தண்டட்டி திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3.75./ 5.
நடிகர் & நடிகைகள் :- பசுபதி, ரோகிணி, விவேக் பிரசன்னா, முகேஷ், தீபா சங்கர், பூவிதா, ஜானகி, செம்மலர் அன்னம், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ராம் சங்கையா.
ஒளிப்பதிவு :- மகேஷ் முத்துசுவாமி.
படத்தொகுப்பு :- சிவா நந்தீஸ்வரன்.
இசை :- கே.எஸ்.சுந்தரமூர்த்தி.
தயாரிப்பு நிறுவனம் :- பிரின்ஸ் பிக்சர்ஸ்.
தயாரிப்பாளர் :- எஸ்.லக்ஷ்மன் குமார்.
ரேட்டிங் :- 3.75./ 5.
தேனி மாவட்டத்திலுள்ள கிடாரிப்பட்டி என்னும் கிராமத்தை சேர்ந்த சிறுவன் முகேஷ காணாமல் போன தனது 57 வயது அப்பத்தா ரோகிணியை கண்டுபிடித்து தருமாறு காவல் நிலையத்தில் உள்ள பசுபதியிடம் புகார் கொடுக்க உடனடியாக முயற்சி செய்து பசுபதி ரோகிணியை தேடி கண்டுபிடித்து விடுகிறார்.
கண்டுபிடிக்கப்பட்ட அப்பத்தா ரோகிணியை பத்திரமாக வீட்டுக்கு அழைத்துச் செல்ல முயற்சிக்கும் போது அப்பத்தா ரோகிணி இறந்து விடுகிறார்.
புகார் அளித்த சிறுவன் முகேஷ வேண்டுகோள்படி இறந்து போன அப்பத்தா ரோகிணியின் உடலை கிடாரிப்பட்டிக்கு பசுபதி எடுத்து சொல்கிறார்.
இறந்த தாய் அப்பத்தா ரோகிணியின் காதில் இருக்கும் தண்டட்டியை ஆட்டைய போடுவதற்கு அவரது பிள்ளைகள் திட்டம் போட, திடீரென்று அப்பத்தா ரோகிணியின் காதலில் இருந்து தண்டட்டி காணாமல் போய்விடுகிறது.
இதனால் இறந்த தாய் அப்பத்தா ரோகிணிக்கு ஒரு மகன் மற்றும் நான்கு மகள்கள அவர்களுக்குள் தண்டட்டியை யார் எடுத்தது என மிகப்பெரிய பிரச்சனைகள் உருவாகிறது.
காணாமல் போன தண்டட்டியை கண்டுபிடிக்கும் முயற்சியில் பசுபதி இறங்குகிறார்.
அதனால் பசுபதிக்கு பல்வேறு பிரச்சனைகள் வருகிறது.
அந்த பிரச்சனைகளை அனைத்தையும் சமாளித்து, தண்டட்டியை பசுபதி எப்படி கண்டுபிடிக்கிறார்.
அதை திருடியது யார், அப்பத்தா ரோகிணி காணாமல் போனது ஏன், எப்படி இறந்து விடுகிறார் தண்டட்டி யாருக்கு சொந்தம் என்பதை நகைச்சுவையோடும், காதலோடும் சொல்லியிருப்பது தான் இந்த ‘தண்டட்டி’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த தண்டட்டி திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் பசுபதி நடித்திருக்கிறார்.
காவல்துறையில் பணிபுரியும் சுப்பிரமணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பசுபதி, அனுபவ நடிப்பில் மொத்த திரைப்படத்தையும் தனது தோளில் சுமந்திருக்கிறார்.
காணாமல் போன அப்பத்தா ரோகிணியை கண்டுபிடிப்பதற்காக கதைக்குள் வரும் பசுபதி, அப்பத்தா ரோகிணியின் இறுதி சடங்கு வரை உடனிருக்க வேண்டிய சூழ்நிலையில் கிடாரிப்பட்டி ஊர் மக்களால் சிக்கிக்கொண்டு தவிப்பதும், விழி பிதுங்கி நிற்பதும் திரைப்படம் பார்க்கும் நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது.
எதிர்பாராத கிளைமாக்ஸ் காட்சி பசுபதி தவிர வேறு யாராவது நடித்திருந்தால் காமெடி ஆகி இருக்கும். அந்த அளவுக்கு சிறப்பு சேர்த்திருக்கிறார் பசுபதி.
இந்த தண்டட்டி திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ரோகினி நடித்துள்ளார்.
தங்கப்பொண்ணு கதாபாத்திரத்தில் 57 வயது மூதாட்டியாக நடித்திருக்கும் ரோகிணி, தன் அனுபவமான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
இளம் வயது ரோகிணியாக நடித்திருக்கும் அம்மு அபிராமி, சிறிது நேரம் வந்தாலும், அவரது கதை ரசிகர்கள் மனதிற்கு பாதிக்கும்படி அமைந்துள்ளது.
அப்பத்தா ரோகிணியின் ஒரே குடிகார மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விவேக் பிரசன்னா, தனது கதாபாத்திரத்தை கவனமாக கையாண்டு ரசிகர்கள் கவனத்தை, ஈர்த்துள்ளார்.
இருந்தாலும், தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் மிக அருமையாக நடித்திருக்கிறார்.
அப்பத்தா ரோகிணியின் மகள்களாக நடித்திருக்கும் தீபா சங்கர், பூவிதா, ஜானகி, செம்மலர் அன்னம் ஆகியோருக்கு வழக்கமான கிராமத்து கதாபாத்திரங்கள் என்றாலும், அவரவர் கதாபாத்திரத்தை மிகவும் நிறைவாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவு கிராமத்து சடங்குகளையும், கிராமத்து மக்களையும் ஒளிப்பதிவின் மூலம் மிகவும் இயல்பாக படமாக்கியிருக்கிறது.
இசையமைப்பாளர்
கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றவாறு மிக அருமையாக பயணித்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் சிவா நந்தீஸ்வரன் தண்டட்டியை சுற்றி நடக்கும் சம்பவங்களை நேர்த்தியாக படத்தொகுப்பின் மூலம் தொகுத்திருக்கிறார்
காதில் இருக்கும் தண்டட்டியை மையமாக வைத்து எழுதிய கதையை திரைக்கதையின் மூலம் நகைச்சுவையாக நகர்த்தி சென்றாலும், அதனுள் உணர்ச்சிக்கரமான இரண்டு காதல் கதைகளை மிக அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராம் சங்கையா.
கிராம மக்களின் எதார்த்தமான நடிப்பு, இயல்பான கதைக்களம் மற்றும் காமெடி காட்சிகள் மூலம் படம் முழுவதையும் ஜாலியாகவும், நகைச்சுவையாகவும் நகர்த்தி செல்லும் இயக்குநர் ராம் சங்கையா,
மொத்தத்தில், இந்த ‘தண்டட்டி’ குடும்பத்துடன் திரையரங்கில் சென்று கண்டுக்களிக்க வேண்டிய திரைப்படம் தண்டட்டி.!!











