‘ரஜினி கேங்க்’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- ரஜினி கீஷன், த்விகா, முனிஷ்காந்த், மொட்ட ராஜேந்திரன், கூல் சுரேஷ், கல்கி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- எம். ரமேஷ் பாரதி.

ஒளிப்பதிவாளர் :- என்.எஸ். சதீஷ் குமார்.

படத்தொகுப்பாளர் :- ஆர்.கே. வினோத் கண்ணா.

இசையமைப்பாளர் :- எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட்

தயாரிப்பு நிறுவனங் :- மிஷ்ரி எண்டர்பிரைசஸ்.

தயாரிப்பாளர்கள் :- சி.எஸ்.பதம்சந்த், சி.அரியந்த் ராஜ் & ரஜினி கிஷென்.

ரேட்டிங் :- 2.5./5.

அந்த கிராமத்தில் உள்ள கிராமத்தில் உள்ள பண்ணையாரின் மகளான  கதாநாயகி த்விகாவும் கதாநாயகன் ரஜினி கிஷனும், இருவரும் காதலித்து வரும் நிலையில் இருவரும் அந்த கிராமத்தை  விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்கிறார்கள்.

இந்த நிலையில் கதாநாயகி த்விகா கதாநாயகன் ரஜினி கிஷன் இருவருக்கும்  முனீஷ்காந்த் தன்னுடைய காரில் லிப்ட் கொடுக்கிறார்.

வரும் வழியில் திருடனான கல்கியும் அந்த முனீஷ்காந்த் காரில் லிப்ட் கேட்டு ஏறிக்கொண்டு அவர்களுடன் பயணிக்கிறார்.

இரவு நேரம் என்பதால் காரில் பயணிக்கும் இவர்கள், அனைவரும் போக வேண்டிய இடத்தை விட்டு அனைவரும் ஏற்காடிற்கு சென்று விடுகிறார்கள்.

ஒரு பக்கம் இவர்களை கதாநாயகி த்விகா தந்தையின் ஆட்கள் ஒரு பக்கம் தேட மறுபக்கம் முனிஷ்காந்த் அமைச்சரின் திருடு போன காரை  காவல்துறையினர் ஒருபக்கம் தேட பணம் நகையை திருடிக் கொண்டு அந்த காரில் வரும் கல்கி என பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு தரப்பினர், இவர்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள். 

இதற்கிடையே, கதாநாயகன் ரஜினி கிஷனுக்கும் கதாநாயகி த்விகாவுக்கு திருமணம் நடக்கிறது.

அந்த திருமணத்திற்குப் பிறகு  திரைப்படம் திடீரென்று பரபரப்பாக தொடங்குகிறது.

இறுதியில் தொலைந்து போன அமைச்சரின் காரை காவல்துறையினர் கண்டு பிடித்தார்களா?, கண்டு பிடிக்கவில்லையா?,

கதாநாயகன் ரஜினி கிஷனையும் மற்றும்
கதாநாயகி தவிகாவின் தந்தையின் ஆட்கள் இவர்களை கண்டு பிடித்தார்களா?,  கண்டு பிடிக்கவில்லையா?, என்பதுதான் இந்த ‘ரஜினி கேங்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘ரஜினி கேங்’ திரைப்படத்தில் கதாநாயகனாக ரஜினி கிஷன் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் ரஜினி கிஷன், காமெடி ஜானர் படத்திற்கு திரைப்படம் என்பதால்

நடனம், காதல், காமெடி என திரைப்படம் முழுவதும் பல திரைப்படங்கள் நடித்த நடிகரை போல்  நடித்திருக்கும் நடிகர் ரஜினி கிஷன் முதல் திரைப்படம் போல் தெரியவில்லை மிக அருமையாக நடித்திருக்கிறார்.

ஓம்இந்த ‘ரஜினி கேங்’ திரைப்படத்தில் கதாநாயகியாக தவிகா நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் த்விகா, அளவான நடிப்பு காமெடி மற்றும் காதல் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளிலும் மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

முனீஷ்காந்த் காமெடி என்று சொல்லிக்கொண்டு ஒரே மாதிரியான ரியாக்‌ஷனை கொடுத்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை  சலிப்படைய செய்கிறார்.

கூல் சுரேஷ் நடிப்பு  தேவையில்லாமல் நானும் நடிக்கிறேன் என்ற பெயரில்  கத்திக்கொண்டு இருப்பது ரசிகர்களை எரிச்சல் அடைய செய்கிறது.

மொட்ட ராஜேந்திரன், கல்கி   வரும் காட்சிகளிலும் காமெடி மிக மிகக் குறைவு.

ஒளிப்பதிவாளர் என்.எஸ்.சதீஷ்குமார், ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்தையும், பாடல் காட்சிகளையும் கலர்புல்லாக  காட்சிப்படுத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபெர்ட்டின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.

முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைப்பட ரசிகர்களை எந்தவிதமான லாஜிக்கையும் பார்க்காமல் சிரிக்க வேண்டும் என்பதில் அதிகம் மெனக்கெட்டு அருமையான திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்
இயக்குநர் எம்.எஸ்.ரமேஷ் பாராதி.

மொத்தத்தில், ‘ரஜினி கேங்க்’ திரைப்படம் காமெடி கலாட்டா.

error: Content is protected !!