‘லாக்டவுன்’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- அனுபமா பரமேஸ்வரன், சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், ஷாம்ஜி, லொள்ளு சபா மாறன், விநாயக ராஜ், விது, சஞ்சீவி, பிரியா கணேஷ், ஆஷா, ஜீவா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :-  ஏ.ஆர். ஜீவா.

ஒளிப்பதிவாளர் :- கே.ஏ. சக்திவேல்.

படத்தொகுப்பாளர் :- வி.ஜே. சாபு ஜோசப்.

இசையமைப்பாளர் :- என்.ஆர். ரகுநந்தன் & சித்தார்த் விபின்.

தயாரிப்பு நிறுவனம் :- லைகா புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்.

தயாரிப்பாளர் :- சுபாஸ்கரன்

ரேட்டிங் :- 3.75./5.

நிஜ சம்பவங்களின் நிழலில் ஒரு திரைக்கதை இந்த லாக்டவுன் திரைப்படம் வெறும் கற்பனையல்ல, கொரோனா காலகட்டத்தில் இந்திய முழுவதும் அமல்படுத்தப்பட்ட 21 நாள் லாக்டவுனின் போது பெங்களூரில் நடந்த  உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

நடுத்தர குடும்பத்தில் சேர்ந்த, தந்தை சார்லி தாய் நிரோஷா தங்கை பாட்டி இவர்களுடன் கதாநாயகி அனுபமா பரமேஸ்வரன் படித்து விட்டு ஐடி நிறுவனத்தில் வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

கதாநாயகி அனுபமா பரமேஸ்வரன் பல கம்பெனிகளில் நேர்முகத் தேர்வு நடந்தும் எந்த கம்பெனியில் வேலை கிடைக்கவில்லை.

இந்த நிலையில் கதாநாயகி அனுபமா பரமேஸ்வரன்   தோழி ஒருவர் வேலை விஷயமாக போனில்   அழைத்ததில் பேரில்  தோழியை சந்திக்க செல்லும் கதாநாயகி அனுபமா பரமேஸ்வரன் அங்கு பார்ட்டி நடந்து கொண்டிருக்க அந்தப் பார்ட்டியில் கலந்து கொள்கிறார்.

கதாநாயகி அனுபமா பரமேஸ்வரன் தோழிகளின் விருப்பத்தின் காரணமாக மது அருந்திவிட்டு ஆட்டம் பாட்டம் என சந்தோசமாக இருக்கும் நிலையில் மது போதை தலைக்கேறி மயங்கி விழுந்து விடுகிறார்.

கதாநாயகி அனுபமா பரமேஸ்வரன் மதுபோதை தெளிந்து மறுநாள் காலை வீடு வந்து சேர்கிறார்.

கதாநாயகி அனுபமா பரமேஸ்வரன் சில நாட்களுக்குப் பிறகு அவரின் உடல்நிலை மாற்றங்கள் இருப்பதால் மருத்துவரிடம் சொல்கிறார்.

கதாநாயகி அனுபமா பரமேஸ்வரன் மருத்துவர் சில டெஸ்ட்களை எடுக்க
சொல்கிறார்.

கதாநாயகி அனுபமா பரமேஸ்வரன் எடுக்க சொன்ன  டெஸ்ட்களை மருத்துவரிடம் காண்பிக்க கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை மருத்துவர் கூறுகிறார்.

தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிந்த கதாநாயகி அனுபமா பரமேஸ்வரன் அதிர்ச்சியடைய தன்னை யார்? பலாத்காரம் செய்திருப்பார்கள் என்பது தெரியாமல் தவிக்கிறார்.

தான் கர்ப்பமாக இருக்கும் விஷயம் தனது குடும்பத்தில் உள்ள தாய் மற்றும் தந்தைக்கு தெரியாமல் தனது கர்ப்பத்தை கலைக்க எண்ணுகிறார்.

