‘அந்த 7 நாட்கள் திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- அஜிதேஜ், ஸ்ரீஸ்வேதா, பாக்யராஜ், நமோ நாராயணன், சுபாஷினி கண்ணன், தலைவாசல் விஜய், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- எம்.சுந்தர்.

ஒளிப்பதிவாளர் :- கோபிநாத் துரை.

படத்தொகுப்பாளர் :- முத்தமிழன் ராமு.

இசையமைப்பாளர் :- சச்சின் சுந்தர்.

தயாரிப்பு நிறுவனம் :- பெஸ்ட் காஸ்ட் ஸ்டுடியோஸ்

தயாரிப்பாளர் :- முரளி கபீர்தாஸ்.

ரேட்டிங் :- 3.5/5.

வானியற்பியல் ஆராய்ச்சி துறையில் மாணவரான கதாநாயகன் அஜிதேஜ் படிக்கும் கல்லூரியில் புதியதாக மாணவர்கள் அனைவரும் புதிய டெலஸ்கோப் வாங்க வேண்டும் என ஆசிரியர் கூற புதியதாக டெலஸ்கோப் வாங்குவதற்காக கடைக்கு செல்லும் கதாநாயகன் அஜிதேஜ் பல நூறு ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய டெலஸ்கோப்பை வாங்குகிறார்.

கதாநாயகன் அஜிதேஜ் அஸ்ட்ரோ பிசிக்ஸில் ஆர்வம், டெலஸ்கோப் வழியாக ஏதாவது ஒன்றை பார்த்துக் கொண்டே இருப்பதுதான் இவருடைய வேலையாக இருக்கிறது.

300 வருடங்களுக்கு பிறகு வரும் அதிசய சூரிய கிரகணத்தை புதியதாக வாங்கிய டெலஸ்கோப்பில் கதாநாயகன் அஜிதேஜ் சூரிய கிரகத்தை காண்கிறார்.

சூரிய கிரகணத்தை பார்த்ததிலிருந்து கதாநாயகன் அஜிதேஜ் ஒரு அபூர்வ சக்தி ஒன்று கிடைக்கிறது.

கதாநாயகன் அஜிதேஜ் மிருகங்கள் மற்றும் மனிதர்கள் யாருடைய கண்களையாவது நேரடியாக பார்த்தால் அவர்கள் இறப்பு நேரம் நாள் கதாநாயகன் அஜிதேஜ் மூளைக்கு தெரிந்து விடுகிறது.

டெலஸ்கோப் வழியாக ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கும் நிலையில் எதிர் வீட்டு மொட்டை மாடியில் தோன்றும் கதாநாயகி ஸ்ரீ ஸ்வேதா பார்த்து கவனம் கலைகிறார்.

இந்த நிலையில் கதாநாயகி ஸ்ரீ ஸ்வேதா மீது கதாநாயகன் அஜிதேஜ்க்கு அந்த கவனம் கண்டவுடன் காதலாக மலர்கிறது.

ஒரு கட்டத்தில் கதாநாயகி ஸ்ரீ ஸ்வேதா, கண்களை பார்க்கும் கதாநாயகன் அஜிதேஜ்க்கு கதாநாயகி ஸ்ரீ ஸ்வேதா, ஏழு நாட்களில் இறந்து விடுவார் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

அந்த இறப்பிலிருந்து கதாநாயகன் அஜிதேஜ் கதாநாயகி ஸ்ரீ ஸ்வேதாவை உயிரை காப்பாற்றினாரா? காப்பாற்ற வில்லையா? என்பதுதான் இந்த அந்த 7 நாட்கள் திரைப்படத்தின் மீதிக்கதை.

அந்த 7 நாட்கள் திரைப்படத்தில் அறிமுக கதாநாயகனாக அஜிதேஜ் நடித்திருக்கிறார்.

அறிமுக கதாநாயகனாக நடித்திருக்கும் அஜிதேஜ் அறிமுக நடிகரான, இல்லாமல் பல திரைப்ப்படங்கள் நடித்த அளவிற்கு மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.

தனது அன்பு காதலி அறிமுக கதாநாயகி ஸ்ரீ ஸ்வேதா ஏற்பட இருக்கும் ஆபத்தை நினைத்து கலங்குவது, அறிமுக கதாநாயகி ஸ்ரீ ஸ்வேதா காப்பாற்றுவதற்காக போராடுவதும், என்று திரைப்படம் முழுவதும் உணர்வுப்பூர்வமான காட்சிகளில் மிகவும் சிறப்பான நடிப்பை கொடுத்து பாராட்டு பெறுகிறார்.

