’கும்கி 2’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- மதி, ஷ்ரிதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஹரிஷ் பேரடி, ஸ்ரீநாத், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- பிரபு சலமான்.
ஒளிப்பதிவாளர் :- M.சுகுமார்.
படத்தொகுப்பாளர் :- புவன்.
இசையமைப்பாளர் :- நிவாஸ் கே பிரசன்னா.
தயாரிப்பு நிறுவனம் :-
தயாரிப்பாளர் :- ஜெயந்திலால் காடா, தவல் காடா.
ரேட்டிங் – 2.75./5.
மலை மேல் உள்ள கிராமத்தில் வாழ்ந்து வரும் கதாநாயகன் மதி, பள்ளியிலிருந்து வரும் வழியில் வழி தவறி வந்து பள்ளத்தில் விழுந்த குட்டி யானை ஒன்றை காப்பாற்றுகிறான்.
குட்டி யானையை காப்பாற்றதிலிருந்து அந்த குட்டி யானை கதாநாயகன் மதியை சுற்றி சுற்றி வருகிறது.
ஊர் மக்களுக்கும் யாருக்கும் தெரியாமல் அந்த குட்டி யானையை கதாநாயகன் மதி வளர்த்து வருகிறான்.
தனது தாய் தந்தையிடம் கிடைக்காத பாசத்திற்காக ஏங்கும் கதாநாயகன் மதி அந்த குட்டி யானையின் பாசத்திற்கு அடிமையாகி விடுகிறான்.
அந்த குட்டி யானையும், கதாநாயகன் மதியும் வளர்ந்து பெரிதாகி சகோதரர்களைப் போலவே எப்போதும் ஒன்றாகவே திரிந்து கொண்டிருக்க, ஒருநாள் திடீரென்று யானை மாயமாகி விடுகிறது.
அந்த யானையை தேடி அலையும் கதாநாயகன் மதி ஒரு கட்டத்தில் அதன் நினைவில் தன்னை மட்டுமல்லாமல் அனைத்தையும் மறந்தவராக பித்து பிடித்தவன் போல் அலைந்து கொண்டிருக்கிறான்.
இந்த நிலையில் தனது ஆசிரியரின் அறிவுரையின்படி கல்லூரி சேர்ந்து படிப்புக்காக தன் ஊரை விட்டு செல்லும் கதாநாயகன் மதி, ஜந்து வருடங்களுக்குப் பிறகு தனது சொந்த மலை கிராமத்திற்கு திரும்புகிறான்.
அப்போது மாயமான தன்னுடைய யானை பற்றிய தகவல் ஒன்று அவருக்கு கிடைக்க அந்த தகவலை வைத்து கொண்டு தனது யானையை தேடி செல்லும் கதாநாயகன் மதிக்கு அவருடைய யானை கிடைத்ததா ?, யானை கிடைக்கவில்லையா? என்பதுதான் இந்த ‘கும்கி 2’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த கும்கி 2 திரைப்படத்தில் அறிமுக கதாநாயகன் மதி நடித்திருக்கிறார்.
அறிமுக கதாநாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் மதி, தோற்றத்தில் கதாநாயகனுக்கான அம்சங்களும் அனைத்தும் நிறைந்தவராக உள்ளார்.
யானையை தொலைத்துவிட்டு மனதளவில் தவிப்பது, தனது யானையை ஆபத்தில் இருந்து காப்பாற்ற துடிப்பது, யானையை பிரிக்க நினைப்பவர்கள் மீது கோபம் கொள்வது என்று பல்வேறு உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தி நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
ஷ்ரிதா ராவ், மற்றும் கதாநாயகனின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆண்ட்ரூஸ், வனத்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ், அரசியல்வாதியின் உதவியாளராக கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆகாஷ், காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹரிஷ் பெராடி என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவருக்கும் கொடுத்த வேலையை இந்த விதமான குறையின்றி மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு மூலம், மலைகளையும், அருவிகளையும் திரைப்பட ரசிகர்கள் கொண்டாடும் வகையில் காட்சிகள் அனைத்தும் சிறப்பான முறையில் திரைப்படம் ஆக்கி இருக்கிறார்
இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் மெலொடி பசிக்க வைக்கிறது.
இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னாவின்
பின்னணி இசை மூலம் காட்சிகளுக்கு ஏற்ப சிறப்பு சேர்த்திருக்கிறார்.
குட்டி யானை சிறுவனுடன் பாசமாக நட்பாக இருப்பது, யானையை வைத்து திரைப்படமாக்கிய விதம், சில வனப்பகுதி காட்சிகள் ஆகியவை ரசிக்கும் வகையில் திரைப்படத்தை இருக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன்.
மொத்தத்தில், ‘கும்கி 2’ திரையரங்குக்கு சென்று ரசிக்கலாம்.











