பார்க்கிங் திரைவிமர்சனம் ரேட்டிங்:-3.25/5.

நடிகர் & நடிகைகள் :- ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ். பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளங்கோ,
மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ராம்குமார் பாலகிருஷ்ணன்.

ஒளிப்பதிவாளர் :- ஜிஜு சன்னி.

படத்தொகுப்பாளர் :- பிலோமின் ராஜ்.

இசையமைப்பாளர் :- சாம் சி.எஸ்.

தயாரிப்பு நிறுவனம் :- பேஷன் ஸ்டுடியோஸ்

தயாரிப்பாளர்கள் :- கே.எஸ். சினிஷ் – சுதன் சுந்தரம்.

ரேட்டிங் :- 3.25./ 5.

சென்னையில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணி புரிந்து வரும் கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் தனது மனைவி கதாநாயகி இந்துஜாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.

கதாநாயகி இந்துஜா கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் புதிதாக ஒரு வீட்டிற்கு குடி பெயர்கின்றனர்.

கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் குடிவரும் அந்த வீட்டின் தரைத்தளத்தில் அரசு ஊழியரான எம்.எஸ்.பாஸ்கர் தனது மனைவி மற்றும் மகளுடன் பத்து ஆண்டுகாலமாக அதே வீட்டில் வசித்து வருகிறார்.

கர்ப்பமாக உள்ள தன் மனைவி கதாநாயகி இந்துஜாவை வெளியில் அழைத்துச் செல்ல சிரமமாக இருப்பதால் புதியதாக காரை ஒன்றை வாங்குகிறார் கதாநாயகன் ஹரிஷ் கல்யாண்.

அந்த வீட்டு வாசலில் கார் நிறுத்தும் போது கதாநாயகன் ஹரிஷ் கல்யாணுக்கு எம்.எஸ் பாஸ்கருக்கும் இடையே கார் நிறுத்துவதில் மிகப்பெரிய அளவில் பிரச்சனை ஏற்படுகிறது.

இந்த சாதாரண பார்க்கிங் பிரச்சனை இருவரின் வாழ்விலும் எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்துகிறது.

கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் காரை அந்த வீட்டில் உள்ள பார்க்கிங்கில் நிறுத்தினாரா? நிறுத்தவில்லையா? எம் எஸ் பாஸ்கர் காரை அவர் வீட்டு வாசலில் உள்ள பார்க்கிங்கில் நிறுத்த விட்டாரா? நிறுத்தவிடவில்லையா? என்பதுதான் இந்த பார்க்கிங் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த பார்க்கிங் திரைப்படத்தில் கதாநாயகனாக ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கிறார்.

சாக்லேட் பாய் போல திரைப்படங்களில் நடித்து வரும் கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் சிறிது வில்லனிஷம் கொண்ட கோபக்கார இளம் வயது கதாபாத்திரத்தில் மிக அருமையாகவும் சிறப்பாகவும் நடித்துள்ளார்.

இந்த பார்க்கிங் திரைப்படத்தில் கதாநாயகி இநதுஜா மிக அருமையாக நடித்துள்ளார்.

கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் மனைவியாக வரும் கதாநாயகி இந்துஜா ஒரு கர்ப்பிணி பெண்ணாக ரசிக்க வைக்கிறார்.

குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் கதாநாயகி இந்துஜாவின நடிப்பு பாராட்டு வகையில் உள்ளது.

இந்த பார்க்கிங் திரைப்படத்தில் எதிர் நாயகன் கதாபத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருக்கிறார்.

ஒரு அரசு ஊழியராக எம் எஸ் பாஸ்கர் மீண்டும் தான் ஒரு எப்பேர்ப்பட்ட நடிகன் என்பதை இந்த பார்க்கிங் திரைப்படத்தில் நிரூபித்துள்ளார்.

எட்டு தோட்டாக்கள் திரைப்படத்திற்கு பிறகு பார்க்கிங் திரைப்படத்தின் மூலம் அவருக்கு மிகப்பெரிய அளவில் விருதுகள் காத்துக் கொண்டிருக்கிறது.

நிறைய இடங்களில் டயலாக்குகள் இல்லாமல் தனது கண்களாலேயே நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

நியாயத்தின் பக்கம் நிற்கிறா ஹவுஸ் ஓனர் கதாப்பத்திரத்தில் வரும் இளவரசு மிகச்சில காட்சிகளில் வந்தாலும் அவருடைய அனுபவ நடிப்பு கொடுத்திருக்கிறார்.

எம்.எஸ். பாஸ்கரின் மனைவியாக வரும் ரமா, மற்றும் மகளாக வரும் பிரார்த்தனா என இரண்டு கதாபாத்திரங்களை மிகவும் நேர்த்தியான நடிப்பை கொடுத்து காட்சிகளை மெருகேற்றியிருக்கிறது.

ஒளிப்பதிவாலர் ஜிஜு சன்னி, ஒளிப்பதிவில் ஒரு சம்பவத்தை வைத்து கொண்டு வடிவமைக்கப்பட்ட திரைக்கதையை மிக இயல்பாக திரைப்படமாக்கியிருப்பதோடு, காட்சிகளை அருமையாக நகர்த்தி சென்றிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜின் படத்தொகுப்பு காட்சிகளை விறுவிறுப்பாக, சில இடங்களில் ரசிகர்களை சீட் நுணியில் அமர வைத்து மனதை படபடக்க வைத்து இருக்கிறார்.

இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு என்பதே கிடையவே கிடையாது, ஆனால் மனிதாபிமானத்தோடு ஒருவருக்கொருவர் ஈகோ இல்லாமல் விட்டுக்கொடுத்து சகிப்புத்தன்மையோடு வாழ்ந்தால் இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க முடியும்  என்ற கருத்தை ஆழமாக பதிவு செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன்.

அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் முதல் திரைப்படத்திலேயே தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்துள்ளார்.

மொத்தத்தில் இந்த பார்க்கிங் திரைப்படம் குடும்பத்துடன் சென்று வரலாம்.

error: Content is protected !!