‘சர்தார் 2’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், யோகி பாபு, அச்சுத் குமார், நிழல்கள் ரவி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- பி.எஸ். மித்ரன்.

ஒளிப்பதிவாளர் :- ஜார்ஜ் சி. வில்லியம்ஸ்.

படத்தொகுப்பாளர் :- விஜய் வேலுக்குட்டி.

இசையமைப்பாளர் :- சாம் சி.எஸ்.

தயாரிப்பு நிறுவனம் :- பிரின்ஸ் பிக்சர்ஸ்.

தயாரிப்பாளர்கள் :- எஸ். லட்சுமணன் குமார், இஷான் சக்சேனா.

மக்கள் தொடர்பு :- சதீஷ் குமார்  (S2 MEDIA)

வெளியீட்டு தேதி :- செப்டம்பர் 10 2026.

ரேட்டிங் :-  3.5/5.

பல ஆண்டுகளாக  தலைமறைவாக இருக்கும் ரா உளவாளி ஒருவரை சிறப்பு குழு ஒன்று தேடிக் கொண்டிருக்கிறது.

தலைமறைவாக இருக்கும் ரா உளவாளி மைசூரில் இருக்கும் வேலை செய்யும் இருப்பதாக தகவல் கிடைக்க சிறப்பு குழு பிடிப்பதற்குள் ரா உளவாளியை பிடித்து மேலதிகாரியிடம் ஒப்படைத்து தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என கதாநாயகன் கார்த்தி முயற்சிக்கிறார்.

ஆனால், கதாநாயகன் கார்த்தி பிடிப்பதற்குள் முன்பாகவே சர்வதேச கூலிப்படை கும்பலால் அந்த, ரா உளவாளியை கொலை செய்யப்படுவதோடு, அவரிடம் இருக்கும் ரகசியம் ஒன்றை கூலிப்படை கும்பல் கைப்பற்ற முயற்சிக்கிறது.

அந்த ரா உளவாளியிடம் இருந்த  ரகசியத்தை பெற்றுக் கொள்ளும்  கதாநாயகன் கார்த்தி, ரா உளவாளி மூலம் தனது தந்தை  (சர்தார்) உயிருடன் இருப்பதையும் தெரிந்து கொள்கிறார்.

சைனாவில் இறந்துவிட்டார் என தகவல் கிடைத்த நிலையில்  தனது தந்தை ரா உளவாளி கூறிய தகவலின் மூலம் உயிருடன் இருக்கும் தந்தை சர்தார் தேடி செல்லும் கதாநாயகன் கார்த்தி, இறந்து போன ரா உளவாளி கொடுத்த ரகசிய பொருளை போலவே மேலும் இரண்டு ரா உளவாளிகள் மூலம் இரண்டு ரகசியங்கள் பாதுகாத்து வைக்கபப்ட்டிருப்பதும், அந்த மூன்றையும் கைப்பற்ற நினைக்கும் சர்வதேச கூலிப்படை தலைவன் வில்லன் எஸ்.ஜே.சூர்யா, அதன் மூலம் இந்த நாட்டையே அழிக்கும் திட்டம் ஒன்றை செயல்படுத்த இருப்பதாக தெரிந்து கொள்கிறார்.

கூலிப்படை தலைவன் வில்லன் எஸ்.ஜே.சூர்யா முன்பாக அந்த ரா உளவாளி கூறிய  ரகசியத்தை கைப்பற்றுவதற்கான, காரணமும் பின்னணியும் என்ன ?

நாட்டை அழிக்க துடிக்கும் கூலிப்படை தலைவன் வில்லன்  எஸ்.ஜே.சூர்யா யார் ?,

கதாநாயகன் கார்த்தி, அந்த இடத்தில் தனது தந்தையை மீண்டும் சந்திக்க தந்தை  கார்த்தி சர்தார் கதாநாயகன் கார்த்தி, இருவரும் இணைந்து நாட்டை அழிக்கும் நாசவேலையை முறியடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள்.

