குடிமகான் திரைவிமர்சனம் ரேட்டிங்:- 2.75 / 5.
நடிகர் & நடிகைகள் :- விஜய் சிவன், சாந்தினி தமிழரசன், சுரேஷ் சக்ரவர்த்தி, நமோ நாராயணன், ஜி.எல் சேதுராமன், . ஜி.ஆர். கதிரவன், . K.P.Y ஹானஸ்ட் ராஜ், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- பிரகாஷ் . என்.
ஒளிப்பதிவு :- மெய்யேந்திரன்.
படத்தொகுப்பு :- ஷிபு நீல் பி ஆர்.
இசை :- தனுஜ் மேனன்.
தயாரிப்பு நிறுவனம் :- சீனரியோ மீடியா ஒர்க்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- எஸ். சிவ குமார் எஸ் . சுகந்தி, எஸ் . பிரபஞ்.
ரேட்டிங் :- 2.75 / 5
நாளைய இயக்குநர் சீசன் 6-ல் ரன்னர் அப் டைட்டில் வின்னர் இயக்குனர் பிரகாஷ்.என்
இயல்பான கதைக் களத்தை, கையில் எடுத்து அருமையான திரைக்கதையை அமைத்து புதிய நடிகர்களையும் வைத்துக் கொண்டு நிறைவான ஒரு திரைப்படத்தை இயக்குனர் பிரகாஷ் .என் கொடுத்திருக்கிறார்.
தனியார் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் வேலை செய்து வருகிறார் கதாநாயகன் விஜய் சிவன்.
அவருடைய மனைவி சாந்தினி தமிழரசன் குடிகாரத் தந்தை சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பள்ளி செல்லும் மகனுடன் வாழ்ந்து வருகிறார். கதாநாயகன் விஜய் சிவன்
குளிர்பானம் குடித்தாலே போதை ஏறும் கதாநாயகன் விஜய் சிவன் அப்படிப்பட்ட புதுமையான விநோத நோயில் சிக்கி தவித்து வருகிறார்.
வழக்கம்போல ஒரு நாள் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் நிரப்பும்போது கதாநாயகன் விஜய் சிவனுக்கு தானாகவே போதை தலைக்கு ஏறி இயந்திரத்தில் நூறு ரூபாய் நோட்டுகள் வைப்பதற்கு பதிலாக ஐநூறு ரூபாய் நோட்டுகளை வைத்து விடுகிறார்.
அந்த ஜநூறு ரூபாய் நோட்டுகள் வாடிக்கையாளர்களின் கைக்கு சென்று விடுகிறது.
இதனால் கதாநாயகன் விஜய் சிவன் இருந்த வேலையும் பறிபோகிறது.
பறிபோன அந்த வேலையில் மீண்டும் சேருவதற்கு அந்த ஏ.டி.எம்.மில் பணத்தை எடுத்த வாடிக்கையாளர்களை தேடி கதாநாயகன் விஜய் சிவன் அலைந்து கொண்டிருக்கிறார்.
இறுதியில் கதாநாயகன் விஜய் சிவனுக்கு பணத்தை எடுத்த வாடிக்கையாளர்களை கண்டுபிடித்தாரா? கண்டு பிடிக்கவில்லையா? பணம் கிடைத்ததா? பணம் கிடைக்கவில்லையா? அதே வேலையில் மீண்டும் சேர்ந்தாரா? சேரவில்லையா? என்பதுதான் இந்த குடிமகான் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த குடிமகான் திரைப்படத்தில் விஜய்சிவன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
ஒரு அப்பாவியான குடும்பத்தலைவர் கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
மிக யதார்த்தம் மீறாமல் இயல்பாக நடித்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து உள்ளார்.
அவர் குடிக்காமலேயே போதை ஏறி அவர் செய்யும் அலப்பறைகள் ரகளைகள் அனைத்தும் அருமையாக உள்ளது.
இநத குடிமகான் திரைப்படத்தில் கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடித்திருக்கிறார்.
கதாநாயகி சாந்தினி தமிழரசன் குடும்ப தலைவி கதாபாத்திரத்தில் உணர்ச்சிகளை மொத்தமாக கொட்டி மிகவும் அருமையாக கலக்கி இருக்கிறார்.
குடிகார தந்தையாக குடிகார தாத்தாவாக வரும் சுரேஷ் சக்கரவர்த்தி அனுபவ நடிப்பை அருமையாக நடித்திருக்கிறார்.
சுரேஷ் சக்கரவர்த்தி தன் பேரக்குழந்தையுடன் டான்ஸ் ஆடுவதும், இரண்டாவது திருமணம் செய்து கொள்வது என அமர்க்களம் பண்ணி விட்டார்.
குடிகாரர்களுக்கு குரல் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நாமோ நாராயணன் வழக்கம்போல் எகத்தாளமான பேச்சு நடிப்பில் ரசிகர்கள் சிரிப்பலையில் அதிர்கிறார்கள்
இந்தத் திரைப்படத்தில் பலர் புதுமுகம் என்று தெரியாமல் மிக அருமையாக அவர்கள் கதாபாத்திரத்தை செய்திருக்கிறார்கள்.
குறிப்பாக ஜி.ஆர்.கதிரவன், கே.பி.ஒய் ஆனஸ்ட்ராஜ் ஆகியோரும் தங்கள் பங்குக்கு ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரனின் ஒளிப்பதிவு திரைப்படத்தை திரைக்கதைக்கு அருமையாக உதவியிருக்கிறது.
இசையமைப்பாளர் தனுஜ் மேனன் இசையில் ‘கொக்கு கொக்கு பற பற’ பாடல் துள்ளல் ரகம் இசை மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.
இநத திரைப்படத்தின் கதையின் நாயகனுக்கு நாயகனின் விநோத நோயை மையமாக வைத்து குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து கலகலப்பான திரைப்படத்தைக் கொடுத்துள்ளார் இயக்குனர் பிரகாஷ் என்.
பல காட்சியகங்களில சிரிக்க வைத்து சில இடங்களில் சிரிக்க வைக்காமல் திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் பிரகாஷ் என்.
குடி குடியால் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் பாதிப்புகளையும் இன்னும் மிக அழுத்தமாக காட்சிப்படுத்தியிருந்தால் இயக்குனர் பிரகாஷ் என் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு இருப்பார்.
மொத்தத்தில் குடிமகான் திரைப்படம் வயிறு குலுங்க சிரிக்கலாம்.











