‘கொலைச் சேவல்’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- கலையரசன், தீபா பாலு, பாலசரவணன், கஜராஜ், விஜய் சத்யா, ஆதவ் சந்திரன், அகரன் வெங்கட், விஜயலட்சுமி, ஜெயலட்சுமி, ராஜாமணி, தனலட்சுமி, மஞ்சுளா, கயல், மணிமேகலை, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- வி.ஆர். துதிவாணன்.

ஒளிப்பதிவாளர் :- பி.ஜி.முத்தையா.

படத்தொகுப்பாளர் :- அஜய் மனோஜ்.

இசையமைப்பாளர் :- சாந்தன்.

தயாரிப்பு நிறுவனம் :- ஆர்.பி. பிலிம்ஸ்.

தயாரிப்பாளர்கள் :- ஆர்.பி.பாலா – கவுசல்யா பாலா.

மக்கள் தொடர்பு :- நிகில் முருகன்.

ரேட்டிங் :- 3./5.

கதாநாயகன் கலையரசனை காதலித்து பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி கதாநாயகி தீபா பாலு, திருமணம் செய்து கொண்டு தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

அந்த கிராமத்தில் உள்ள பழக்கப்படி காட்டுப்பகுதியில் உள்ள தங்களது குலதெய்வமான நிறைசூலி தெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தால் குழந்தை நல்லபடியாக பிறக்கும் என்பதால், நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் கதாநாயகி தீபா பாலு, தன் தனது கணவர் கதாநாயகன் கலையரசன் மற்றும் குடும்பத்தில் உள்ள சொந்த பந்தங்கள் அனைவரும். காட்டுப்பகுதியில் உள்ள நிறைசூலி கோவிலுக்கு பொங்கல் வைத்து படையல் போடுவதற்காக செல்கிறார்கள். 

காட்டுப்பகுதியில் உள்ள நிறைசூலி குலதெய்வ கோவிலுக்கு பொங்கல் வைத்து படையல் போடுவதற்காக சென்றாலும், கதாநாயகி தீபா பாலு மனதுக்குள் ஒருவிதமான பயம் மற்றும் பதட்டத்துடனே செல்லும் கதாநாயகி தீபா பாலு, எதிர்பாராத விதமாக மிகப்பெரிய அளவில் ஒரு பிரச்சனையை சந்திக்கிறார்கள்.

கதாநாயகி தீபா பாலு மற்றும் கதாநாயகன் கலையரசன் சந்தித்த அந்தப் பெரிய பிரச்சனை என்ன?,

குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு பொங்கல் படையல் வைக்க சென்ற அனைவரும் பொங்கல் படையல் வைத்தார்களா?, வைக்கவில்லையா?, என்பதுதான் இந்த ‘கொலைச்சேவல்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘கொலைச்சேவல்’ திரைப்படத்தில் கதாநாயகனாக கலையரசன் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் கலையரசன், இந்தத் திரைப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பு மற்றும் கடுமையான உழைப்பின் மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்து இருக்கிறார்.

இந்த ‘கொலைச்சேவல்’ திரைப்படத்தில் அறிமுக கதாநாயகியாக தீபா பாலு நடித்திருக்கிறார்.
 
கதாநாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை தீபா பாலு, பார்த்த உடன் பட்டுன்னு பிடித்துப் போகும் முகம் சிரிப்பு மற்றும் கண்களால் மூலம் கதபாத்திரத்திற்கான பொறுத்தமான தேர்வாக இருப்பதோடு, மட்டுமல்லாமல் திரைப்படத்தின் இறுதிக்கட்ட காட்சியில் எதார்த்தமான நடிப்பை கொடுத்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் இதயம் கனக்க செய்யும் அளவிற்கு சிறப்பாக நடிப்பை கொடுத்து கண்கலங்க வைத்து விடுகிறார்.

கதாநாயகன் கலையரசன் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பால சரவணன், நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார்.

கதாநாயகி தீபா பாலு தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கஜாராஜ் வரும் அனைத்து காட்சிகளிலும் வசனம் பேசாத கதாபாத்திரம் என்றாலும், அந்த கதாபாத்திரத்தில் வெறித்தனத்தை தன்னுடைய முகத்திலும், நடிப்பிலும் வெளிக்காட்டியிருக்கிறார்.

கதாநாயகி தீபா பாலுவின் சகோதரர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும். ஆதவ் சந்திரா வெறித்தனமான நடிப்பை கொடுத்து நிறை மாத கர்ப்பிணையாக இருக்கும் கதாநாயகி தீபா பாலுவின் வயிற்றில் இருந்து சிசுவை எடுத்து கொலை செய்யும் காட்சி எப்படியும் கொடூரமானவர்கள் இருக்கிறார்களா என தோன்றும் நிலையில் மிக கொடூரமானவனாக நடித்திருக்கிறார்.

விஜய் சத்யா, அகரன் வெங்கட், விஜலட்சுமி, ஜெயலட்சுமி, ராஜாமணி, தனலட்சுமி, மஞ்சுளா, கயல், மணிமேகலை அனைவரும் மண் சார்ந்த மக்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையாவின் ஒளிப்பதிவு மூலம் கிராமத்து அழகையும், மக்களின் கொடூரமான மனங்களையும் பசுமையையும் எதார்த்தமாக மிகவும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறது.

இசையமைப்பாளர் சாந்தன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே மிகச் சிறப்பான முறையில் பயணித்திருக்கிறார்.

தற்போது சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் ஜாதி வெறியை மற்றும் கொடூரமான செயலை மையக்கருவாக எடுத்துக் கொண்டு, அதை எதார்த்தமான முறையில் சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் வி.ஆர்.துதிவாணன்,

மொத்தத்தில், ‘கொலைச்சேவல்’ வலியும், வேதனையும் வன்முறையின் உச்சமாக இருப்பது சற்று முகம் சுழிக்க வைக்கிறது.

error: Content is protected !!