இந்த நிலையில் இந்திய முழுவதும் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு வந்துவிட கதாநாயகி அனுபமா பரமேஸ்வரன் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

கதாநாயகி அனுபமா பரமேஸ்வரன் கர்ப்பமாக இருக்கும் விஷயம் அவருடைய குடும்பத்தினருக்கு தெரிந்ததா?, தெரியவில்லையா?,

கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு  பிறப்பித்த நிலையில் கதாநாயகி அனுபமா பரமேஸ்வரன் தன்னுடைய கர்ப்பத்தை கலைத்தாரா?,  கலைக்கவில்லையா?,

இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு  பிறப்பித்த நிலையில் கதாநாயகி அனுபமா பரமேஸ்வரன் எந்த செயலும் செய்ய முடியாததால் இறுதியாக எடுத்த முடிவு என்ன? என்பதுதான் இந்த ‘லாக்டவுன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இநத ‘லாக்டவுன்’ திரைப்படத்தில் கதையின் நாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் அனுபமா  பரமேஸ்வரன் தனக்குள் ஒளிந்திருக்கும் நடிப்புத் திறமையை பெரு வெள்ளமாக வெளிப்படுத்தி கிடைத்த வாய்ப்பாக ‘லாக்டவுன்’ திரைப்படத்தில் நடித்த   கதாபாத்திரத்தை தன்னுடைய நடிப்புத் திறமைக்கு  பயன்படுத்தி கொண்டார்.

சில வருடங்களுக்கு முன்பு இந்தியில் வெளியான நடிகை வித்யா பாலன் நடிப்பில் ‘கஹானி’ என்ற திரைப்படம் கர்ப்பமான கதாநாயகி அவர் தனது கர்ப்பத்திற்கும் காரணமானவரை தேடி அலைவார், அது போன்ற ஒரு கடினமான கதாபாத்திரம்தான் இந்த ‘லாக்டவுன்’ திரைப்படத்தில் அனுபமா  பரமேஸ்வரன் ஏற்று நடித்திருக்கிறார்.

கதாநாயகி அனுபமா பரமேஸ்வரன் தந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சார்லி மற்றும் தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிரோஷா, லிவிங்ஸ்டன் அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

இறுதிக்கட்ட காட்சியில் வரும் கருவை கலைக்கும் மருத்துவமனையில் பணிபுரியும் கம்பவுண்டர்  கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விநாயக ராஜ்  பெண்ணின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் மிகவும் கொடூரமாக நடித்திருக்கிறார்.

இந்த லாக் டவுன் திரைப்படத்தில் நடித்திருக்கும் பிரியா வெங்கட், இந்துமதி, ராஜ்குமார், ஷாம்ஜி, லொள்ளு சபா மாறன், விது, சஞ்சீவி, பிரியா கணேஷ், ஆஷா, அனைவரும்  கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கே ஏ சக்திவேல் ஒளிப்பதிவு  காட்சிகளை சிறப்பாக பதிவு செய்திருக்கிறது.

இசையமைப்பாளர்கள் என் ஆர் ரகுநாதன், சித்தார்த் விபின் என இரு இசையமைப்பாளர்கள் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.

கொரோனா கால ஊரடங்கின் பின்னணியில் ஒரு இளம் பெண் சந்திக்கும் சவால்களையும், அவளது மன உறுதியையும் விவரிக்கும் ஒரு உளவியல் சார்ந்த உணர்ச்சிகரமான  திரைப்படம். 

இயக்குனர் ஏ.ஆர். ஜீவா இயக்கியுள்ள இந்த லாக்டவுன் திரைப்படம், சமூக அக்கறை மற்றும் எதார்த்தமான, சஸ்பென்ஸ் மற்றும் ஆழமான அனுபவத்தை மிகச் சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஏ‌.ஆர் ஜீவா.

இளம் பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை தரும் படமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஏ‌.ஆர் ஜீவா.

மொத்தத்தில், லாக்டவுன் திரைப்படம் பெண்களைப் பெற்ற பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம்.

CLOSE
CLOSE
error: Content is protected !!