எக்கோ திரைவிமர்சனம் ரேட்டிங் :- 2.75./ 5.

நடிகர் & நடிகைகள் :- ஸ்ரீகாந்த், ஆசிஷ் வித்யார்த்தி, வித்யா பிரதீப், பூஜா ஜாவேரி, காளி வெங்கட், ஸ்ரீநாத், கும்கி அஷ்வின், டெல்லி கணேஷ், பிரவீணா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- நவின் கணேஷ்.

ஒளிப்பதிவு :- கோபிநாத்.

படத்தொகுப்பு :- சுதர்சன்.

இசை :- நரேன் பாலகுமார்.

தயாரிப்பு நிறுவனம்:- ஸ்ரீ விஷ்ணு விஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- டாக்டர்.ராஜசேகர்

ரேட்டிங் :- 2.75./ 5.

ஐடி கம்பெனியில் பணியாற்றும் கதாநாயகன் ஸ்ரீகாந்த், தனது மனைவி பூஜா ஜாவேரியுடன் வாழ்ந்து வருகிறார்.

கதாநாயகன் ஸ்ரீகாந்த் தனது மனைவியோடு இல்லற வாழ்வில் நுழையும் சமயம் சில பல அதிர்ச்சிகளைச் சந்திக்கிறார்.

திடீரென்று சில அமானுஷ்ய சம்பவங்களால் நிம்மதி இல்லாமல் தவிக்கும் கதாநாயகன் ஸ்ரீகாந்தின், மாற்றத்தைக் கண்டு கோபமடையும் பூஜா ஜாவேரி அவரை விட்டு பிரிந்து செல்கிறார்.

அதற்கான தீர்வைத் தேடி பேய்கள் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியாளரும் ஆலோசகருமான ஆசிஸ் வித்யார்த்தியை கதாநாயகன் ஸ்ரீகாந்த் சந்திக்கிறார்.

அவருக்கு நடந்தது பற்றி ஆசிஷ் வித்தியார்த்தி விசாரிக்கும் போது, தனக்கு நடப்பவை அனைத்தும் தனது முதல் மனைவிக்கு நடந்திருக்கிறது என்று கதாநாயகன் ஸ்ரீகாந்த் கூறுகிறார்.

அவருடைய முதல் மனைவி யார்? அவருக்கும், தற்போது கதாநாயகன் ஸ்ரீகாந்த் ஆசிஸ் வித்தியார்த்தியிடம் விவரிக்கும் விசயங்களும், அதற்குப் பின்னால் மறைந்துள்ள நிஜங்களும் தான் என்பதை சொல்வது தான் இந்த ‘எக்கோ’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இநத எக்கோ திரைப்படத்தில் கதாநாயகனாக ஸ்ரீகாந்த் நடித்துள்ளார்.

கதாநாயகன் ஸ்ரீகாந்த், பல வேறு திகில் திரைப்படங்களில் நடித்திருந்தாலும், இந்த திரைப்படத்தில் கதாபாத்திரத்திற்கு நியயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.

கதாநாயகிகளாக நடித்திருக்கும் வித்யா பிரதீப் மற்றும் பூஜா ஜாவேரி இருவரும் கதைக்குள் பயணிக்கும் கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறார்கள்

தனது அனுபவமான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கும், ஆசிஷ் வித்தியார்த்தி இநத திரைப்படத்திற்க்கு பலம் சேர்த்திருக்கிறார்.

இநத எக்கோ திரைப்படத்தில் நடித்திருக்கும் காளி வெங்கட், பிரவீனா, கும்கி அஷ்வின், ஸ்ரீநாத் அனைத்து நடிகர்களும் அவர் அவர் வேலையை மிகவும் சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கோபிநாத்தின் ஒளிப்பதிவு கிராபிக்ஸ் காட்சிகள் இல்லாமலேயே அவருடைய அனுபவத்தால் மிரட்டுகிறார்.

கதாபாத்திரங்களின் பயத்தை மட்டுமே வைத்துக்கொண்டு ரசிகர்களையும் பயப்பட வைக்கும் விதத்தில் காட்சிகளை ஒளிப்பதிவின் மூலம் திரைப்படமாக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர் நரேன் பாலகுமாரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றவாறு பயணித்துள்ளது.

பேய் கதையை அறிவியல் பின்னணியில் திகில் கதையை வித்தியாசமான முறையில் சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் நவீன் கணேஷ்க்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் எக்கோ திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் புதிய அனுபவத்தை கொடுக்கும்.

error: Content is protected !!