அறிமுக கதாநாயகன் அஜிதேஜ் வெறி நாய்போல் தனது காதலிக்காக மாறுவது கூடுதல் அதிர்ச்சி.

அந்த 7 நாட்கள் திரைப்படத்தில் அறிமுக கதாநாயகியாக ஸ்ரீஸ்வேதா, நடித்துள்ளார்.

அறிமுக கதாநாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீஸ்வேதா, பார்த்ததும் கவர்ந்திழுக்கும் அழகியாக இருந்தாலும் தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் மிகவும் சிறப்பான நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்.

அறிமுக கதாநாயகி ஸ்ரீ ஸ்வேதா வெறி நாய் போல் கொஞ்சம் கொஞ்சமாக மாறுவது திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு பதட்டத்தை அதிகரிக்கிறது.

அறிமுக கதாநாயகன் அஜிதேஜ் மற்றும் அறிமுக கதாநாயகி ஸ்ரீ ஸ்வேதா இருவரின் நடிப்பும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்பது போல் போட்டி போட்டு கொண்டு மிக அருமையாகவும் மிக சிறப்பாகவும் நடித்திருக்கிறார்கள்.

கதாநாயகன் அஜிதேஜ், கதாநாயகி ஸ்ரீ ஸ்வேதா தமிழ் திரைப்பட உலகில் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது.

அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கே.பாக்யராஜ், கதாநாயகனின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடித்திருக்கும் நமோ நாராயணன், மற்றும் தலைவாசல் விஜய் சுபாஷினி கண்ணன், ஆகியோர் நடிப்பு மூலம் திரைக்கதை ஓட்டத்திற்கு மிகவும் பலமாக பயணித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கோபிநாத் துரை ஒளிப்பதிவு மூலம் காட்சிகளை அனைத்தும் மிகவும் நேர்த்தியாக திரைப்படமாக்கியிருப்பதோடு, மட்டுமல்லாமல் கதாபாத்திரங்களின் உணர்வுகளை மிகவும் அருமையாக காட்சிப்படுத்திருப்பது மிக சிறப்பு.

இசையமைப்பாளர் சச்சின் சுந்தரின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு உயிரோட்டமாகவும் பயணித்திருக்கிறார்.

சூரிய கிரகணத்தை நேரடியாக கண்களினால் பார்த்தால் பார்வை பறிபோய்விடும் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆனால் இந்த திரைப்படத்தின் இயக்குனர் எம் சுந்தர் அதைப் பார்த்தால் ஏதோ ஒரு சக்தி கிடைப்பது போல் சொல்லி இருப்பது நம்ப முடியாத முட்டாள்தனமாக இருக்கிறது.

இந்த திரைப்படத்தை பார்த்து யாராவது சூரிய கிரகணத்தை பார்த்து பாதிப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது என தெரியவில்லை.

மக்கள் யாராக இருந்தாலும் நேரடியாக சூரிய கிரகணத்தை கண்களால் பார்க்க கூடாது என்ற ஒரு எச்சரிக்கை வாசகத்தை திரையில் காட்டி இருக்கலாம் திரையில் காட்டாமல் இருப்பது மிகப்பெரிய குறையாக உள்ளது.

தெரு நாய் மற்றும் வெறி நாய்க்கடி பற்றிய அசட்டு தைரியம் மக்களுக்கு தவறானது என்பதை கூறியிருப்பது மிகப்பெரிய விழிப்புணர்ச்சியையும் இந்த திரைப்படம் ஏற்படுத்துகிறது.

அருமையான காதல் கதையை ஃபேண்டஸி மற்றும் அறிவியல் அதிசயம் மூலம் சிறந்த திரைக்கதை மூலம் சொல்ல முயற்சித்ததோடு, சமீபத்திய தெருநாய்கள் கடிப்பது பிரச்சனை மற்றும் அதனால் ஏற்படும் ரேபிஸ் நோய் தாக்கத்தை திரைக்கதையோடு பயணிக்க வைத்து மிகச் சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் எம் சுந்தர்.

மொத்தத்தில் – இந்த ‘அந்த 7 நாட்கள்’ அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம்.

error: Content is protected !!