சர்தார் திரை விமர்சனம் ரேட்டிங் :- 4.25 / 5.
நடிகர் நடிகைகள் :- கார்த்தி, ராஷி கண்ணா, ராஜீஷா விஜயன், லைலா, சங்கி பாண்டே, இளவரசு, பாலாஜி சக்திவேல், முத்துலட்சுமி, லொள்ளு சபா சுவாமிநாதன், முனீஸ் காந்த், மாஸ்டர் ரித்விக், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- பி.எஸ். மித்ரன்.
ஒளிப்பதிவு :- ஜார்ஜ் சி வில்லியம்ஸ்.
படத்தொகுப்பு :- ரூபன்.
இசை :- ஜி.வி பிரகாஷ் குமார்.
தயாரிப்பு :- பிரின்ஸ் பிக்சர்ஸ்.
ரேட்டிங் :- 4.25 / 5.
இயக்குனர் பி.எஸ்.மித்ரன் தமிழ் திரைப்பட உலகில் 2018 ஆம் வருடம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற நடிகர் விஷால் மற்றும் அர்ஜுன் நடித்த “இரும்புத்திரை” திரைப்படத்தை இயக்கி தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமாகி இயக்குனராக முத்திரை பதித்தார்.
முதல் திரைப்படத்தில் வங்கி மற்றும் சைபர் கிரைம் பற்றி இயக்கி பாமர மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார் இயக்குனர் பி.எஸ்.மித்ரன்
இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இரண்டாவது திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் நடித்த 2019 ஆம் வருடம் ஹீரோ திரைப்படம் வெளிவந்து விமர்சகர்களிடமிருந்து நேர் மறையான வரவேற்பைப் பெற்றது.
இரண்டாவது திரைப்படத்தில் கல்விக்கான அவசியத்தை திரைப்படத்தில் கூறி இருந்தார்.
இயக்குனர் பி.எஸ்.மித்ரன் மூன்றாவது திரைப்படத்தில் நடிகர் கார்த்தி ராஷி கண்ணா, ராஜீஷா விஜயன் மற்றும் சங்கி பாண்டே நடித்து தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் “சர்தார்”.
இந்த ‘சர்தார்’ திரைப்படத்தில் குடிநீருக்கான அவசியத்தையும் பிளாஸ்டிக் பாட்டில் அடைக்கப்பட்டு விற்பனை செய்து வரும் குடிநீரினால் ஏற்படும் பிரச்சினைகளை இந்த திரைப்படத்தின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குனர் பி எஸ் மித்ரன்.
எதிர்காலத்தில் இப்படியெல்லாம் கூட நடக்கலாம் என்ற கற்பனையை நம்பும்படியாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் பி எஸ் மித்ரன்.
காவல்துறை ஆய்வாளராக கதாநாயகன் கார்த்தி தன்னுடைய பணியை செய்து வருகிறார்.
காவல்துறை ஆய்வாளராக கதாநாயகன் கார்த்தி செய்யும் வேலைகளில் பப்ளிசிட்டியை அதிகம் எதிர்ப்பார்த்து அதனை சிறப்பாக முடித்து வைக்கிறார்.
ராணுவ உளவாளியாக இருக்கும் கதாநாயகன் தந்தை கார்த்தி தேசத்துரோகி என்று முத்திரைக் குத்தப்பட்டு என்ன ஆனார் என்றே தெரியாத நிலையில் இவர் செல்லும் இடங்களில் எல்லாம் தனது தந்தை தேச்த்துரோகி என்று கூற, இவர் இதற்காகவே தனது காவல்துறை ஆய்வாளர் பணியை சிறப்பாக செய்து முடித்து பப்ளிசிட்டியால் நற்பெயர் வாங்க வேண்டும் என நினைக்கிறார்.
இதற்கிடையில் வழக்கறிஞராக வரும் கதாநாயகி ராஷிகண்ணா கதாநாயகன் கார்த்தி சிறுவயதில் இருந்து காதலிக்கிறார்.
அது ஒரு பக்கம் இருக்க குடிநீரை வியாபாரமாக்கி அதனால் ஏற்படும் உடல் நலப் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் தனது மகன் பாதிக்கப்பட்டிருப்பதால் அந்தக் குடிநீர் கம்பெனி எதிர்த்து லைலா எதிர்த்து போராட்டம் நடத்துகிறார்.
அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட லைலா மர்மமான முறையில் கொல்லப்பட்டதை விசாரிக்க ஆரம்பிக்கிறார் கதாநாயகன் கார்த்தி.
அதன் பின்னணியில் பல மர்மமான விஷயங்கள் இருப்பது கதாநாயகன் கார்த்திக்கு தெரிய வருகிறது.
தேசத் துரோகி என முத்திரை குத்தப்பட்ட தனது தந்தை சர்தார் பற்றி ரகசியங்களுக்கும் ஏதோ ஒரு மர்மம் இருப்பதை கதாநாயகன் கார்த்தி கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதுதான் இந்த “சர்தார்” திரைப்படத்தின் மீதிக் கதை.
