ஒம் வெள்ளி மலை திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3.25/5.

நடிகர் நடிகைகள் :- சூப்பர் குட் R.சுப்ரமண்யன், வீர சுபாஷ் அஞ்சு கிருஷ்ணா, கிரிராஜ், விஜயகுமார், சார்லஸ், கவிராஜ், பழனிச்சாமி மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஓம் விஜய்.

ஒளிப்பதிவு :- மணிப்பெருமாள்.

படத்தொகுப்பு :- சதீஷ் சூர்யா.

இசை :- என்.ஆர்.ரகுநந்தன்.

தயாரிப்பு நிறுவனம் :- சூப்பர் கிரியேஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- ராஜகோபால் இளங்கோவன்.

ரேட்டிங் :- 3.25/5.

சித்தர்கள் மகான்கள் தனித்துவத்தையும், சித்த மருத்துவத்தையும் பேசுகின்ற திரைப்படமாக ‘வெள்ளிமலை’ இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஒம் விஜய்.

மேற்குத் தொடர்ச்சி மலைத் பகுதியில் உள்ள வெள்ளிமலை அடிவாரத்தில் உள்ள கீழ் வெள்ளிமலை கிராமத்தில், பாரம்பரியமாக சித்த வைத்தியர் தனது செல்ல மகள் அஞ்சு கிருஷ்ணாவுடன் வாழ்ந்து வருகிறார் சித்த வைத்தியரான சூப்பர் குட் சுப்பிரமணி.

அந்த கீழ் வெள்ளிமலை கிராம மக்கள் அவரிடம் மருத்துவம் பார்த்துக்கொள்ள மாட்டோம் என்று கிராம மக்கள்.

அடம் பிடிப்பதோடு, அவர் தயாரிக்கும் மருந்துகளையும் கிண்டல் செய்கிறார்கள்

கிராம மக்கள் செய்யும் அவமானங்களை எல்லாம் தங்கி கொள்ளும் சூப்பர் குட் சுப்பிரமணி, ஒருநாள் இந்தக் கிராம மக்கள் தன்னையும் தனது மருத்துவத்தில் மகத்துவத்தையும் மதிப்பையும் உணர்வார்கள் என்று நம்பிக்கையோடு வாழ்ந்து வருகிறார்.

கிராமத்தில் உள்ள ஒருவருக்கு எதிர்பாராத விதமாக சித்த மருந்தை இவர் கொடுக்க கொடுத்த மருந்தினால் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக கூறி அவரின் குடும்பத்திடம் இருந்து கிராம மக்கள் ஒதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஊரில் உள்ள ஒரு சிறுவனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட இதற்கு சித்த வைத்திய மருந்து கொடுக்க சூப்பர் குட் சுப்பிரமணி முயற்சி செய்கிறார்.

பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு இவரிடம் சூப்பர் குட் சுப்பிரமணியிடம் மருந்தை வாங்காமல், மலை மேல் இருந்து கீழே உள்ள மருத்துவமனைக்கு அந்த பாதிக்கப்பட்ட சிறுவனை கொண்டு செல்ல கிராம மக்கள் முயற்சி செய்கிறார்கள்.

ஆனால் மலை மீது இருந்து கீழே உள்ள மருத்துவமனைக்கு செல்வதற்குள் அந்த சிறுவன் இறந்து விடுகிறது.

தான் கூறும் சித்த மருத்துவத்தை கிராம மக்கள் ஏற்றுக் கொள்ளாமல் அனைவரும் உதாசினப்படுத்தியதால் இந்த பாதிக்கப்பட்ட சிறுவன இறந்து விட்டதால் மன வேதனைக்கு ஆளாகிறார் சூப்பர் குட் சுப்பிரமணி.

இதனிடையே அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் திடீரென மிக பயங்கரமான உயிர் போகும் அளவிற்கு உள்ள அரிப்பு நோய் ஒன்று பரவுகிறது.

அதிலிருந்து கிராமத்தில் உள்ள அனைவரும் அந்த பயங்கரமான அரிப்பு நோயிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கின்றனர்.

இறுதியில் அந்த அதி பயங்கரமான அரிப்பு நோய்க்கு சித்த மருத்துவரான சூப்பர் குட் சுப்பிரமணி மருந்து கொடுத்து கிராம மக்களை காப்பாற்றினாரா? காப்பாற்றவில்லையா? என்பதுதான் இநத ஓம் வெள்ளிமலை திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ஒம் வெள்ளிமலை திரைப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் சூப்பர் குட் சுப்பிரமணி நடித்திருக்கிறார்.

சூப்பர் குட் சுப்பிரமணியின் காமெடி கலந்த இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி திரைப்படம் பார்க்கும் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெறுகிறார்.

காமெடி காட்சிகளில் நகைச்சுவை நடிப்பையும் உருக்கமான காட்சிகளில் கண்ணீர் வரவழைக்கும் அளவிற்கு நடிப்பையும் கொடுத்து அனைவரையும் கவர்ந்துள்ள சூப்பர் ஹிட் சுப்பிரமணி.

சூப்பர் ஹிட் சுப்ரமணியின் மகளாக நடித்திருக்கும் அஞ்சு கிருஷ்ணன் இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

மஞ்சு கிருஷ்ணனுக்கு ஜோடியாக நடித்திருக்கும் வீர சுபாஷ் நடிப்பு அருமை.

கிரிராஜ், விஜயகுமார், சார்லஸ், கவிராஜ், பழனிச்சாமி புதுமுக நடிகர்கள் என்ற உணர்வு ஏற்படாதது போன்று இவர்களின் நடிப்பு பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தனின் பாடல்கள் இசையின் மூலம் திரைப்படத்தை கூடுதலாக கவனிக்க வைத்துள்ளார்.

பின்னணி இசையின் மூலம் காட்சிகளை அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்தியுள்ளார்.

மலைச்சார்ந்த எழில் மிகு கிராமத்தின் தோற்றத்தை காட்சிகளை மிகவும் அழகாகவும் அற்புதமாகவும காண்பித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் மணிபெருமாள்.

மறைக்கப்பட்ட சித்தர் மருத்துவத்தை முக்கியதுவம் குறித்து பார்வையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முயற்சித்துள்ளார் இயக்குனர் ஓம் விஜயை பாராட்டலாம் .

மிகவும் எதார்த்தமான கதை மற்றும் திரைக்கதையை அமைத்திருந்தாலும் திரைப்படத்தை ரசிக்கும் படியாக இயக்கி உள்ளார் இயக்குனர் ஓம் விஜய்.

மொத்தத்தில் ஒம வெள்ளிமலை  அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம்.