’நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- எஸ். கார்த்தீஸ்வரன், ஸ்ரீநிதி, ஆதவன், லிவிங்ஸ்டன், பிளாக் பாண்டி, மிருதுளா சுரேஷ், அகல்யா வெங்கடேசன், இமான் அண்ணாச்சி, எம்.ஆர். அர்ஜுன், கோதை சந்தானம், அம்மன்புரம் சரவணன் ராணா, சர்கார் மீனா, மிருதுலா சுரேஷ், ஜெயஸ்ரீ பினுராஜ், தீக்ஷன்யா, மஞ்சு
மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- எஸ்.கார்த்தீஸ்வரன்.
ஒளிப்பதிவாளர் :- என்.எஸ். ராஜேஷ்.
படத்தொகுப்பாளர் :- சஜின் சி.
இசையமைப்பாளர் :- ஸ்ரீகாந்த் தேவா.
தயாரிப்பு நிறுவனம் :- ஆர்கே ட்ரிம் ஃபேக்டரி.
தயாரிப்பாளர்கள் :- டி ராதாகிருஷ்ணன், எம் புவனேஸ்வரன், ஷாஜு சி, ஜோதிலட்சுமி.
ரேட்டிங் – 3.25./5.
கதாநாயகன் கார்த்தீஸ்வரன், தனது நண்பர்களுடன் இணைந்து பல வழிகளில் பல்வேறு விதமான, மோசடிகள் செய்து பத்தாயிரம் கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்கள்.
கதாநாயகன் கார்த்தீஸ்வரன் மோசடி செய்து சம்பாதித்த அந்த பத்தாயிரம் கோடி பணத்தை நண்பர்கள் அனைவரும் பத்தாயிரம் கோடி ரூபாய் சம்பாதித்த பணத்தை பிரித்துக் கொண்டு வெளிநாட்டுக்கு செல்வதற்கு நினைக்கும் நிலையில், காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீநிதியிடம் சிக்கிக் கொள்கிறார்.
காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீநிதியிடம் சிக்கிக் கொண்ட கதாநாயகன் கார்த்தீஸ்வரன் சிறையில் தண்டனை அனுபவித்தாரா? அனுபவிக்கவில்லையா?,
கதாநாயகன் கார்த்தீஸ்வரன் பத்தாயிரம் கோடி ரூபாய் சம்பாதித்த பணத்தை எடுத்து கொண்டு வெளிநாட்டிற்கு தப்பி சென்றாரா? தப்பி சொல்லவில்லையா?, கதாநாயகன் கார்த்தீஸ்வரன் செய்த மோசடிகள் என்ன?, கதாநாயகன் கார்த்தீஸ்வரன் இந்த மோசடிகளை எப்படி சாமர்த்தியமாக செய்கிறார், என்பதுதான் இந்த ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘நிர்வாகம் பொறுப்பவ்ல்’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக எஸ்.கார்த்தீஸ்வரன் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் எஸ்.கார்த்தீஸ்வரன் சாதுவான தோற்றம் நமது வீட்டு பக்கத்தில் உள்ள அப்பாவியான முகம், போலவே என சாதாரணமாக வலம் வரும் எஸ்.கார்த்தீஸ்வரன் செய்யும் மோசடிகள் அனைத்தும், புது விதமான ரகங்கள் இப்படி எல்லாம் மோசடிகள் இருக்கிறதா என்று மக்கள் அனைவரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.
மோசடி மன்னன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் எஸ்.கார்த்தீஸ்வரன், பலவிதமான கெட்டப்புகளில் தோன்றினாலும், ஒரு நடிகராக நடிப்பு, நடனம், காமெடி, ஆக்ஷன் என அனைத்தையும் சரியாக செய்திருக்கிறார்.
கடமை தவறிய காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீநிதி கம்பீரமாகவும், கவர்ந்திழுக்கும் அழகோடும் வலம் வருகிறார்.
இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் ஆதவன், லிவிங்ஸ்டன், பிளாக் பாண்டி, மிருதுலா சுரேஷ், அகல்யா வெங்கடேசன் என அனைவருக்கும் கொடுத்த கதாபாத்திரத்தை எந்த விதமான குறையும் இல்லாமல் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் என்.எஸ்.ராஜேஷ், ஒளிப்பதிவு மூலம் பல காட்சிகளை கலர்புல்லாகவும், தரமாகவும் திரைப்படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கும் நிலையில் பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.
பல வழிகளில், மக்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டு வருவது தொடர்பாக பத்திரிகை செய்திகள் வெளியானாலும், மக்கள் அனைவரும் தொடர்ந்து ஏமாற்றுவதும் நடந்துக் கொண்டு தான் உள்ளது.
இப்படிப்பட்ட மோசடிகளில் சிக்காமல் இருக்க மக்கள் என்ன செய்ய வேண்டும், என்பதையும் சொல்லி அருமையாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் எஸ்.கார்த்தீஸ்வரன்.
மொத்தத்தில், இந்த ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்காமல் மக்கள் அனைவரும் ஏமாற வேண்டாம் கண்டிப்பாக பார்க்கவும்.











