‘ஜாக்கி’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணாஸ், அம்மு அபிராமி, காளி , மதுசூதன் ராவ், சித்தன் மோகன், சரண்யா ரவி, பாத்மன், யோகி, சாய்தினேஷ், சிதம்பரம், பிரவீன், ஆதவ்,  ஈஷா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- டாக்டர். பிரகாபால்.

ஒளிப்பதிவாளர் :- என்.எஸ். உதயகுமார்.

படத்தொகுப்பாளர் :- என் பி ஸ்ரீகாந்த்.

இசையமைப்பாளர் :- சக்தி பாலாஜி.

தயாரிப்பு நிறுவனம் :- PK7 ஸ்டுடியோஸ் LLP.

தயாரிப்பாளர்கள் :- பிரேமா கிருஷ்ணதாஸ் – சி தேவதாஸ் & ஜெயா தேவதாஸ்.

ரேட்டிங் :- 2.75.5

ஆட்டோ டிரைவரான கதாநாயகன் யுவன் கிருஷ்ணா, கிடா சண்டை மீது அதிக ஆர்வத்துடன்  இருக்கிறார்.

வசதி வாய்ப்பாக இருக்கும் ரிதன் கிருஷ்ணாஸ், கிடா சண்டையை மிகப்பெரிய அளவில் கெளரவமாக நினைக்கிறார்.

இதற்கிடையே, யுவன் கிருஷ்ணாவின் கிடா, ஒரு நாள் ரிதன் கிருஷ்ணாஸ், கிடாயை ஒரு முறை வெற்றி பெற்று விட, அதன் மூலம் இருவருக்கும் இடையே பகை அதிகரித்து விடுகிறது.

இருவருக்கும் இடையே  வெட்டு குத்து, என அடிக்கடி  நடந்துக் வருகிறது.

யுவன் கிருஷ்ணாவின், ரிதன் கிருஷ்ணாஸ், இருவருக்கும் பிடித்தமான கிடா சண்டை மூலம் ஆரம்பித்த இவர்களுடைய பகையை  ஊர் பெரியவர்கள் அனைவரும் இனைத்து ஊருக்குள் அதே கிடா சண்டையை நடத்தி இருவருக்கும் இருக்கும் பகைக்கு இந்த சண்டை மூலம் முற்றுப்புள்ளி  வைக்க முடிவு செய்கிறார்கள்.

இந்த நிலையில், யுவன் கிருஷ்ணாவின், ரிதன் கிருஷ்ணாஸ், ஊருக்குள் நடக்கும். இந்த கிடா சண்டை மூலம் இருவரும் ஒன்று இணைந்தார்களா? ஒன்று இணையவில்லையா? என்பதுதான் இந்த ‘ஜாக்கி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ஜாக்கி திரைப்படத்தில் கதாநாயகனாக யுவன் கிருஷ்ணா, நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் யுவன் கிருஷ்ணா, மதுரை இளைஞராக நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் யுவன் கிருஷ்ணா, ஆக்சன்  காட்சிகளில் அமர்க்களப்படுத்தி உள்ளார்.

அடிதடி கிடா சண்டை என  இருக்கும் யுவன் கிருஷ்ணா, மறுபக்கம் கதாநாயகி அம்மு அபிராமி மீது உள்ள காதல்  மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி  இருக்கிறார்.

வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கும் ரிதன் கிருஷ்ணாஸ், ”கிடா சண்டை மட்டும் அல்லாமல், ரவுடிசமும்  என தன் பங்கிற்கு சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
 
இந்த ஜாக்கி திரைப்படத்தில் கதாநாயகியாக அம்மு அபிராமி நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் அம்மு அபிராமி, கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக, வந்து சிறப்பான நடிப்பை கொடுத்து கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் எந்தவிதமான குறையும் இன்றி செய்திருக்கிறார்.

இந்த ஜாக்கி திரைப்படத்தில் நடித்திருக்கும் மதுசூதன் ராவ், சித்தன் மோகன், சரண்யா ரவி, பத்மன், யோகி, சாய் தினேஷ், சிதம்பரம், பிரவீன், ஆதவ், ஈஷா ஆகிய அனைத்து  கதாபாத்திரங்களுக்கு பொறுத்தமான தேர்வாக இருப்பதோடு, மட்டுமல்லாமல் அனைவரும் நடிப்பிலும் மதுரை மனிதர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்  என்.எஸ். உதயகுமார், ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்தை மிக  எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இசையமைப்பாளர் சக்தி பாலாஜியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்து இருக்கிறார்.

மதுரை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் நடக்கும் கிடா சண்டை போட்டியை மையப்படுத்திய கதையை எதார்த்தமாக சொல்லி கிடா சண்டை போட்டிகளை உண்மைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தியிருப்பது திரைப்படத்திற்கு மாபெரும் பலமாக அமைந்து மிக சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் டாக்டர்.பிரகாபல.

மொத்தத்தில் ‘ஜாக்கி’ திரைப்படம் கிடா சண்டையை ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

error: Content is protected !!