‘அருள்வான்’ ( ‘Arulvaan’ ) திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், பேபி கிருத்திகா,  ஜான் விஜய், காளி வெங்கட், VTV கணேஷ், சரவணன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- கணேஷ் விநாயகன்.

ஒளிப்பதிவாளர் :- எம்.சுகுமார்.

படத்தொகுப்பாளர் :- லாரன்ஸ் கிஷோர்.

இசையமைப்பாளர் :- ஜி.வி.  பிரகாஷ் குமார்.

தயாரிப்பு நிறுவனம் :- 90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்.

தயாரிப்பாளர்கள் :- எஸ்.ஜி.சரவணன், சுபா சரவணன், சரண், சரத்.

மக்கள் தொடர்பு :- நிகில் முருகன்.

ரேட்டிங் :-  4./5.

மலைவாழ் பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி, தன் பகுதிக்குக் கல்வி கிடைப்பதற்காக மாவட்ட ஆட்சியருக்குக் கோரிக்கை விடுக்கிறார்.

அந்தப் பழங்குடியின  மக்களின் கல்வி மற்றும் வாழ்வாதாரப் கல்விக்கு போராட்டத்தையும் வாழ்க்கை மேம்பாட்டிற்காக, பல்வேறு எதிர்ப்புகளையும் பலத் தடைகளையும் தாண்டி அந்த சிறுமி போராடுவதே இந்த  ‘அருள்வான்’ திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.

மலைவாழ் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த ஆரவ், ரம்யா பாண்டியன், மகள் சிறுமி கிருத்திகா படிக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்.

ஆனால், மலைவாழ் பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலும்  வாழ்க்கை சூழல், மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத மலைக் கிராமம் என்பதால் ஆகியவை, சிறுமி கிருத்திகா கல்வி கற்க வேண்டும் என்ற கனவுக்கு தடையாக உள்ளது.

எப்படியாவது சிறுமி கிருத்திகா படித்தாக வேண்டும் என்பதில் அக்கறை  காட்டுவதோடு, தனது மலை மலை கிராமத்தில் உள்ள  பிள்ளைகளும் கல்வி கற்க வேண்டும் என்ற சிறுமி கிருத்திகா லட்சியப் பயணத்தில் மாவட்ட ஆட்சியரான கதாநாயகன் அருள்நிதியை சந்திக்கிறார்.

மாவட்ட ஆட்சியரான கதாநாயகன் அருள்நிதி சிறுமி கிருத்திகா படிக்க வேண்டும் என்று கனவுக்கு உதவினாரா ?, உதவவில்லையா?,

சிறுமி கிருத்திகாவின்  முயற்சியினால் மலைவாழ் சிறுமியின் கல்வி கனவு நிறைவேறியதா?, நிறைவேறவில்லையா ?, என்பதுதான் இந்த ‘அருள்வான்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘அருள்வான்’ திரைப்படத்தில் கதாநாயகனாக அருள்நிதி நடித்திருக்கிறார்.

மலைவாழ் பழங்குடி மக்களின்  வாழ்வாதாரத்திற்கும் கல்விக்கும் மிகவும் நேர்மையான தேனி மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருள்நிதி, தன்னுடைய முதிர்ச்சியான நடிப்பின் மூலம் முத்துவேல் என்ற கலெக்டர் கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு  சேர்த்திருக்கிறார்.

இந்த ‘அருள்வான்’  திரைப்படத்தில் மற்றொரு  கதாநாயகனாக ஆரவ், நடித்திருக்கிறார்.

மற்றொரு கதாநாயகனாக நடித்திருக்கும் ஆரவ், மலைவாழ் பழங்குடியினராக தன்னை மாற்றிக்கொள்ள மிகவும் கடுமையாக உழைத்திருப்பது காட்சிகளில் தெரிகிறது.

இந்த ‘அருள்வான்’  திரைப்படத்தில் கதாநாயகியாக ரம்யா பாண்டியன் நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ரம்யா பாண்டியனுக்கு திரைப்படத்தில் பெரிய அளவில் நடிப்பதற்கான வேலை ஒன்றும் இல்லை என்றாலும், தனக்கு  வழங்கப்பட்ட கதாபாத்திரத்தை மன  நிறைவாக செய்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து பாராட்டு பெறுகிறார்.

பழங்குடியின சிறுமி  கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிருத்திகா, தனது மிகவும் எதார்த்தமான  மிக அழுத்தமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கிறார்.

சிறுமி கிருத்திகாவிற்க்கு படிப்பின் மீது உள்ள ஏக்கம், தன்னுடைய தாய் தந்தையை பிரிந்து வந்த பிறகு ஏற்படும் அச்சம், பயம் ஏக்கம், தவிப்பு என அனைத்து விதமான உணர்வுகளையும் மிக அருமையாக நடிப்பு மூலம்  திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பெயர் பெற்று கொடுத்திருக்கிறார்.

பத்திரிக்கையாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காளி வெங்கட், காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜான் விஜய், மாவட்ட ஆட்சியர்  அருள்நிதியின் உதவியாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விடிவி கணேஷ் ஆகியோரது  நடிப்பு  திரைக்கதை ஓட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் மலைகளின் அழகையும், மலைவாழ் மக்களின் வாழ்க்கையையும் ரசிகர்களிடம் மிக நேர்த்தியாக  காட்சிப்படுத்தி இருக்கிறார்

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கதைக்களத்தையும், திரைக்கதைக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கை போராட்டங்களையும் மலைவாழ் மக்களின் வலி மிகுந்த வாழ்க்கையை உள்ள காட்சிகளுக்கு பின்னணி இசை மூலம்  உயிரூட்டியிருக்கிறார்.

மலைவாழ் மக்களின் கல்வி மற்றும் அடிப்படை வசதிகளுக்கான போராட்டத்தை உண்மைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தியதில் வெற்றி பெற்றிருப்பதோடு, தமிழக மக்கள் திரைப்பட ரசிகர்கள் மட்டும் இன்றி தற்போது ஆட்சியில் இருக்கும்  ஆட்சியாளர்களையும் மிகப்பெரிய அளவில் சிந்திக்க வைத்து மிக சிறப்பான திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் கணேஷ் விநாயகம்.

மொத்தத்தில், ‘அருள்வான்’  மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதி மற்றும் கல்வி கிடைக்க ஆண்டவன் அருள்வான்.

error: Content is protected !!