தந்தை கார்த்தி (சர்தார்) கதாநாயகன் கார்த்தி, இருவரும் இணைந்து நாட்டை அழிக்கும் நாசவேலையை முறியடித்தார்களா? முறியடிக்கவில்லையா?  என்பதுதான் இந்த ‘சர்தார் 2’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘சர்தார் 2’  திரைப்படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடித்திருக்கிறார்.

கார்த்தி தந்தை மகன் என இரண்டு கதாபாத்திரத்தில்  நடித்திருக்கும் கார்த்தி, உருவத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் வித்தியாசத்தை காண்பித்து , தனக்கு கொடுக்கப்பட்ட வேலைன்னு வந்துட்டா உயிரை துச்சமாக நினைத்து மண்ணையும் மக்களையும் நாட்டையும் காக்கும் பணியை திறம்பட செய்யும் சூப்பர் உளவாளி என்பதை நிரூபிக்கும் வகையில் ஆக்‌ஷன் காட்சிகளிலும், விமான சாகசங்களில் நிறைந்த காட்சிகளை நம்பும்படி கார்த்தியின் உற்சாகமான நடிப்பு ரசிகர்களை கவரும் வகையில் நடித்திருக்கிறார்.

சர்வதேச கூலிப்படை தலைவன் பிளாக் டேக்கர் என்ற கதாபாத்திரத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, வழக்கமான நடிப்பாக இருந்தாலும், திரைப்படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் மிக்ச் சிறப்பாக  பயணித்திருக்கிறார்.

சிறிய கதாப்பாத்திரம் என்றாலும் ஆக்‌ஷன் காட்சிகளில் மாளவிகா மோகனன்,  அமர்க்களப்படுத்தியிருக்கிறார்

திரைப்படம் முழுவதும் வரும் கதாபாத்திரம் என்றாலும் ஆஷிகா ரங்கநாத்தின் கதாப்பாத்திரம் மனதில் நிற்கவில்லை.

ரஜிஷா விஜயன் கதாபாத்திரம் மிக மிக சிறியது ஒரு சில காட்சியில் மட்டுமே தலைகாட்டி விட்டு செல்கிறார்.

வில்லன் எஸ்.ஜே.சூர்யா சொல்லும் கதையை கேட்டு காட்சிகளில் யோகி பாபு மற்றும் நிழல்கள் ரவி, காட்சிகள் சிரிக்க வைக்கிறது.

ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு மூலம் அனைத்து காட்சிகளை பிரமாண்டமாக திரைப்படமாக்கியிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு மூலம் ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் சாகச காட்சிகள் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்றாலும் அது கொஞ்சம் கூட தெரியாதவாறு காட்சிகளை அருமையான முறையில் மிகச் சிறப்பாக கையாண்டிருக்கிறார்.

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்.-ன் இசை, இந்தப் படத்தின் ஒட்டுமொத்த தரத்தை மேலும் உயர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

குறிப்பாக, தூரைப்படத்தின் கதைக்களத்திற்கும் காட்சிகளின் வேகத்திற்கும் ஏற்றவாறு அவர் அமைத்திருக்கும் பின்னணி இசை, சேசிங் மற்றும் சாகச காட்சிகள், ஹாலிவுட் காட்சிகளை போல் திரையில் நிகழும் சம்பவங்களுக்கு கூடுதல் விறுவிறுப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்துகிறது.

சர்தார் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தை மீண்டும் ஒரு சமூகப் பிரச்சனையை அழுத்தமாக பேசியிருந்தாலும், அதை பிரச்சாரமாக கையாளாமல், ஆக்‌ஷன் மற்றும் சாகசம் நிறைந்த காட்சியாக கொடுத்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை சீட் நுணியில் அமர வைத்திருக்கிறார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன்,

மொத்தத்தில், ‘சர்தார் 2’ –ன ஆக்‌ஷன், உளவு பின்னணி மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் ரசிகர்களை கவரும் ஒரு பரபரப்பான ஆக்‌ஷன் என்டர்டெய்னர்!

CLOSE
CLOSE
error: Content is protected !!