மூத்தகுடி திரைவிமர்சனம் ரேட்டிங்:- 1.5/5.

நடிகர் & நடிகைகள் :- தருண் கோபி, பிரகாஷ் சந்திரா, அன்விஷா, K.R. விஜயா, R.சுந்தர்ராஜன், ராஜ்கபூர், யார் கண்ணன், சிங்கம் புலி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ரவி பார்கவன்.

ஒளிப்பதிவாளர் :-
கந்தா ரவிச்சந்திரன்.

படத்தொகுப்பாளர் :- ஆர்.வளர்பாண்டி.

இசையமைப்பாளர் :- ஜெ.ஆர் . முருகானந்தம்.

தயாரிப்பு நிறுவனம்:- தி ஸ்பார்க் லேண்ட்.

தயாரிப்பாளர் :- பிரகாஷ் சந்திரா.

ரேட்டிங் :- 1.5./ 5.

மூத்த குடி குடும்பத்தில் கே.ஆர்.விஜயா மற்றும் குடும்பத்தாருடன், ஊர் மக்கள் சிலர் சேர்ந்து குலசாமி கோவிலில் பூஜை நடத்த செல்கிறார்கள்.

பூஜை நடத்த செல்லும்போது கே.ஆர்.விஜயாவின் மகன், மருமகன் மற்றும் லாரி ஓட்டுநர் சேர்ந்து சாராயம் குடிக்க செல்கிறார்கள்.

லாரி ஓட்டுநர் போதையில் வண்டியை ஓட்ட அந்த லாரி பெட்ரோல் டேங்க் வெடித்து விபத்துக்குள்ளாகி அதில் இருந்தவர்கள் அனைவரும் உயிரிழந்து விடுகிறார்கள்.

கே.ஆர்.விஜயாவின் தம்பி யார் கண்ணன் மற்றும் தருண் கோபி, பிரகாஷ் சந்திரா, மட்டும் அந்த விபத்தில் இருந்து உயிர் தப்பிக்கிறார்கள்.

இப்படி ஒரு சோகமான சம்பவத்திற்கு காரணமான சாராயத்தை ஒழித்துக்கட்ட முடிவு செய்கிறார் கே.ஆர்.விஜயா இந்த போற சம்பவத்திற்கு பிறகு இந்த கிராமத்தில் கட்டுப்பாடு போடுகிறார்.

மூத்தகுடி வம்சத்தை சேர்ந்த கே ஆர் விஜயா, தனது ஊர் மக்களுக்கு ஒரு ஆணை ஒனறை பிறப்பிக்கிறார்.

இந்த ஊருக்குள் யாரும் சாராயம் குடிக்கக் கூடாது விற்பனை செய்யக்கூடாது மற்றும், சாராயத்தை காய்ச்சவும் கூடாது என்றும் அந்த கிராமத்து மக்களுக்கு ஆணை இடுகிறார்.

மூத்தகுடி குடும்பத்தில் உள்ள கே ஆர் விஜயா கட்டளையை, ஊர் மக்கள் அனைவரும் அந்த யாரும் சாராயம் அருந்த அனுமதியில்லை.

அப்படியே அந்த ஊர் மக்கள் யாராவது சாராயம் குடித்துவிட்டு வந்தால் சாராயம் குடித்தவரை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது தான் அந்த ஊரில் உள்ள மூத்த குடி குடும்பத்தில் உள்ள கே.ஆர். விஜயாவின் தீர்ப்பு.

இந்நிலையில், மூத்த குடி குடும்பத்தில் உள்ள கே ஆர் விஜயாவின் பேரன்களாக வரும் கதாநாயகன்கள் தருண் கோபி மற்றும் பிரகாஷ் சந்திரா இருவரும் தங்களது முறைப் பெண்ணான கதாநாயகி அன்விஷாவை தருண்கோபிக்கு திருமணம் செய்து வைக்க கே ஆர் விஜயா முடிவு செய்ய
அந்த முடிவில் கதாநாயகி அன்விஷாவிற்க்கு தருண் கோபியை பிடிக்காமல் போக தனக்கு பிரகாஷ் சந்திராவை தான் பிடிக்கிறது என கூற
மிகப்பெரிய அளவில் பிரச்சனை ஏற்பட தருண் கோபி தடம் மாறுக்கிறார்.

