சான்றிதழ் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 1.5/ 5.

நடிகர் & நடிகைகள் :- ஹரிகுமார், ரோஷன் பஷீர், ராதாரவி, அபு கான், ரவிமரியா, மனோபாலா, அருள்தாஸ், கவுசல்யா ஆஷிகா அசோகன், தனிஷா. குப்பாண்ட, ஆதித்யா கதிர், ஜான்சன் ஆலப்பட்டு, சி.ரங்கநாதன், சுப்புராஜ், விஷ்வா, நாஞ்சில். பி.எஸ். ராபர்ட், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஜே.வி.ஆர்.

ஒளிப்பதிவு :- எஸ்.எஸ்.ரவிமாறன் சிவன்.DFT.

படத்தொகுப்பு :- .எஃப்.காஸ்ட்ரோ.

இசை :- பைஜு ஜேக்கப்.

தயாரிப்பு நிறுவனம்:- வெற்றி வேல் சினிமாஸ்.

தயாரிப்பாளர்கள் :- ஏஸ்.ஜெ.ஏஸ். சுந்தரம் & ஜே.வி.ஆர்.

ரேட்டிங் :- 1.5/ 5.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கருவறை கிராமத்தில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் தனி சட்டங்களை வகுத்துக் கொண்டு , ஒற்றுமையாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.

கருவறை கிராமத்தின் சிறப்பை தெரிந்து கொண்ட மத்திய அரசு சிறந்த கிராமத்திற்கான விருதை அறிவிக்கிறது.

மத்திய அரசு அறிவித்த விருதை கிராம மக்கள் பெற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

இதனால், கோபமடையும் அமைச்சர் ராதாரவி கருவறை கிராமத்தின் மீது களங்கம் ஏற்படுத்தி கெட்ட பெயரை உண்டு பண்ணுவதற்கு முயற்சிக்கிறார்.

அமைச்சர் ராதாரவி அந்த கிராமத்தின் மீது களங்கம் ஏற்படுத்தும் முயற்சிகளும், கிராம மக்கள் விருதை வாங்க மறுக்கும் காரணமும், ஒரு பக்கம் இருக்க, தறுதலை கிராமமாக இருக்கும் அந்த கிராமத்தை கருவறை கிராமமாக மாற்றியதற்கு ஹரிகுமார் மிகப்பெரிய தியாகத்தையும், அவர் தனது கருவறை கிராமமாக உருவாக்க ஹரிகுமார் எதையெல்லாம் இழந்தார் என்பதுதான் இந்த ‘சான்றிதழ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த சான்றிதழ் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஹரிகுமார் நடித்திருக்கிறார்.

வெள்ளச்சாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹரிகுமார் மிக அருமையான கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

கருவறை கிராமத்து இளைஞராக நடித்திருக்கும் ரோஷன் பஷீர் அருமையாக நடித்திருக்கிறார்.

நிருபராக வரும் ஆஷிகா அசோகன் நடிப்பு மிக சிறப்பாக உள்ளது.

அமைச்சர் வேடத்தில் நடித்திருக்கும் ராதாரவி அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்.

வெள்ளச்சாமியின் நண்பராக வரும் அருள்தாஸ், நடிகை கெளசல்யா ஆகியோர் தங்களது நடிப்பு மூலம் திரைப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ரவி மரியா வில்லத்தனமாகவும், நல்லத்தனமாகவும் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்க்கிறார்.

மனோபாலா அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்.

தனிஷா குப்பண்டா, ஆதித்யா கதிர், காஜல் பசுபதி, உமா ஸ்ரீ என படத்தில் நடித்திருக்கும் மற்ற கதாபாத்திரத்திரங்கள் கொடுத்த வேலையை கொஞ்சம் அதிகமாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எஸ்.எஸ்.ரவிமாரன் சிவன், முழு கிராமத்தையும், பாடல் காட்சிகளையும் அழகியலோடு திரைப்படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார்.

படத்தொகுப்பாளர் ஜெ.எப். காஸ்ட்ரோ படத்தொகுப்பு அருமையாக உள்ளது.

இசையமைப்பாளர் பிஜு ஜேக்கப்பின் இசையில் பாடல்கள், பின்னணி இசை சுமார் ரகம்.

தற்போதைய காலக்கட்டத்தில் கனவில் நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு கிராமத்தை கதையாக்கி, அதற்கு கமர்ஷியலாக திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் இயக்குநர் ஜே.வி.ஆர்.

மொத்தத்தில் சான்றிதழ் திரைப்படத்திற்கு சான்றிதழ் கொடுத்தால் சான்றிதழ்க்கு மரியாதை இருக்காது.

error: Content is protected !!