தூவல் திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- ராஜ்குமார், சாந்தா, சிவம், மாஸ்டர் நிவாஸ், இளையா, ராஜ்வேல், கிருஷ்ணா,
மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ராஜவேல் கிருஷ்ணா.

ஒளிப்பதிவாளர் :- S.A. தர்வேஸ்.

படத்தொகுப்பாளர் :- ராம்கோபி.

இசையமைப்பாளர் :- பத்மசதீஷ்.

தயாரிப்பு நிறுவனம் :- சைகர் பிக்சர்ஸ்.

தயாரிப்பாளர் :- கமல் குமாரி பி, ராஜ்குமார் என்.

ரேட்டிங் :- 2./5.

பிழை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா தமிழ்த் திரைப்பட உலகில் இயக்குனராக அறிமுகமானார்.

பிழை திரைப்படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த, இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணாவின் அடுத்த திரைப்படம், தூவல்.

ஆற்றங்கரை ஓரத்தில் ஓர் நல்ல அழகான கிராமம் அந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் அந்த ஆற்றில் தண்ணீர் வரும் நேரத்தில் ஓடும் மீன்களை பிடித்து அந்த கிராமத்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அதன்பின் மற்ற நேரங்களில் ஆற்றில் நீர் இல்லாத போது, சாராயம் காய்ச்சுவதும், மரம் வெட்டுவதும், காட்டிற்குள் மிருகங்களை வேட்டை ஆடுவதும் என்று காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அதே கிராமத்தில் மக்கள் சிலர் வெடி வைத்து பாறைகளை தகர்க்கும் தொழிலையும் செய்து கொண்டு வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், அந்த கிராமத்தில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை கெடுக்கும் நோக்கில் வனதுறை அதிகாரி ராஜ்குமாரும் ரெளடியாக வரும் சிவமும் மக்களுக்கு எதிராக செயல்படுகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில் அந்த கிராமத்தில் உள்ள மக்கள் வனதுறை அதிகாரி ராஜ்குமார் மற்றும் ரெளடி சிவத்திடம் சிக்கினார்களா? சிக்கவில்லையா?, என்பதுதான் இந்த தூவல் திரைப்படத்தின் மீதிக் கதை.

அக்கிராமத்து வாசியாகவே வாழ்ந்திருக்கும் இளையாவின் நடிப்பு மிகவும் அருமையானது.

காதலாக இருக்கட்டும், பிடிபட்ட மீனை காணவில்லை என்றதும் வெளிப்பட்ட கோபமாக இருக்கட்டும், அந்த கிராமத்திற்கு ஏதாவது பிரச்சனை என்றதும் வரிந்து கட்டி நின்றதாக இருக்கட்டும் என பல இடங்களில் கிராமவாசியாகவே வாழ்ந்திருக்கிறார்

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிவம் நடிப்பும் மிரள வைத்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் S.A. தர்வேஸ் ஒளிப்பதிவு ஓகே.

இசையமைப்பாளர் பத்மசதீஷ் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை அருமையாக உள்ளது.

ஒரு கிராம மக்களின் ஆற்று மீன்பிடி வாழ்வியலை மிகவும் அருமையாக கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா.

இந்த தூவல் இருந்திருக்கும். ஒரு டாக்குமெண்டரி கதையாக திரைப்படத்தை நகர்ந்து செல்வதால் திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் சற்று பொறுமை இழந்துவிட்டனர்.

மொத்தத்தில், தூவல் திரைப்படம் அல்ல டாக்குமெண்ட்ரி திரைப்பட விரும்புவர்களுக்கு பிடித்தமான படைப்பாக தூவல் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

error: Content is protected !!