’காக்கி சர்க்கஸ்’ இணையத்தொடர் விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- சுபாஷ் செல்வம், முனிஷ்காந்த், ராஜேஷ் மாதவன், கௌதமி நாயர், வின்சு ரேச், சாவித்திரி, அம்ருதா அப்துல் லீ,  மருதுபாண்டியன்,  ராகேஷ்   உஷார், விக்னேஷ்வர்,  அருண்குமார் பாவும்பா,  சித்திரசேனன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- அமீன் பாரிஃப்.

ஒளிப்பதிவாளர் :- நீரஜ் ரேவி.

படத்தொகுப்பாளர் :- அர்ஜுன் பாபு.

இசையமைப்பாளர் :- விபின் பாஸ்கர்.

தயாரிப்பு நிறுவனம் :- ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட்.

தயாரிப்பாளர் :- ஸ்ரீநிதி சாகர்

மக்கள் தொடர்பு :- சதீஷ் ( AIM )

ரேட்டிங் :-  3.75./5.

தமிழ் மற்றும் மலையாள ZEE5 தங்களது அடுத்த ஒரிஜினல் தொடரான ‘காக்கி சர்கஸ்’-ஐ அறிவித்துள்ளது.

வித்தியாசமான நகைச்சுவை, அதிரடி, கற்பனை மற்றும் திரில்லர் அம்சங்கள் கலந்த இந்த ஏழு எபிசோடுகள் கொண்ட இனையத்தொடர், ஒரு சப்-ஜெயிலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

இனையத்தொடர் ஆரம்பிக்கும் போது ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம் ( ‘Once Upon a Time in Kayamkulam’ ) என்ற பெயரில் உருவான இந்த இனையத்தொடர், தற்போது ‘காக்கி சர்கஸ்’ என்ற புதிய பெயரில் பார்வையாளர்களை சந்திக்க வருகிறது.

துணைச் சிறைச்சாலை கண்காணிப்பு அதிகாரி உள்ள முனீஷ்காந்த், சிறைச்சாலைக்கு வரும் குற்றவாளிகள் அனைவரையும் திருத்துவது தான் சிறைச்சாலையின் கடமை என்பதை நம்பி சிறைச்சாலைக்குள் சிறிய அளவிலான நூலகம் ஒன்றை உருவாக்கி  நடத்தி வருகிறார்.

சிறைச்சாலைக்குள் வரும் கைதிகளிடம் தான் எழுதிய புத்தகத்தை கொடுத்து படிக்க சொல்வதோடு, குற்ற சம்பவங்களுக்கான தீர்வுகளையும் தான் படிக்கும் புத்தகத்திலேயே தேடுகிறார்.

சிறைச்சாலை கண்காணிப்பு அதிகாரி இருக்கும் முனீஷ்காந்துடன்
இனைத்து பணிபுரியும் காவலராக சுபாஷ் செல்வம் பணியாற்றுகிறார்.

இந்த நிலையில், சிறைச்சாலைக்குள் இருக்கும் சிறிய  கண்ணகி கோவிலில் உள்ள உண்டியலில் இருக்கும் பணம் திருடப்படுகிறது.

சிறைச்சாலைக்குள் இருக்கும் சிறிய கண்ணகி கோவில் உண்டியலில் உள்ள பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் வெளியே தெரிவதற்கு முன்பு உண்டியல் பணத்தை இருக்கும் இடத்தில் வைத்தாக வேண்டிய நிலைக்கு காவலர் சுபாஷ் செல்வம் தள்ளப்படும் நிலை உருவாகிறது.

இந்த நிலையில், எப்படியாவது வங்கியில் கடன்  வாங்கியாவது அந்த  பணத்தை கோவில் உண்டியலில் போட முடிவு செய்கிறார்.

அதன்படி வங்கியில் வாங்கிய கடனை வாங்கிய அந்த பணத்தை தன் வீட்டில் வைத்திருக்க, அங்கேயும் உண்டியல் திருடன் அந்த பணத்தையும் திருடி விடுகிறான்.

கடன் வாங்கிய பணத்தையும் பறிகொடுத்த  காவலர் சுபாஷ் செல்வம், சிறைச்சாலையில் உள்ள கோவில் உண்டியலை திருடிய திருடன் யார் ?  இரண்டு குற்றங்கள் செய்த திருடனை கண்டுபிடித்தாலும்,  அந்த திருடனை எதுவும் செய்ய முடியாத நிலையில் தள்ளப்படுகிறார்.

