‘வங்காள விரிகுடா’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- குகன் சக்கரவர்த்தியார், அலினா ஷேக், பொன்னம்பலம், வாசு விக்ரம், வையாபுரி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- குகன் சக்கரவர்த்தியார்.

ஒளிப்பதிவாளர் :- குகன் சக்கரவர்த்தியார்.

படத்தொகுப்பாளர் :- குகன் சக்கரவர்த்தியார்.

இசையமைப்பாளர் :- குகன் சக்கரவர்த்தியார்.

தயாரிப்பு நிறுவனம் :- மாதா பிதா ஃபிலிம் பேக்டரி.

தயாரிப்பாளர் :- குகன் சக்கரவர்த்தியார்

ரேட்டிங் :- 1.5./5.

தூத்துக்குடி மாவட்டத்தின் மாபெரும் வசதி படைத்த தொழிலதிபரான கதாநாயகன் குகன் சக்கரவர்த்தியார், தனது மனைவியால் இன்பமே இல்லாத இல்லற வாழ்க்கையினால் மனம் நொந்து போய் கடற்கரையில் தனிமையில் அமர்ந்து இருக்கும் போது, அவரது முன்னாள் காதலி கடலில் விழுந்து தற்கொலைக்கு முயற்சிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அவரை காப்பாற்றுகிறார்.

முன்னாள் காதலியின் நடந்த திருமண வாழ்க்கையும் தனது வாழ்க்கை போலவே இருப்பதை அறிந்துக் கொள்ளும் கதாநாயகன் குகன் சக்கரவர்த்தியார், தங்களுடைய வாழ்க்கை நல்லபடியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு கொலை செய்வதோடு, முன்னாள் காதலியுடன் வாழ்க்கை வாழவும் தொடங்குகிறார்.

இதற்கிடையே தன்னுடைய காதலிக்காக கதாநாயகன் குகன் சக்கரவர்த்தியால் கொலை செய்யப்பட்டவர், அவருடைய காதலியின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டுகிறார்.

காதலிக்காக நான் தான் கொலை செய்தேன் ஆனால் இறந்தவர் எப்படி தொலைபேசியில் பேச முடியும், என்ற குழப்பத்தில்  கதாநாயகன் குகன் சக்கரவர்த்தியார் இருக்கிறார்.

தனிமையில் இருக்கும் அவருடைய காதலியை அச்சப்பட வைக்கும் சில அமானுஷ்ய  சம்பவங்கள் நடக்கிறது.

இதனால், மேலும் குழப்பமடையும் கதாநாயகன் குகன் சக்கரவர்த்தியார், தன் காதலியையும், தன்னையும் மிரட்ட முயற்சிக்கும் நபர் யார் ?

கதாநாயகன் குகன் சக்கரவர்த்தியார், தன்னையும் தனது காதலியும் தொலைபேசியிலும் மிரட்டிக் கொண்டிருக்கும் நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

கதாநாயகன் குகன் சக்கரவர்த்தியார், தனது காதலையும் மிரட்டும் நபரை கண்டு பிடித்தாரா?,  கண்டு பிடிக்கவில்லையா?,   என்பதுதான் இந்த ‘வங்காள விரிகுடா’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘வங்காள விரிகுடா’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
 
கதாநாயகனாக நடித்து திரைப்படத்தை இயக்கவும் செய்திருக்கும் குகன் சக்கரவர்த்தி, திரை முழுவதையும் தன்வசப்படுத்தி பார்வையாளர்களை பரவசப்படுத்துகிறார்.

கதாநாயகனின் மனைவி காதலி என்று இரண்டு கதாநாயகிகளும், கமர்ஷியல் கதாநாயகிகளாக பாடல்கள் மற்றும் காதல் காட்சிகளுக்கு மட்டும் பயன்படுத்தி உள்ளனர்.

இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் பொன்னம்பலம், வையாபுரி, வாசு விக்ரம் ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஏராளமான புதிய முகங்களும் நடித்திருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, இசை, உள்ளிட்ட 21 துறைகளில் பணியாற்றி தனி ஒரு நபராக இந்த ‘வங்காள விரிகுடா’ திரைப்படத்தை தோளில் சுமந்திருக்கும் குகன் சக்கரவர்த்தியின் சிறப்பாக இருக்கிறது.

மொத்தத்தில், ‘வங்காள விரிகுடா’ ?.

error: Content is protected !!