‘கருப்பு பல்சர்’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- அட்ட கத்தி தினேஷ், ரேஷ்மா வெங்கடேஷ், மதுனிகா,  மன்சூர் அலிகான், சரவண சுபையா, கலைஅரசன் கண்ணுசாமி, பிரின்ஸ் அஜய், பிராங்க் ஸ்டார் ராகுல், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- முரளி கிரிஷ் எஸ்.

ஒளிப்பதிவாளர் :- பாஸ்கர் ஆறுமுகம்

படத்தொகுப்பாளர் :- சசி தாட்ச.

இசையமைப்பாளர் :- இன்பராஜ் ராஜேந்திரன்.

தயாரிப்பு நிறுவனம் :- யஷோ என்டர்டெயின்மென்ட்.

தயாரிப்பாளர் :- Dr. சத்யா முரளி கிருஷ்ணன்.

ரேட்டிங் :-  2/5.

கதாநாயகன் அட்டகத்தி தினேஷ் சென்னையில் ஒரு வாட்டர் பியூரிஃபையர் கம்பெனி ஒன்று வைத்து நடத்தி வருகிறார்.

கதாநாயகன் அட்டகத்தி தினேஷ் திருமணத்திற்கு பெண் தேடி வரும் நிலையில் கதாநாயகி ரேஷ்மா வெங்கடேஷ் மேட்ரிமோனி இணையத்தளம் மூலம் அறிமுகமாகிறார்.

கதாநாயகன் அட்டகத்தி தினேஷ் கதாநாயகி ரேஷ்மா வெங்கடேஷ் இருவருக்கும் கண்டதும் காதல் ஏற்படுகிறது.

கதாநாயகி ரேஷ்மா வெங்கடேஷ் கதாநாயகன் அட்டகத்தி தினேஷ் சந்திக்கும் நிலையில் தன்னிடம் கருப்பு பல்சர் இருப்பதாக பொய் சொல்கிறார்.

கதாநாயகி ரேஷ்மா வெங்கடேஷிடம் கூறிய  பொய்யை கதாநாயகன் அட்டகத்தி தினேஷ் உண்மையாக்குவதற்கு ஒரு பழைய கருப்பு பல்சர் வண்டியை மன்சூர் அலிகானிடம், இருந்து வாங்குகிறார்.

ஆனால் அந்த கருப்பு பல்சர் வண்டியை வாங்கியதிலிருந்து பல பிரச்சனைகள் ஏற்பட கதாநாயகன் அட்டகத்தி தினேஷ் மற்றும் கதாநாயகி ரேஷ்மா வெங்கடேஷ் இருவரும் அந்த கருப்பு பல்சர் வண்டியில் மூலம் விபத்து ஒன்றில் சிக்கிக் கொள்கிறார்கள்.

அதன் பிறகு அந்த கருப்பு பல்சர் வண்டியில் செல்லும் அனைவருக்கும் அதேபோல் நடக்க  அந்த வண்டியால் பல அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது.

கதாநாயகன் அட்டகத்தி தினேஷ் மற்றும் கதாநாயகி ரேஷ்மா வெங்கடேஷ் இருவரும் திருமணத்தில் இணைந்தார்களா?,  இணையவில்லையா?,

அந்த கருப்பு பல்சர் வண்டியை வைத்திருந்தது யார் என்பது தல நாயகன் அட்டகத்தி தினேஷுக்கு தெரிய வந்ததா? தெரிய வரவில்லையா?

அந்தக் கருப்பு பல்சர் வண்டியை வைத்திருந்தவரை கதாநாயகன் அட்டகத்தி தினேஷ் கண்டு பிடித்தாரா?, கண்டு பிடிக்கவில்லையா?, என்பதுதான் இந்த “கருப்பு பல்சர்” திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த “கருப்பு பல்சர்” திரைப்படத்தில் கதாநாயகனாக அட்டகத்தி தினேஷ் நடித்திருக்கிறார்.

நடிகர் ‘அட்டகத்தி’ தினேஷ்க்கு ‘லப்பர் பந்து’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மீண்டும் ஒரு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து அவர் கதாநாயகனாக நடித்திருக்கும்  “கருப்பு பல்சர்” திரைப்படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘அட்டகத்தி’ தினேஷ் கொடுக்கப்பட்டதை  மிகச் சிறப்பாக நடித்துள்ளார்.

இந்த “கருப்பு பல்சர்” திரைப்படத்தில் கதாநாயகியாக ரேஷ்மா வெங்கடேஷ் நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ரேஷ்மா வெங்கடேஷிற்கு பெரிய முக்கியத்துவம் கதையில் இல்லை என்றாலும் கொடுக்கப்பட்ட அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை மிக அருமையாக கொடுத்துள்ளார்.

கதாநாயகன் அட்டகத்தி தினேஷ் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் “பிராங்க் ஸ்டார்” ராகுல், அவரது மனைவி பைக்கில் செல்லும்போது நடைபெறும் காட்சிகள் சிரிக்க வைத்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தில்   மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருக்கும்  வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மன்சூர் அலிகான், காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரவண சுப்பையா, வில்லன் வலது கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கலையரசன் கண்ணுசாமி, பிரின்ஸ் அஜய்,
ஆகியோரும் கொடுக்கப்பட்ட அந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் பாஸ்கர் ஆறுமுகத்தின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

இசையமைப்பாளர் இன்பராஜ் ராஜேந்திரன் இசையில் பாடல்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை என்றாலும் பின்னணி இசை சில காட்சிகளில் சிறப்பாக இருந்தது.

படத்தொகுப்பாளர் சசி தக்ஷாவின் படத்தொகுப்பு ஓகேவாக இருந்தது.

பல்வேறு விதங்களில் தமிழ் திரையுலகில் பேய் கதை உள்ள திரைப்படங்கள் வந்திருந்தாலும் ஒரு பைக்கை வைத்து வித்தியாசமான பேய் கதை உள்ள திரைப்படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் முரளி கிரிஷ்.

இப்படி ஒரு ஒரு பைக்கை வைத்து வித்தியாசமான கதையை யோசித்து இருந்தாலும், திரைகதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் சிறந்த படைப்பாகவும் இருந்திருக்கும்.

பிளாஷ் பேக்கில் வரும் காட்சிகள் அனைத்தும் நன்றாக இருந்தது.

ஆனால் சிஜி காட்சிகளை இன்னும் கொஞ்சம் தத்ரூபமாக கொண்டு வந்திருக்கலாம்.

மொத்தத்தில், இந்த “கருப்பு பல்சர்” திரைப்படம் வித்தியாசமான திரில்லர் திரைப்படங்களை பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

Karuppu Pulsar – Trailer | Attakathi Dinesh | January 30 Release | Murali Krish | Blacksheep Music

error: Content is protected !!