ஆலன் திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- வெற்றி, மதுரா, அனு சிதாரா, விவேக் பிரசன்னா,அருவி மதன், டிடோ வில்சன், ஸ்ரீ தேவா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சிவா ஆர்.

ஒளிப்பதிவாளர் :- வின்தன் ஸ்டாலின்.

படத்தொகுப்பாளர் :- மு காசி விஸ்வநாதன்.

இசையமைப்பாளர் :- மனோஜ் கிருஷ்ணா.

தயாரிப்பு நிறுவனம் :- 3எஸ் பிச்சர்ஸ்.

தயாரிப்பாளர் :- சிவா ஆர்.

ரேட்டிங் :- 2./5.

சிறு வயதில் கதாநாயகன் வெற்றியின் கண் முன்னே நடந்த விபத்து ஒன்றில் தனது தாய் மற்றும் தந்தை சொந்தங்களை இழந்து தன் மனப்போராட்டத்தில் இருந்து மீள்வதற்காக காசிக்கு சென்று அங்கிருக்கும் சாமியார்கள் மடத்தில் சேர்ந்து ஆன்மீகம் கற்றுக்கொண்டு இந்த மனப் போராட்டத்தில் இருந்து தப்பிக்கலாம் என நினைக்கிறார்.

மிகப்பெரிய, எழுத்தாளர் ஆக வேண்டும் என்பது சிறு வயது முதல் விரும்பும் கதாநாயகன் வெற்றி மனது கடந்த 10 வருடங்களாக முயற்சித்தும் ஆன்மீகத்தை மனதளவில் ஏற்க முடியாமல் தவிக்கிறார்.

இதனால், தான் நேசிக்கும் எழுத்தாளராக வேண்டும் என நினைத்த தனது பயணத்தை தொடங்குகிறார்.

அப்போது  அவருக்கு ரயில் பயணத்தில் கிடைக்கும் வெளிநாட்டு பெண்னின் நட்பு, கிடைக்க கதாநாயகன் வெற்றியின் சன்னியாசி என்ற பாலைவனம் போன்ற இருந்த தனது வாழ்க்கையை பசுமையான சோலைவனமாக மாற்றுகிறது.

அந்தப் பெண்ணின் நட்பு மூலம் சன்னியாசியாக சுற்றி திரிந்த கதாநாயகன் வெற்றி சாதாரண மனிதராக மாறி, தன் சிறுவயதில் இருந்து நினைக்கும் எழுத்தாளராக வேண்டும் என்று கனவினை நோக்கி பயணம் படும்போது, மீண்டும் ஒரு கசப்பான சம்பவத்தை கதாநாயகன் வெற்றி எதிர்கொள்கிறார்.

அதன் மூலம் மீண்டும் சன்னியாசியாக மாறும் கதாநாயகன் வெற்றியின் வாழ்க்கை என்னவானது?, அவர் எழுத்தராக வேண்டும் விரும்பிய எழுத்துலகில் அவர் சாதித்தாரா? சாதிக்கவில்லையா?, என்பதுதான் இந்த ஆலன் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ஆலன் திரைப்படத்தில் கதையின் நாயகனாக வெற்றி நடித்திருக்கிறார்.

அமைதியான முகம், அளவான நடிப்பு என சன்னியாசி கதாபாத்திரத்திற்கு மிகவும் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் கதாநாயகன் வெற்றி.

தன் சன்னியாசி கதாபாத்திரத்தை களைத்து விட்டு இந்த வெள்ளைக்கார பெண்ணுடன் காதல் வயப்படும் போது, தனது முகத்திலும், உடல் அசைவிலும் வெட்கத்தை வெளிப்படுத்தும் விதம், நடிப்பின் மூலம் அசத்தியிருக்கிறார்.

இந்த ஆலன் திரைப்படத்தில் கதாநாயகியாக அனு சிதாரா நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் அனு சித்தாராவின் அழகு முகத்தை பார்த்தால் போதும் பத்தும் பறந்து போகும், என்பது போல் அழகு பதுமை போல் இருக்கிறார்.

தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை மற்றும் தமிழ் மொழியை நேசிக்கக் கூடிய ஜெர்மனி நாட்டு பெண்ணாக நடித்திருக்கும் மதுரா, அனைத்து காட்சிகளிலும் சிரித்த முகத்தோடு வசனம் பேசி திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கிறார்.

விவேக் பிரசன்னா, அருவி மதன், டிட்டோ வில்சன், ஸ்ரீ தேவா, ஹரிஷ் பெராடி என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களின் நடிப்பிலும் எந்த ஒரு குறையில்லை.

ஒளிப்பதிவாளர் வின்தன் ஸ்டாலின், தனது ஒளிப்பதிவு மூலம் திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு ரிஷிகேஷ் உள்ள ஆன்மீகத் தளங்களுக்கு நேரில் சென்று பயணித்த அனுபவத்தை கொடுக்கிறது.

நமது ஆழ் மனதில் எதை அதிகம் விரும்புகிறோமோ அதுவே நமது வாழ்க்கை” என்ற கருத்தை காதல் பின்னணியோடு சொல்ல முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சிவா.ஆர்.

மொத்தத்தில், ’ஆலன்’ திரைப்படம் தமிழ் சினிமாவிற்கு தேவை இல்லாத ஒரு படம்.

error: Content is protected !!