஊர் பெரியவர் ஒருவர் பழக்கம் ஏற்படுகிறது.
இந்த சூழ்நிலையில் ஊர் பெரியவர் ஒருவர் மூலம் 150 ஆண்டுகளுக்கு முன் இருந்த உலகில் முதல் தபால்காரர் `ஹர்காரா’ (ஆங்கிலேயர்களின் அரசாங்க தபால்காரர்) மாதேஷ்வரன் பற்றி காளி வெங்கட் தெரிந்து கொள்கிறார்.
அவரின் கதை என்ன? உலகின் முதல் தபால்காரம் மாதேஸ்வரன் கொடுமைகளைப் பற்றி கேட்ட பின் காலி வெங்கட்டின் மனநிலையில் மாற்றம் வருவதற்கான காரணம் என்ன என்பதுதான் இந்த ஹர்காரா
திரைப்படத்தின் மீதிக்கதை.
மாதேஷ்வரன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராம் அருண் காஸ்ட்ரோ, கட்டுமஸ்தான தோற்றத்தில் நடிப்பு மற்றும் ஆக்சன் காட்சிகளில் அசத்துகிறார்.
தபால்காரனாக நடித்திருக்கும் காளி வெங்கட் மிகவும் அருமையாகவும் அற்புதமாகவும் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
காளி வெங்கட் நடிப்பை பொறுத்தவரை நெகிழ்ச்சியான காட்சி, குற்றவுணர்வை வெளிப்படுத்தும் காட்சியில் நடிப்பின் மூலம் அசத்துகிறார்.
கங்காணி கதாப்பாத்திரத்தில் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் நடிப்பு ஒரு வில்லன் ரோலில் சொன்னதை கச்சிதமாக செய்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர்கள் பிலிப் ஆர்.சுந்தர் மற்றும் லோகேஷ் இளங்கோவன் ஒளிப்பதிவின் மூலம் இயற்கை சார்ந்த இடங்களை இயல்பாகக் காட்டியிருக்கிறது.
இசையமைப்பாளர் ராம்சங்கர் இசை மற்றும் பாடல்கள் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறார்.
நல்ல கதையாக இருந்தாலும் திரைப்படம் மிகவும் மெதுவாக நகர்கிறது.
போதிய அழுத்தமும் அர்த்தமும் நிறைந்த திரைக்கதையாக திரைப்படத்தை இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ உருவாக்கியிருந்தால் ஹர்காராவை மிகப்பெரிய அளவில் பாராட்டியிருக்கலாம்.
மொத்தத்தில் ஹர்காரா திரைப்படம் புதிய முயற்சிக்காகப் பாராட்டலாம்.











