‘நல்லபடம்’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- டாக்டர். ஏ. ஹரிஷ், தனலட்சுமி, மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா, ரமா, பிரியதர்ஷினி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- பிரபுராம் சி.
ஒளிப்பதிவாளர் :- இனியன் ஜே. ஹாரிஸ்.
படத்தொகுப்பாளர் :- பி.ஆர். பிரகாஷ்.
இசையமைப்பாளர் :- சாகிஷ்ணா சேவியர்.
தயாரிப்பு நிறுவனம் :- ஹரிஷ் சினிமாஸ்.
தயாரிப்பாளர் :- அழகு பாண்டியன்.
மக்கள் தொடர்பு :- சுரேஷ் சந்திரா ( D ONE).
வெளியீட்டு தேதி :- 18 செப்டம்பர் 2026.
ரேட்டிங் :- 1.25/5.
கதாநாயகன் ஹரிஷ் தனது
நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு எந்நேரமும் போதையில் மிதந்து கொண்டிருக்கிறார்.
தினந்தோறும் குடித்துக் கொண்டிருக்கும் குடிகாரர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் ‘மது பிரியர்கள் மறுமலர்ச்சி சங்கம்’ என்ற அமைப்பை கதாநாயகன் ஹரிஷ் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் திடீரென அரசு மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டால், மதுவையே வாழ்க்கையாக நினைத்துக் கொண்டிருக்கும் கதாநாயகன் ஹரிஷ் மற்றும் நண்பர்களின் நிலைமை என்ன ஆனது? என்பதுதான் இந்த ‘நல்லப்படம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்தத் ‘நல்லப்படம்’ திரைப்படத்தில் அறிமுக கதாநாயகனாக டாக்டர். ஏ. ஹரிஷ், நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் எந்த நேரத்திலும் போதையில் மிதந்து கொண்டிருக்கும் கதாபாத்திரமாகவும், காதல் காட்சிகளிலும், ஆக்ஷன் காட்சிகளிலும் தேவையான அளவு நடிப்பை கொடுத்திருந்தாலும் பயிற்சி இல்லாமல் ஒரு கதாபாத்திரத்தை எடுத்துட்டு நடித்திருக்கிறார்.
இந்தத் ‘நல்லப்படம்’ திரைப்படத்தில் அறிமுக கதாநாயகியாக தனலட்சுமி நடித்திருக்கிறார்.
கதாநாயகிகளாக நடித்திருக்கும் தனலட்சுமி குடிகார காதலனை காதலிக்கும் பெண்ணாக, காதலுக்காக போராடும் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார்.
கதாநாயகன் ஹரிஷ் தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரமா, நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கல்கி ராஜா மற்றும் மொட்டை ராஜேந்திரன, பிரியதர்ஷினி தங்களுக்கான கதாபாத்திரங்களை சிறப்பாக கையாண்டிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் இனியன் ஜே. ஹாரிஸ் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்க்கவில்லை.
இசையமைப்பாளர் சாகிஷ்ணா சேவியர் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு எந்த விதத்திலும் கை கொடுக்கவில்லை.
மதுவுக்கு அடிமையான ஒருவனின் வாழ்க்கையையும், மதுவிலக்குக்கு எதிராக அவன் நடத்தும் போராட்டத்தையும் மையமான கதையை குமாரண முறையில் திரைக்கதை அமைத்து அதற்குள் காதல், நகைச்சுவை, ஆக்ஷன் என பொழுதுபோக்கு திரைப்படமாக கொடுக்கவில்லை இயக்குநர் பிரபுராம்.
மொத்தத்தில், ‘நல்லப்படம்’ என தலைப்பு வைத்துவிட்டு மிகப் பெரிய மொக்க திரைப்படமாக கொடுத்திருக்கிறார்கள்.