கோவில் உண்டியல் பணம் மற்றும் தனது சொந்த பணத்தை திருடிய திருடனை எப்படியாவது ஆதாரத்துடன் பிடித்து, அவனிடம் இருந்து பணத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்ற முயற்சியில்  இறங்குகிறார் காவலர் சுபாஷ் செல்வம்.

திருடன் இருந்து திருடிய பணத்தை பறிமுதல் செய்தாரா?, பறிமுதல் செய்யவில்லையா?,

பணத்தை திருடிய திருடனை ஆதாரத்துடன் கைது செய்து தண்டனை பெற்று  தந்தாரா?, தண்டனை பெற்று தரவில்லையா?, என்பதுதான் இந்த ‘காக்கி சர்க்கஸ்’ இனையத்தொடரின் மீதிக்கதை.

இந்த காக்கி சர்க்கஸ் இனையத்தொடரில் முதன்மை  கதாபாத்திரங்களில்  முனீஷ்காந்த் மற்றும் சுபாஷ் செல்வம் இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள்.

சிறைச்சாலை கண்காணிப்பு  அதிகாரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் முனீஷ்காந்த், மிகவும் சிறப்பான முறையில் நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

முனீஷ்காந்த், வழக்கமான தன்னுடைய  நகைச்சுவையை  தவிர்த்துவிட்டு, கதாபாத்திரத்திற்கு என்ன  தேவையோ அதை மட்டுமே வெளிப்படுத்தியிருப்பது  அவர் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருப்பதோடு, மட்டுமல்லாமல் ஒரு சிறந்த நடிகராக தன்னை  வித்தியாசப்படுத்தி இருக்கிறார். 

காவலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுபாஷ் செல்வம், சிறப்பாக நடித்திருக்கிறார்.

சிறை காவலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுபாஷ் செல்வம்,  கதாபாத்திரத்திற்கு மிகவும் கச்சிதமாக   பொருந்திருக்கிறார்.

திருடன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜேஷ் மாதவன் மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

திருடன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜேஷ் மாதவன், மிக எளிமையான மனிதராக வலம் வந்தாலும், பணத்திற்காக அல்லாமல் பெயருக்காக திருடுவதும், அதில் இருந்து தப்பிப்பதும் இனையத்தொடரின் சுவாரஸ்யத்தை  அதிகப்படுத்தி உள்ளது.

இந்த காக்கி சர்க்கஸ் இனையத்தொடரில் கதையின் நாயகிகளாக வின்சு ஷாம் மற்றும் கெளதமி ஆகியோர்  தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும்  எந்தவிதமான குறையின்றி சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

அப்துல் லீ, மருதுபாண்டியன், ராகேஷ், உசர், விக்னேஷ்வர், அருண்குமார் சாவித்ரி, அம்ருதா, உள்ளிட்ட இந்த இனையத்தொடரில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு பொறுத்தமான தேர்வாக  தேர்வு செய்து இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் நீரஜ் ரேவி,  இனையத்தொடருக்கு ஒளிப்பதிவு மூலம் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

இசையமைப்பாளர்கள் விபின் பாஸ்கர், இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை  கதைக்கேற்றவாறு பயணித்திருக்கிறார்.

எளிமையான கதையின் கருவுக்கு பல கிளைக்கதைகளுடன் சிறப்பான திரைக்கதை அமைத்து சிறைச்சாலைக்குள் இருக்கும் கண்ணகி கோவில் உண்டியலையும் இணையத் தொடரில் ஒரு கதாபாத்திரமாக  உருவாக்கி, அதற்கான பின்னணி கதையோடு ஒவ்வொரு அத்தியாயத்தையும் மிக சுவாரஸ்யமாக  இனையத் தொடரை இயக்கி இருக்கிறார் இயக்குநர் அமீன் பாரிப்.
 
மொத்தத்தில், இந்த ‘காக்கி சர்க்கஸ்’ இனையத்தொடர்  காமெடி  கலகலப்பையும் கதை மற்றும் திரைக்கதையின் விறுவிறுப்பையும்  இணையத் தொடர் ரசிகர்களை கண்டிப்பாக ரசிக்க வைக்கும்.

error: Content is protected !!