‘மனிதன் தெய்வமாகலாம்’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- செல்வராகவன், குஷி ரவி,  ஆர்.எஸ்.சதீஷ், கௌசல்யா, மைம் கோபி, ஒய்.ஜீ.ஃ மகேந்திரா, பேபி லிர்த்திகா, சேலம் தீபக், லிர்த்திகா, சுதா, ஜோதிக்கண்ணன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- டென்னிஸ் மஞ்சுநாத்.

ஒளிப்பதிவாளர் :- ரவி வர்ம்.

படத்தொகுப்பாளர் :- தீபக்.எஸ்.

இசையமைப்பாளர் :- ஏ.கே.பிரியன்.

தயாரிப்பு நிறுவனம் :- வயோம் என்டர்டெயின்மென்ட்ஸ்.

தயாரிப்பாளர்கள் :- விஜயா சதீஷ், ஆர்.எஸ்.சதீஷ்.

மக்கள் தொடர்பு :- ரேகா.

ரேட்டிங் :-  2.75./5.

தமிழ்த் திரைப்பட  உலகில் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் ஏராளமாக  வந்திருக்கிறது.

அப்படி ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் திரைப்படம்தான் ‘மனிதன் தெய்வமாகலாம்’ ஏப்ரல் 10 தேதி அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

சேலம் மாவட்டம் அருகில் உள்ள பொன் வயல்  கிராமத்திற்கு   சரியான போக்குவரத்து வசதி இல்லாததால், எந்தவிதமான அடிப்படை வசதியும் இல்லாமல் அங்கு வசிக்கும் மக்கள்  பழுதடைந்து போன  சாலையில் தான் பயணம் செய்து தனது அன்றாட பணிக்கு செய்ய வேண்டிய சூழலில்  இருக்கிறார்கள்.

இந்த கிராமத்தைச் சேர்ந்த கதாநாயகன் செல்வராகவன் பாய் மற்றும் தந்தை இல்லாத நிலையில் தனது வாழ்க்கையை  நுங்கு மற்றும் பதநீர் விற்று  பிழைப்பு நடத்தி வாழ்ந்து  வருகிறார்.

இந்த நிலையில் கதாநாயகன் செல்வராகவன் விட ஒரு படி வசதியான குடும்பத்தில் கதாநாயகி குஷி ரவிக்கும் கதாநாயகன் செல்வராகவனுக்கும் திருமணம் நடைபெறுகிறது.

கதாநாயகன் செல்வராகவனை திருமணம் செய்து கொண்டு மலை போல் நம்பி வந்த கதாநாயகி குஷிரவியை மகாராணி போல் நன்றாக கவனித்துக் கொள்கிறார்.

தன்னுடைய மனைவி கதாநாயகி குஷிரவி மீது கதாநாயகன் செல்வராகவன் அளவு கடந்த காதலையும் வெளிப்படுத்துகிறார்.

தன்னுடைய மனைவி  கதாநாயகி குஷி ரவியின் பேச்சைக் கேட்டு,  தன்னுடைய ஊரில் இருக்கும் சொந்த பந்தங்களிடம் கடன் வாங்கிக் கொண்டு, மெயின் ரோடு அருகே கதாநாயகன்  செல்வராகவன் ஹோட்டல் ஒன்றை ஆரம்பிக்கிறார்.

இப்படிப்பட்ட இவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்க, நிலையில் மற்றொரு பக்கம்  அதே கிராமத்தில் ஆளும்கட்சி மந்திரியான ஒய் ஜி மகேந்திரனின் உறவினரான வில்லன் மைம் கோபி, மில் கம்பெனி ஒன்றை நடத்தி கொண்டு

தன்னுடைய மில் கம்பெனியில், பணிபுரியும் பெண்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து அவர்கள் வட்டி செலுத்த முடியாத, பெண்களை தனது காம இச்சைக்கு பயன்படுத்தி  கொள்கிறான்.

ஆளும்கட்சி மந்திரியான ஒய் ஜி மகேந்திரனின்  உறவினரான வில்லன் மைம் கோபியிடம் வட்டிக்கு பணம் வாங்கிய  பல பெண்கள் இறந்து இருக்கிறார்கள்.

இந்த சூழலில் கதாநாயகன் செல்வராகவனை சுற்றி சுற்றி வரும் சிறுமி பேபி லிர்த்திகா, இரவு நேரத்தில் கதாநாயகன் செல்வராக அவனை பார்த்துவிட்டு தங்களது கிராமத்திற்குச் செல்லும் வழியில் இறந்து கிடக்கிறார்.

கதாநாயகன் செல்வராகவன் மற்றும் இந்த கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் சோகத்தில் மூழ்கி விடுகின்றனர்.

அதன் பிறகு மிகப்பெரிய அளவில் ஒரு சம்பவம் அந்த கிராமத்தில்  நிகழ்கிறது.

அந்த சம்பவத்திற்குப் பிறகு கதாநாயகன் செல்வராகவன் என்ன ஆனார்.

அந்த சிறுமி பேபி லிர்த்திகா இறப்புக்கு காரணம் யார்?

சிறுமி பேபி லிர்த்திகா இறப்புக்கான காரணத்தை  கதாநாயகன்  செல்வராகவன் கண்டுபிடித்தாரா?,  கண்டுபிடிக்கவில்லையா?, 
என்பதுதான் இந்த “மனிதன் தெய்வமாகலாம்”  திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த  ‘மனிதன் தெய்வமாகலாம்’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக இயக்குனர் செல்வராகவன் நடித்திருக்கிறார்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் செல்வராகவன் அமைதியான ஒரு சாந்தமான முகம் கொண்டு சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்பதை போல் இறுதி காட்சியில் அவர் செய்யும் சம்பவங்கள் மூலம் திரைப்படம் முழுக்க  சிறப்பாக நடித்து இருக்கிறார்.

இந்த  ‘மனிதன் தெய்வமாகலாம்’ திரைப்படத்தில் கதையின் நாயகியாக குஷி ரவி, நடித்துள்ளார்.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் குஷி ரவி, தனது அழகான முகத்துடன் இயல்பான நடிப்பால் திரைப்படம் பார்க்கும் அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.

கதையின் நாயகன் செல்வராகவனின் உறவினர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆர் எஸ் சதீஷ், அவருடைய மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கௌசல்யா, வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மைம் கோபி, அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஒய் ஜி மகேந்திரன், பேபி லிர்திகா, சேலம் தீபக் உள்ளிட்ட அனைவரும் தங்களது நடிப்பை அளவாக கொடுத்திருந்தனர்.

ஒளிப்பதிவாளர் ரவி வர்ம் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

இசையமைப்பாளர்  ஏ.கே.பிரியன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

அடிப்படை  வசதி இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும்  கிராம மக்களின் பிரச்சனைகளோடு, கந்துவட்டி கொடுமைகளை எதிர்கொள்ளும் பெண்களின் அவலநிலையை மிக அழுத்தமாக பதிவு செய்தது  மட்டுமல்லாமல், அதற்கான  திரைக்கதையை மிகவும் எதார்த்தமாக  இயக்கியிருக்கிறார் இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத்,

மொத்தத்டில், ‘மனிதன் தெய்வமாகலாம்’ திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் இதயத்தை கனக்கச் செய்யும்.

error: Content is protected !!