நிழற்குடை திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- தேவயானி, விஜித், கண்மணி, ஜி.வி, நிஹாரிகா, ராஜ்கபூர், இளவரசு, வடிவுக்கரசி, நீலிமா ராணி, தர்ஷன் சிவா, ஆண்டர்சன், அக்ஷரா, கவிதா ரவி, மனோஜ் குமார், பிரவீன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சிவ ஆறுமுகம்.

ஒளிப்பதிவாளர் :- ஆர் பி குருதேவ்.

படத்தொகுப்பாளர் :- ரோலக்ஸ்.

இசையமைப்பாளர் :- நரேன் பாலகுமார்.

தயாரிப்பு நிறுவனம் :- தர்ஷன் பிலிம்ஸ்.

தயாரிப்பாளர் :- ஜோதி சிவா.

ரேட்டிங் :- 3.25./5.

கதாநாயகன் விஜித் – கதாநாயகி கண்மணி தம்பதிக்கு ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது.

கதாநாயகன் விஜித் – கதாநாயகி கண்மணி இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தையை பார்த்துக் கொள்வதற்கு கதையின் நாயகி தேவயானியை வேலைக்கு சேர்க்கிறார்கள்.

அளவு கடந்த அன்பு பாசம் அரவணைப்பு அக்கறையால் குழந்தையும் கதையின் நாயகி தேவயானியிடம் பாசத்தோடு இருக்கிறாள்.

இதற்கிடையே, அமெரிக்காவில் செட்டிலாக முயற்சிக்கும் கதாநாயகன் விஜித் – கதாநாயகி கண்மணி இருவருக்கும் அமெரிக்க செல்வதற்கான விசா கிடைத்து விடுகிறது.

இதனால், குழந்தையை பிரிவதை நினைத்து கதையின் நாயகி தேவயானி மனதளவில் பாதிக்கப்படுகிறார்.

இதற்கிடையே, குழந்தை திடீரென்று காணாமல் போக, தங்கள் அமெரிக்கா செல்வதை தடுப்பதற்காக இதை யாரே செய்திருக்கலாம் என்று  நினைக்கும் கதாநாயகன் விஜித் – கதாநாயகி கண்மணி, சிலர் மீது காவல்துறையில் புகார் கொடுக்கிறார்கள்.

அதன்படி, யார் மீது புகார் அளிக்கப்பட்டதே அவர்களை காவல்துறையினர் விசாரித்தும் குழந்தை கிடைக்காத நிலையில், காவல்துறையினர் காணாமல் போன குழந்தையை கண்டுபிடித்தார்களா? குழந்தையை கண்டுபிடிக்கவில்லையா? கதையின் நாயகி தேவாயனியை விட்டு பிரிய மறுக்கும் குழந்தையின் நிலைமை என்ன அனது? என்பதுதான் இந்த ‘நிழற்குடை’ திரைப்படத்தின் மீதிக்கதை.

முதன்மை கதாபாத்திரத்தில் தேவயானி நடித்திருக்கிறார்.

முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தேவயானி, தற்போதைய இளம் தலைமுறை தம்பதியினருக்கு சொந்தமானவர்கள் உடன் வாழ வேண்டும் என பாடம் எடுக்கும் கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

குழந்தை மீது அவர் காட்டும் அன்பும், அக்கறையும் பணம் சம்பாதிப்பது, வசதியாக வாழ்வது என்றே பயணிக்கும் பெற்றோர்களுகு மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வாக உள்ளது.

இந்த நிழற்குடை திரைப்படத்தில் விஜித் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் விஜித் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து மிக அருமையாக நடித்திருக்கிறார்

இந்த நிழல்குடை திரைப்படத்தில் கதாநாயகியாக கண்மணி நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் கண்மணி மிகவும் அழகாகவும் அருமையாகவும் சிறப்பாக நடித்துள்ளார்.

இளம் தம்பதியாக நடித்திருக்கும் விஜித் மற்றும் கண்மணி கொடுத்த வேலையை எந்த ஒரு குறையில்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

கதாநாயகனாக நடித்திருக்கும் விஜித் மற்றும் கதாநாயகியாக நடித்திருக்கும் கண்மணி இவர்களது குழந்தையாக நடித்திருக்கும் சிறுமி ஜி.வி.அஹானா அஸ்னி மற்றும் நிஹாரிகா இருவரது நடிப்பும் திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்து இருக்கிறது.

வடிவுக்கரசி, நீலிமா ராணி ராஜ்கபூர், இளவரசு, தர்ஷன் சிவா, ஆண்டர்சன், அக்ஷரா, கவிதா ரவி, மனோஜ் குமார், பிரவீன், ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு மூலம், மனிதர்களின் உணர்வுகளையும், கதாபாத்திரங்களின் நடிப்பையும் மிக நேர்த்தியாக திரைப்படம் ஆக்கி இருக்கிறார்.

இசையமைப்பாளர் நரேன் பாலகுமாரின் இசையில் பாடல்கள், மற்றும் பின்னணி இசையும் கதைக்களத்தின் உணர்வுகளை திரைப்படம் பார்க்கும் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து இருக்கிறது.

கதை ஆசிரியர் இயக்குனர் வசனகர்த்தா ஹிமேஷ்பாலாவின் வசனம், வெளிநாட்டு சென்று அங்கேயே வாழ வேண்டும் வெளிநாடுகளில் செட்டிலாக வேண்டும் என்று இருப்பவர்கள் மற்றும் பணம் மற்றும் சொத்துதான் வாழ்க்கை என்று நினைப்பவர்களின் மனங்களை மாற்றும் மந்திரக்கோலாக இந்த திரைப்படத்தின் வசனங்கள் மிகப் பெரிய அளவில் சிறப்பாக அமைந்திருக்கிறது.

சொந்தம் பந்தங்கள் உறவுகள் வெளிநாட்டு மோகம் என தற்போதைய காலக்கட்டத்தில் முதியோர் இல்லங்கள் அதிகரிக்கும் இத்தகைய சூழலில், குழந்தை வளர்ப்பிலும் கவனம் செலுத்தாத இந்த தலைமுறையினருக்கு வாழும் இந்த காலகட்டத்தில்
Lஅனைவருக்கும் ஒரு சவுக்கு அடியாக இருக்கும் இந்த திரைப்படம்.

ஒரு நல்ல கதையை இயக்குநர் சிவா ஆறுமுகம் யோசித்திருப்பது பெரும் ஆச்சரியம் என்றாலும், தற்போதைய காலக்கட்டத்திற்கு இதுபோன்ற கதைகள் மிகவும் அவசியம் என்பதை மறுக்க முடியாது.

மொத்தத்தில், ‘நிழற்குடை’ கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம்.

error: Content is protected !!