“குட் டே” திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- பிரித்திவிராஜ் ராமலிங்கம், காளி வெங்கட், மைனா நந்தினி, ஆடுகளம் முருகதாஸ், பகவதி பெருமாள் (பக்ஸ்), வேல ராமமூர்த்தி, போஸ் வெங்கட், விஜய் முருகன் (கலை இயக்குனர்), ஜீவா சுப்பிரமணியம், பாரத் நெல்லையப்பன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- என். அரவிந்தன்

ஒளிப்பதிவாளர் :- மதன் குணதேவ்.

படத்தொகுப்பாளர் :- மதன் குணதேவ்.

இசையமைப்பாளர் :- கோவிந்த் வசந்தா.

தயாரிப்பு நிறுவனம் :- நியூ மாங்க் பிக்சர்ஸ்.

தயாரிப்பாளர் :- பிரித்திவிராஜ் ராமலிங்கம்.

ரேட்டிங் :- 3.75/5.

திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் தையல் மேற்பார்வையாளராகப்  பணி புரிந்து வரும் கதாநாயகன் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் அந்த கம்பெனியில் உள்ள மேலாளருக்கும் பிரச்சனை உருவாகிறது.

கம்பெனியில் பணிபுரியும் பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொள்ளும் மேலாளர் அநீதிக்கு கதாநாயகன் பிரித்திவிராஜ் ராமலிங்கம் குரல் கொடுக்க முதலாளி கண்முன்னே அந்தக் கம்பெனி மேலாளர் கதாநாயகன் பிரித்திவிராஜ் ராமலிங்கத்தை கைநீட்டி அடித்து விடுகிறார்.

தனக்கு கிடைத்த ஊதியம் பணத்தை எடுத்து தனது மனைவிக்கு தனது தாயாருக்கும் அனுப்புகிறார்.

தனது மேலாளர் தன்னை அடித்ததும் மற்றும் தனது தாயாருக்கு பணம் அனுப்பியதால் தன் மனைவி எதற்காக உங்கள் தாயாருக்கு பணம் அனுப்பினீர்கள் என டார்ச்சர் செய்ததாலும் அவமானம் ஒரு பக்கம் பணிபுரிந்த கம்பெனியில் அவமானம் மறுபுறம் தனது மனைவியால் டார்ச்சர் இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட கதாநாயகன் பிரித்திவிராஜ் ராமலிங்கம் சரக்கு வாங்கி அடித்து போதை அதிகளவில் தலைக்கு ஏறியதால் தன் குடியிருக்கும் வீட்டு ஹவுஸ் ஓனரை முறைவாசல் பணத்தால் பிரச்சனை ஏற்பட்டு அவரை கல்லால் அடிக்க அவர் காவல்துறையினருக்கு போன் செய்து புகார் அளிக்கிறார்.

அதன் பிறகு போதையில் செய்த கலாட்டாவால் ஹவுஸ் ஓனர் கொடுத்த புகாரால் கதாநாயகன் பிரித்திவிராஜ் ராமலிங்கத்தை காவல்துறையினர் கைது செய்தார்களா? கைது செய்யவில்லையா?

கதாநாயகன் பிரித்திவிராஜ் ராமலிங்கத்திற்கு இந்த குடியால் ஒரு இரவில் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது?

இந்த நிலையில் கதாநாயகன் பிரித்திவிராஜ் ராமலிங்கம் குடியை விட்டாரா? குடியை விடவில்லையா? என்பதுதான் இந்த குட் டே திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த குட் டே திரைப்படத்தில் புதுமுக கதையின் நாயகனாக பிரித்திவிராஜ் ராமலிங்கம் நடித்துள்ளார்.

இந்த குட் டே திரைப்படத்தில் சாந்தகுமார் கதாபாத்திரத்தில் புதுமுக கதையின் நாயகன் நடித்திருக்கும் பிரித்திவிராஜ் ராமலிங்கம் மிகவும் சிறப்பான நடிப்பை கொடுத்து குடிகாரனாகவே வாழ்ந்திருக்கிறார்.

கதையின் நாயகன் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தன்னுடன் கல்லூரியில் படித்த முன்னாள் காதலியான மைனா நந்தினி நடிப்பு சிறப்பு.

மைனா நந்தினியின் கணவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆடுகளம் முருகதாஸ் ஒரு சில காட்சிகளில் வந்தாலும் ஊடகக் காட்சிகளுக்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்.

காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கலை இயக்குனர் விஜய் முருகன், ஜீவா சுப்பிரமணியன் இருவருடைய கதாபாத்திரத்தை உணர்ந்து மிக அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

ஆட்டோ ஓட்டுனர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காளி வெங்கட், மதுக்கடையில் கிளாஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பகவதி பெருமாள், வேலா ராமமூர்த்தி, போஸ் வெங்கட் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து திரைப்படத்திற்கு சிறப்பான நடிப்பை கொடுத்து சிறப்பு சேர்த்து இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மதன் குணதேவ் ஒளிப்பதிவு மூலம் காட்சிகளை அனைத்தும் மிகச் சிறப்பாக திரைப்படம் ஆக்கியிருக்கிறார்.

படத்தொகுப்பாளர் மதன் குணதேவ் படத்தொகுப்பு திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் மற்றும் பிண்ணனி இசை திரைப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்.

கவிஞர் கார்த்திக் நேததாவின் பாடல் வரிகளும் கூடுதல் வசனமும் திரைப்படத்திற்கு அருமையாக அமைந்திருக்கிறது.

ஒரு பனியன் தொழிற்சாலைத் தொழிலாளிக்கு நடக்கும் அவலம் மற்றும் கவிஞர் கார்த்திக் நேத்தாவின் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை வைத்து ஒரே இரவில் நடக்கும் கதையாக மிகவும் சுவாராஸ்யமாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் N.அரவிந்தன்.

இந்த குட் டே என்ற ஒரு அருமையான திரைப்படத்தை திரையரங்குகளில் வெளி வருவதற்கு உதவியாக இருந்த ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் எஸ் ஆர் பிரபு மற்றும் குகன் அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.

மொத்தத்தில் குட் டை குடிகாரர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்

error: Content is protected !!