மையல் திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- சேது, சம்ரிதி தாரா, பி எல் தேனப்பன், லேட் சூப்பர் குட் சுப்ரமணி, ரத்னகலா
சி.எம்.  பாலா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஏபிஜி ஏழுமலை.

ஒளிப்பதிவாளர் :- பாலா பழனியப்பன்.

படத்தொகுப்பாளர் :- வெற்றி சண்முகம்.

இசையமைப்பாளர் :- அமர்கீத்.  எஸ் .

தயாரிப்பு நிறுவனம் :- ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி .

தயாரிப்பாளர்கள் :- அனுபமா விக்ரம் சிங் மற்றும் வேணுகோபால்.ஆர்.

ரேட்டிங் :- 2.5./5.

கதாநாயகன் இரவு நேரங்களில் ஆடு திருட, ஊரில் உள்ளவர்கள் துரத்துகிறார்கள்.

மற்றொரு பக்கம் ஒரு வயதான தம்பதியினரை இருவர் சேர்ந்து
வெட்டிக் கொள்கின்றார்கள்.

ஆடு திருடி விட்டு ஊரில் உள்ளவர்களின் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்துக் கொள்ள ஓடும் போது அங்கிருக்கும் கிணறு ஒன்றில் கதாநாயகன் சேது தவறி விழுந்துவிட

கிணற்றில் தவறி விழ்ந்தால், கதாநாயகன் சேதுவுக்கு கால் முறிவு ஏற்படுகிறது.

கிணற்றில் தவறி விழ்ந்தால், கதாநாயகன் சேதுவை
மறுநாள் காலையில், கதாநாயகி சம்ரிதி காப்பாற்றுகிறார்.

கதாநாயகி சம்ரிதி தனது மந்திரவாதி பாட்டியோடு ஊரை விட்டு தள்ளி வைத்த காரணத்தால் இருவரும் கிராமத்தில் ஒதுக்குப்புறமாக ஒரு ஒற்றைக் குடிசையில் வாழ்ந்து வருகிறார்கள்.

கதாநாயகி சம்ரிதா கதாநாயகன் சேதுவிற்கு தனது விட்டில் அடைக்கலம் கொடுக்கிறார்.

கதாநாயகன் சேதுவைத் தேடி ஊரில் உள்ள சிலர் தேடிக் கொண்டிருக்க, தன்னுடைய பாதுகாப்பிற்காக கதாநாயகி சம்ரிதாவின் வீட்டிலேயே சில நாட்கள் தங்கி விடுகிறார்.

இந்த சூழலில், கதாநாயகி சம்ரிதாவிற்கும் கதாநாயகன் சேதுவிற்கும் காதல் மலர்ந்து விடுகிறது.

இதனை அறிந்த கதாநாயகி சம்ரிதாவின் மந்திரவாதி
பாட்டி, கதாநாயகன் சேதுவை விட்டதை விட்டு அனுப்பி  விடுகிறார்.

அதே சமயம், காவல்துறையினர்  இரண்டு முதியவர்களை கொன்றது யார்? என்று தெரியாமல் கொலையாளியை வலைவீசித் தேடி வருகிறார்கள்.

இதன் பின்  காவல்துறையினர் கொலையாளியை கண்டுபிடித்தார்களா?,  கண்டுபிடிக்கவில்லையா?, கதாநாயகி சம்ரிதாவிற்கும் கதாநாயகன் சேதுவிற்கும் உள்ள காதலில் ஒன்று சேர்ந்தார்களா?, சேரவில்லையா?, என்பதுதான் இந்த மையல் திரைப்படத்தின் மீதிக் கதை.

இந்த மையல் திரைப்படத்தில் கதாநாயகனாக சேது நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் சேது மிகவும் எதார்த்தமான நடிப்பை மிகவும் அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

கதாநாயகி சம்ரிதா மீது காதலிக்க ஆரம்பிக்கும் போது இருக்கட்டும், சிறைக்குள் அவள் மீது வைத்திருந்த காதலை காவல்துறையினரிடம் சொல்லும்  காட்சியாக இருக்கட்டும் என ஒரு சில காட்சிகளில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் கண்களில் ஈரம் கசியும் அளவிற்கான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இந்த மையல் திரைப்படத்தில் கதாநாயகியாக அம்ரிதா தாரா நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் சம்ரிதா தாரா, கதைக்கேற்ற கதாநாயகியாக திரைப்படத்தில்
கதைக்கு ஏற்றவாறு  ஜொலித்திருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து. காவல்துறை அதிகாரியாக  நடித்திருந்தவர், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பி எல் தேனப்பன், கொலை செய்த நபர்கள் என திரைப்படத்தில் நடித்த அனைவருமே தங்களது கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பால பழனியப்பனின் ஒளிப்பதிவு மூலம் மலையழகை ரம்மியமாக காட்சிகளை திரைப்படம் ஆக்கி இருக்கிறார்..

இசையமைப்பாளர் அமர்கீத்தின் இசையில் பாடல்கள் மற்றும்  பின்னணி இசையும் கதையோடு இணைந்து பயணித்திருக்கிறார்.

ஒரு இரவில் நடந்த திருட்டு, கொலை அதனைத் தொடர்ந்து நடக்கும் திருடன் மீதான காதல் என நல்லதொரு கதையை கையில் எடுத்த இயக்குனர் ஏபிஜி ஏழுமலை
அந்த கதையை அழுத்தமான திரைக்கதையை இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டு இருந்தால் திரைப்படம் மிகப் பெரிதாக பேசப்பட்டிருக்கும்.

மொத்தத்தில் – இந்த மையல் திரைப்படம் ஒருமுறை திரையரங்குக்கு சென்று பார்க்கலாம்

error: Content is protected !!