இதனால் தருண் கோபி வில்லனாக வரும் தொழிலதிபர் ராஜ்கபருடன் சேர்கிறார்.

அதன் பிறகு அந்த கிராமத்தில் என்ன நடந்தது என்பதுதான் இந்த மூத்தகுடி திரைப்படத்தின் மீதிக் கதை.

இந்த மூத்தகுடி திரைப்படத்தில் கதாநாயகனாக பிரகாஷ் சந்திரா நடித்திருக்கிறார்.

மற்றொரு கதாநாயகனாக தருண் கோபி நடித்திருக்கிறார்.

கதாநாயகர்கள் இருவரும் தங்களால் முடிந்த அளவில் நடிப்பை இதில் கொடுத்துள்ளனர்.

அதிலும் கதாநாயகன் பிரகாஷ் சந்திரா தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை அளவோடு செய்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் பிரகாஷ் சந்திரா எந்த வித உணர்ச்சிகளையும் முகத்தில் காட்ட தெரியாமல் தடுமாறுகிறார்.

மற்றொரு கதாநாயகன் தருண் கோபி ஆங்காங்கே ஓவர் ஆக்டிங்கை கொடுத்து காட்சிகளை கெடுத்து வைத்திருக்கிறார்.

தருண் கோபி, உணர்ச்சிகரமான நடிப்பை மிக மிக அதிகப்படியாக வெளிப்படுத்தி பார்வையாளர்களை பதம் பார்த்து விடுகிறார்.

அவருடைய ஓவர் ஆக்டிங்கால் ஏற்படும் தலைவலி மாத்திரை போட்டாலும் நிற்காது,

அந்த அளவுக்கு  மனுஷன் ரசிகர்களை தன் நடிப்பால் கொடுமைப்படுத்தி விடுகிறார்.

இந்த மூத்த குடி திரைப்படத்தில் கதாநாயகியாக அன்விஷா நடித்துள்ளார் ‌

கதாநாயகியாக நடித்திருக்கும் அன்விஷாவின் நடிப்பும் சுமாராக இருக்கிறது.

பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயாவின் அனுபவ நடிப்பு சற்று ஆறுதல் அளித்திருக்கிறது,

ஆர்.சுந்தரராஜன் – சிங்கம் புலி காமெடி ட்ராக் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கடுப்பேற்றுகிறது.

யார் கண்ணன் பழைய சோறு கதாபாத்திரத்தில் தேவையற்றது.

வில்லனாக வரும் ராஜ்கபூர் வழக்கமான வேலையை சரியாக செய்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் கந்தா ரவிசந்திரனின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.

இசையமைப்பாளர்  ஜே.ஆர். முருகானந்தத்தின் இசையும் பட்ஜெட்டுக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.

இசையமைப்பாளர்  ஜே.ஆர். முருகானந்தத்தின் பின்னணி இசை கதையோடு பயணிக்கும் அளவிற்கு கொடுத்திருக்கிறார்.

மது பழக்கத்தினால் மக்கள் எப்படி சீரழிந்து போகிறார்கள் என்பதையும், அப்படிப்பட்ட மதுவை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதையும் பேசும் சமூக அக்கறைக்கொண்ட கதையாக இருந்தாலும், அதற்கு திரைக்கதை அமைத்த விதம் அலங்கோலமாக இருக்கிறது.

சமூகத்திற்கு தேவையான விசயத்தை கதையாக்கி அதனுடன் காதலை சேர்த்து கமர்ஷியல் திரைப்படமாக கொடுக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் ரவி பார்கவன், தான் சொல்ல வந்த நல்ல கருத்தை மக்களிடம் சொல்வதற்கு தவறிவிட்டார்.

மொத்தத்தில் – மதுவை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை திரைப்படம் பதிவு செய்தாலும், திரைப்படத்தை பார்ப்பவர்கள் கடுப்பாகி மதுவை தேடி போவது நிச்சயம் என தெரிகிறது

error: Content is protected !!