‘ரூம்பாய்’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- C.நிகில், ஹர்ஷா, இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு கலை கற்பகம்,
கவிதா விஜயன், சமீர், சிட்டி ராஜா, அருண்ராஜா, பிரபாகர், கேரளா பெஹமின், சாதனா, நிதி மரோலி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஜெகன் ராயன்.
ஒளிப்பதிவாளர் :- சி.பாரதி ராஜன் Dft.
படத்தொகுப்பாளர் :- டி.வி. மீனாட்சி சுந்தர்.
இசையமைப்பாளர் :- வேலன் சகாதேவன்.
தயாரிப்பு நிறுவனம் :- ஏ.சி.எம்.சினிமாஸ்.
தயாரிப்பாளர் :- சூரியகலா சந்திரமூர்த்தி.
மக்கள் தொடர்பு :- புவன் செல்வராஜ்.
ரேட்டிங் :- 2.5../5.
இது ஏலகிரியில் உள்ள ஒரு ஹோட்டலில் நடக்கும் கொலையை மையமாகக் கொண்ட ஒரு குடும்ப சென்டிமென்ட் கலந்த குற்றப்புலனாய்வு த்ரில்லர் திரைப்படம் ஆகும்.
தாய் தந்தை இல்லாமல் இருக்கும் கதாநாயகன் நிகில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு ஏலகிரியில் இருக்கும் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ரூம் பாய் வேலைக்கு சேர்கிறான்.
அந்த நட்சத்திர ஹோட்டலில் இருக்கும் மேனேஜர் மிகவும் கண்டிப்பாக நடந்து கொள்வதுடன் பணி புரியும் ஆட்கள் சிறு தவறு செய்தால் அவர்களை அடித்து உதைத்து துன்புறுத்துகிறார்.
நட்சத்திர ஹோட்டலில் பணிபுரியும் இளைஞர்கள் அனைவரையும். ஹோட்டல் மேனேஜர் அனைவரையும் வலுக்கட்டாயமாக வேலை வாங்குகிறார்.
அந்த நட்சத்திர ஹோட்டலில் இருந்து தப்பிக்க நினைக்கும் இளைஞர்களை அடித்து கொடுமைப்படுத்துகிறார்.
கதாநாயகன் நிகில் மற்றும் அவருடைய நண்பர் காத்து கருப்பு கலையும் அந்த நட்சத்திர ஹோட்டலில் இருக்கும் மேனேஜரை கண்டு அங்கு பணிபுரியும் அனைவரும் நடுங்கி போய் நிற்க, கதாநாயகன் நிகில் மட்டும் அவரை எதிர்த்து நிற்கிறார்.
ஏலகிரியில் இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்குவதற்கு வரும் கதாநாயகி ஹர்ஷா, கண்டவுடன் கதாநாயகன் நிகில் காதல் கொள்கிறார்.
அதுமட்டுமல்லாமல், அந்த நட்சத்திர ஹோட்டல் அனைத்து அறைகளிலும் ஹிடன் கேமரா வைத்து அதன் மூலமாக அறையில் இருக்கும் ஜோடிகளை வீடியோ எடுத்து அவர்களை ப்ளாக் மெயில் செய்து பணம் பறிக்கும் வேலையும் அந்த நட்சத்திர ஹோட்டல் நிர்வாகம் பார்த்து வருகிறது.
இந்நிலையில் அந்த நட்சத்திர ஹோட்டல் மேனேஜர் திடீரென கொல்லப்படுகிறார்.
நட்சத்திர ஹோட்டல் மேனேஜரை கொலை செய்தது யார்? கொலைக்கான பின்னணி என்ன? காவல்துறையினர் கொலை செய்த குற்றவாளியை கண்டு பிடித்தார்களா?, கண்டு பிடிக்கவில்லையா?, என்பதுதான் இந்த ‘ரூம்பாய்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த இந்த ‘ரூம்பாய்’ திரைப்படத்தில் புதுமுக கதாநாயகனாக நிகில் நடித்திருக்கிறார்.
புதுமுக கதாநாயகனாக நடித்திருக்கும் நிகில் ஆரம்ப காட்சிகளில் சாதாரணமாக வந்து போய்க் கொண்டிருக்கும் கதாநாயகன் நிகிலின் வாழ்க்கை பிளஷ்பேகின் போது குடும்ப சென்டிமென்ட்,, தங்கை சென்டிமென்ட் என்று நடிப்பில் வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் நிகில் இன்னும் கொஞ்சம் பயிற்சி எடுத்து நடித்திருந்தால் கதாபாத்திரத்திற்கு சிறப்பாக இருந்திருக்கும்.
இந்த இந்த ‘ரூம்பாய்’ திரைப்படத்தில் புதுமுக கதாநாயகியாக ஹர்ஷா, நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் கதாநாயகிகாண பெரிய வேலை ஒன்றும் இல்லாததால் சுமாரா நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு கலை கற்பகம், கவிதா விஜயன், சமீர், சிட்டி ராஜா, அருண்ராஜா, பிரபாகர், கேரளா பெஹமின், சாதனா, நிதி மரோலி, இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் கொடுக்கப்பட்ட வேலையை மிக சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சி.பாரதி ராஜன் Dft ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.
இசையமைப்பாளர் வேலன் சகாதேவன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் மர்டர் மிஸ்டரி யை மேலும் விறுவிறுப்பாக்கியிருக்கும்.
குடும்பம் பாசம் காதல் நகைச்சுவை கள்ளக்காதல் கொலை என அனைத்தும் கலந்த கலவையாக உள்ள கதையை கையில் எடுக்க இயக்குனர் மிகவும் அருமையான ஒரு திரைகதையை உருவாக்கி இருந்தால் மர்டர் மிஸ்டரி திரைப்படமாக அமைந்திருக்கும்
மொத்தத்தில், இந்த ‘ரூம்பாய்’ திரைப்படம் மசாலா படமாக உருவாகி இருக்கிறது.











