‘4 இடியட்ஸ்’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- ​புகழ், பிரக்யா நயன், இந்திரன், ரவி மரியா, வின்சென்ட் அசோகன், கும்கி அஸ்வின், திடியன், மகாநதி சங்கர், பாவா லக்ஷ்மணன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சாஜோ சுந்தர் முருகேசன்.

ஒளிப்பதிவாளர் :- யு.கே. செந்தில்குமார்.

படத்தொகுப்பாளர் :- எஸ்‌.என். ஃபாசில.

இசையமைப்பாளர் :- சுபாஷ் மணிரத்னம்.

தயாரிப்பு நிறுவனம் :- லட்சுமி மூவி மேக்கர்ஸ்.

தயாரிப்பாளர்கள்:- எம். கோகுல் கிருஷ்ணன், டாக்​டர் வத்​ஸன்.

மக்கள் தொடர்பு :- டைமன் பாபு.

வெளியீட்டு தேதி :- 04 செப்டம்பர்  2026.

ரேட்டிங் :-  2.5/5.

கொரோனா ஊரடங்கு உத்தரவு  கால கட்டங்களில் வருமானம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் கதாநாயகன் புகழ் மற்றும் அவருடைய  நண்பர்கள், திடியன், இந்திரன், கும்கி அஸ்வின், சிறு சிறு  குற்றங்களில் ஈடுபட்டு வரும் நான்கு நண்பர்கள் இணைந்து  பங்களாவுக்குள் கறுப்புப் பணம் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என கேள்விப்பட்ட கதாநாயகன் புகழ் மற்றும் அவருடைய  நண்பர்கள், திடியன்,  இந்திரன், கும்கி அஸ்வின், அனைவரும் கருப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் அந்த பாங்குளாவிற்குள் கருப்பு பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்கள்.

பங்களாவில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை கொள்ளையடிக்க சென்ற இடத்தில் ஒரு கொடூரமான கேங்ஸ்டரிடம் கதாநாயகன் புகழ் மற்றும் அவருடைய  நண்பர்கள், திடியன், இந்திரன், கும்கி அஸ்வின், அனைவரும் சிக்கிக் கொள்கிறார்கள்.

கதாநாயகன் புகழ் மற்றும் அவருடைய  நண்பர்கள், திடியன், இந்திரன், கும்கி அஸ்வின், கொடூரமான கேங்ஸ்டரிடம் அவர்கள் தப்பித்தார்களா?  தப்பிக்கவில்லையா? என்பதுதான் இந்த ‘4 இடியட்ஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘4 இடியட்ஸ்’ திரைப்படத்தில் கதாநாயகனாக புகழ் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் புகழின் இயல்பான உடல்மொழியும், டைமிங்கும் திரைப்படத்தின் நகைச்சுவைப் பகுதிகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

காமெடி நிகழ்ச்சிகளில் தனக்கென ரசிகர்களை உருவாக்கிய புகழ், கதாநாயகனாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டத்தில் இருக்கிறார்.

இந்த ‘4 இடியட்ஸ்’ திரைப்படத்தில் கதாநாயகியாக பிரக்யா நயன், நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும்  பிரக்யா நயன், புதிதாக திரைப்படத்தில் வேலை இல்லை என்றாலும் கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

ரவி மரியா, வின்சென்ட் அசோகன், மகாநதி சங்கர், அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

கதாநாயகன் புகழ் நண்பர்களாக நடித்திருக்கும் கும்கி அஸ்வின், இந்திரன், திடியன், மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் யு.கே. செந்தில்குமார் ஒளிப்பதிவு மூலம் ஒரு பங்களாவுக்குள்  நடக்கும் கதை என்பதால் மிகவும் சிறப்பாக திரைப்படம் ஆக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர் சுபாஷ் மணிரத்னம் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகவும் சிறப்பாக இசையமைத்திருக்கிறார்.

எளிதில் பணம் சம்பாதிக்க நினைக்கும் நால்வர் கருப்புப் பணம் இருப்பதாகக் கூறப்படும் ஒரு பாங்காவிற்குள் செல்லும் கதையில் சிறப்பாக திரைக்கதை அமைத்து மிகவும் அருமையாக இயக்கியிருக்கிறார் சாஜோ சுந்தர் முருகேசன்.

மொத்தத்தில், இந்த 4 இடியட்ஸ் கண்டிப்பாக ஒரு முறை பார்கலாம்.

error: Content is protected !!