இந்த “சர்தார்” திரைப்படத்தில் கார்த்தி கதாநாயகனாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார்
இந்திய அரசின் உளவுத் துறையான ரா-வின் உளவாளி “சர்தார்” கதாபாத்திரத்திலும் காவல்துறை ஆய்வாளர் விஜய் பிரகாஷ் கதாபாத்திரத்திலும் என இரண்டு கதாபாத்திரங்களும் கலக்கி இருக்கிறார் கதாநாயகன் கார்த்தி.
கதாநாயகன் கார்த்தி இரண்டு கதாபாத்திரங்களுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார்.
இயக்குனர் சொல்ல வந்ததை இரண்டு கதாபாத்திரங்களில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி கதாநாயகன் கார்த்தி நிரூபித்துள்ளார்.
கதாநாயகன் கார்த்தியின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு சிறந்த திரைப்படமாக “சர்தார்” இடம் பெறும் அளவிற்கு இருக்கிறது.
இந்த “சர்தார்” திரைப்படத்தில் கதாநாயகியாக ராஷிகண்ணா நடித்திருக்கிறார்.
வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் ராஷிகண்ணா அவருடைய பணியை சிறப்பாக செய்துள்ளார்.
தந்தை கார்த்தியின் மனைவியாக வரும் ரஜிஷா விஜயன் அவருக்கு கொடுத்த வேலையை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்.
கதாநாயகிகள் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன். இருவருக்கும் குறைந்த காட்சிகள்தான் வந்து போகும் காட்சிகளாக இல்லாமல், முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் திரைப்படம் உலகிற்கு வரும் லைலா அவரின் பணியை மிகவும் சிறப்பாக செய்து முடித்துள்ளார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கும் தனது மகனின் நிலையை உலகறிய செய்ய வேண்டும் என போராடும் இடங்களில் மிகப்பெரிய பாராட்டை பெறுகிறார்.
லைலா கொஞ்ச நேரமே வந்தாலும் நல்ல விஷயத்திற்காக போராடி தனது உயிரை இழக்கிறார்.
மாஸ்டர் ரித்விக், அவரின் குழந்தை நடிப்பை வெளிபடுத்தி திரைப்படம் பார்க்கும் அனைவரின் பாராட்டை பெறுகிறார்.
மத்திய அரசுக்காக பல திட்டங்களை செயல்படுத்திக் கொடுத்து, பின் கார்ப்பரேட் முதலாளியாக மாறி, சைனாவில் ஏஜெண்டாக செயல்படும் சங்கி பாண்டே வில்லனாக நடிப்பு ஓகே.
கதாநாயகன் கார்த்தியின் வளர்ப்பு தந்தையாக வரும் முனிஷ் காந்த், கதாபாத்திரம் முத்திரை பதித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் கேட்கும் அளவிற்கு இல்லை என்றாலும் பின்னணி இசை திரைப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
திரைப்படத்தில் இடைவெளி இல்லாமல் பின்னணி இசையை வாசித்துத் தள்ளியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார்.
இயக்குனர் காட்சிப்படுத்த நினைத்ததை ஒளிப்பதிவின் மூலம் அழகாக பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ்.
இநத திரைப்படத்தில் ஒளிப்பதிவாளரின் உழைப்பு சிறப்பாக இடம்பெற்றிருக்கிறது
படத்தொகுப்பு ரூபன் கைவண்ண கலையை காண்பித்திருக்கிறார்.
சவுண்ட் மிக்சிங் செய்தவரும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு வசனங்கள் தெளிவாகக் கேட்காத அளவிற்கு மிக்சிங் செய்திருக்கிறார்.
ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயனின் அதிரடி ஆக்சன் மிகமிக அருமை.
கதை மற்றும் திரைக்கதையில் கவனம் செலுத்தி விறுவிறுப்பை கூட்டி திரைப்படம் பார்க்கும் அனைவரின் பாராட்டுக்களையும் பெறுகிறார் இயக்குனர் பி.எஸ். மித்ரன்.
திரைப்படத்தின் திரைக்கதை கூடுதல் பலமாக அமைந்து சுவாரசியப்படுத்துகிறது.
சமூக பிரச்சனையை கையில் எடுத்து கொண்டு அதனை திரைப்பட ரசிகர்களுக்கு கமர்ஷியலாக சொல்ல நினைத்திருக்கிறார்.
ஒரு கமர்சியல் திரைப்படத்திற்கு தேவையான அத்தனை அம்சங்களும் சர்தார் திரைப்படத்தில் இருக்கிறது.
முதல் பாதியில் திரைக்கதையின் மூலம் கட்டப்படும் முடிச்சி திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு இரண்டாம் பாதியில் கவனம் செலுத்த உதவியிருக்கிறது.
மொத்தத்தில் “சர்தார்” திரைப்படம் இந்தியாவின் உண்மையான உளவாளி.











