’மகா அவதார் நரசிம்மா’ திரைப்பட விமர்சனம்
எழுத்து & இயக்கம் :- அஸ்வின் குமார்.
படத்தொகுப்பாளர் :- அஸ்வின் குமார் & அஜய் வர்மா.
இசையமைப்பாளர் :- சாம் சி. எஸ்.
தயாரிப்பு நிறுவனங்கள் :- ஹோம்பாலே ஃபிலிம்ஸ், க்ளீம் புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- ஷில்பா தவான் – குஷால் தேசாய்-
சைதன்யா தேசாய், சுபாஷ் சந்திர தவான் – துர்கா பலுஜா.
ரேட்டிங் :- 3.5/5.
அரக்கன் இரன்யகசுபுவின் மகன் கடவுள் ஸ்ரீ விஷ்ணு பகவான் மீது தீவிர பக்தரான பிரகலாதனின் கதையும், பிரகலாதனின் பக்தியால் பரவசமடைந்த கடவுள் ஸ்ரீ விஷ்ணு பகவான், நரசிம்மர் அவதாரம் எடுத்து அரக்கன் இரன்யகசுபுவை எப்படி ஸ்ரீ விஷ்ணு பகவான் எப்படி அழித்தார் என்பதுதான் இந்த ’மகாஅவதார் நரசிம்மா’ மீதிக்கதை.
நாம் அனைவருக்கும் அறிந்த தெரிந்த கதை என்றாலும், அதை தற்போது இருக்கும் இந்த தலைமுறையினர் தெரிந்துக் கொள்ளவும் அறிந்து கொள்ளவும் வேண்டிய நோக்கத்துடனும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து மகிழும்படியான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் ‘மகாஅவதார் நரசிம்மா’ அனைவரும் ரசிக்குப்படியான திரைப்படத்தை கொடுத்திருக்கிறார்கள்.
அனைவரும் வியர்ந்து பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய அளவில் பிரமாண்டமான அனிமேஷன் காட்சிகள் மூலம் திரைப்படத்தை வியக்க வைத்திருக்கிறார்கள்.
பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த மற்றும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் குழந்தைகளுக்கான திரைப்படமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டிருந்தாலும், புராண காலத்தில் உள்ள கதைகளை குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் திரைப்படத்தினை மிகச் சிறப்பாகவும் அருமையாகவும் உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்த மகாஅவதார் நரசிம்மா திரைப்படத்தில் சிறப்பான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மிகச் சரியாகவும் அருமையாகவும் தெளிவாகவும் கையாண்டிருக்கின்றனர்
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இறுதி கட்ட காட்சியில் நரசிம்ம அவதாரமும், அவர் அசுரனை அழிப்பதும் திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.
இந்த ‘மகாஅவதார் நரசிம்மா’ திரைப்படத்தில் கதாபாத்திரங்கள் பேசும் வசன உச்சரிப்பு, இசை, காட்சியமைப்பு படத்தொகுப்பு அனிமேஷன் என அனைத்தையும் சரியாக கையாண்டு சிறந்த திரையரங்கில் திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை கொடுக்கும் அளவிற்கு உருவாக்கியிருக்கிறார்கள்.
மொத்தத்தில், ‘மகா அவதார் நரசிம்மா’ அனிமேஷன் திரைப்படம் மிகச்சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என்பது உறுதி.











